டாக்டர்கள் ஸ்டிரைக்கிற்கு மேலும் 2 உயிர்கள் பலி
சென்னை:
அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் காரணமாக மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அரசு டாக்டர்கள் நேற்று அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். இதையடுத்து மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகள் பெரும் பாதிப்பை சந்தித்தன. நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்த வேலை நிறுத்தத்தால் 4 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட அயனாவரம் பகுதியைச் சேர்ந்த செல்வமணி என்பவரின் மகன், சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதேபோல, சேலம் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்குவதற்காக காத்திருந்த விமலா என்ற பெண் மயங்கி விழுந்தார். அவருக்குச் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாத காரணத்தால் அந்தப் பெண் பரிதாபமாக இறந்தார்.
டாக்டர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர் என்பது பரிதாபகரமான புள்ளி விவரம்.


