For Daily Alerts
Just In
தா.கி. கொலை வழக்கு: 4 திமுகவினரின் காவல் நீட்டிப்பு
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு திமுகவினரின் நீதிமன்றக் காவல் ஜூலை 9ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் திமுகவைச் சேர்ந்த பி.எம்.மன்னன், எஸ்.ஆர்.கோபி, முபாரக் மந்தி, கராத்தேசிவா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து நான்கு பேரும் மதுரை 6-வது குற்றவியல் நீதிபதி வனிதா முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது,நான்கு பேரின் காவலையும் அடுத்த மாதம் 9ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து நான்கு பேரும் மீண்டும் மதுரை மத்திய சிறைக்குயில் அடைக்கப்பட்டனர்.


