For Daily Alerts
Just In
திருப்பதியில் பஸ் பள்ளத்தில் விழுந்தது: 3 பேர் பலி- 42 பேர் காயம்
திருப்பதி:
திருப்பதி- திருமலை சாலையில் பஸ் உருண்டு 200 அடி பள்ளத்தில் விழுந்ததில் 3 பக்தர்கள் பலியாயினர். மேலும்42 பேர் காயமடைந்தனர். இதில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று காலை இந்த விபத்து நடந்தது.
திருமலையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த அந்த பஸ் மிகக் குறுகலான ஹேர்-பின் வளைவில் சாலையோரசுவரையும் உடைத்துக் கொண்டு மலையில் உருண்டது. சுமார் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தது.
ஆவிசிரி பள்ளம் என்ற இடத்தில் அந்த பஸ் விழுந்தது.
பலியானவர்களில் ஒரு ஆண், ஒரு பெண், ஒரு பெண் குழந்தையாவர். இவர்கள் மூவரும் ஆந்திர மாநிலத்தைச்சேர்ந்தவர்கள். காயமடைந்தவர்கள் மருத்துவமனயில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


