For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோனியாவை சமாதானம் செய்ய டெல்லிக்கு ஓடினார் வாசன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சமீபத்தில் சோனியாவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கிய ஜி.கே. வாசன் பெட்டிப் பாம்பாக அடங்கினார்.சோனியாவை சாமாதானம் செய்ய இன்று டெல்லி விரைந்தார்.

டெல்லி செல்லும் முன் அவர் வெளியிட்ட அறிக்கையில், சோனியாவைத் தலைவராக ஏற்காத யாரையும் ஆதரிக்கமாட்டோம், சோனியாவை மதிக்காத அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று கூறியுள்ளார்.

காங்கிரசில் வாசன் கோஷ்டியை அடக்கிவிட்டு இளங்கோவன் கோஷ்டிக்கு சோனியா முக்கியத்துவம் கொடுத்துவருகிறார். இதனால் சமீபத்தில் காமராஜர் விழா தொடர்பாக ஆலேசனை நடத்த சோனியாவால் அனுப்பப்ட்டமத்தியப் பார்வையாளர்களான கெய்க்வாட், கமல்நாத் ஆகியோரை வாசன் கோஷ்டி புறக்கணித்தது.

அவர்கள் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்திய அதே நேரத்தில் தனது ஆதரவாளர்களுடன்வாசன் வீட்டில் தனியே போட்டிக் கூட்டம் நடத்தினார். இதனால் காமராஜர் விழாவையே ரத்து செய்யவும், தனதுதமிழக பயணத்தையும் ரத்து செய்யவும் சோனியா முடிவு செய்தார்.

தன்னுடன் சமாதானத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த வாசனுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அதிமுகவுடன் வாசன் நெருங்கி வருவதாகவும் சோனியாவுக்கு இளங்கோவன் தரப்பில் இருந்து தகவல்கள்பறந்து கொண்டுள்ளன.

சோனியாவை அவமதித்த வாசனை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் காங்கிரசார்போஸ்டர்களையும் ஒட்டியுள்ளனர்.

இதையடுத்து சோனியாவைச் சந்திக்க வாசன் இன்று டெல்லி விரைந்தார். முன்னதாக அவர் சோனியாவை புகழோபுகழ் என்று புகழ்ந்து அறிக்கையும் வெளியிட்டார். அதன் விவரம்:

அடுத்த பிரதமர் சோனியா தான். அவரைப் பிரதமராக ஏற்க மறுக்கும் அதிமுகவுடன் எக் காரணம் கொண்டும்கூட்டணி வைக்க மாட்டோம். (ஜெயலலிதாவுடன் இவர் ரகசியமாக அரசியல் பேசி வருவதாக தகவல்கள் வருவதுகுறிப்பிடத்தக்கது).

நாட்டின் பிரதமராக இருந்து, அதே நேரத்தில் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அன்னை சோனியா காந்திஉருவாக்குவார்.

ஜெயலிலதாவுடன் ரகசிய உறவு வைத்திருப்பதாக சிலர் புரளியைக் கிளப்பி வருகின்றனர். இவை முழுக்க முழுக்கத்தவறானவை. காங்கிரஸ் கட்சியையே பலவீனப்படுத்துபவை. மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும்ஜெயலலிதாவுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.

காங்கிரசில் கோஷ்டிப் பூசல் ஏதும் இல்லை. கமல்நாத் தலைமையில் நடந்த கூட்டத்தை எனது ஆதரவாளர்கள்புறக்கணிக்கவில்லை. கூட்டத்துக்கு முன் கமல்நாத்தை ஹோட்டலில் சந்தித்து ஒன்றரை மணி நேரம் பேசினோம்.

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்பதையும் அதற்கான காரணத்தையும் அப்போதுகமல்நாத்திடம் தெளிவாக, விரிவாக விளக்கி விட்டோம். இது அனைவருக்கும் தெரியும். மற்றபடி புறக்கணிப்புஎன்ற செய்தி தவறானது.

டெல்லியில் சோனியா காந்தியை சந்திக்கும்போது காமராஜர் நூற்றுவிழா நிறைவு விழாவுக்கு வருமாறு அவரைநான் வற்புறுத்துவேன். மாநில காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் மிகவும் கண்ணியத்துக்குரியவர். அவர்தலைமையில் அனைவரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு அறிக்கையில் வாசன் கூறியுள்ளார்.

தனது அறிக்கையில் சோ.பாவைக் குறிப்பிட்ட வாசன், செயல் தலைவர் இளங்கோவன் பெயரைக்குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சி ஒரு பேரியக்கம்.இவ்வளவு பெரிய கட்சியில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜமான ஒன்று தான் என்றார்.

அதே விமானத்தில் பயணம் செய்த முன்னாள் மத்திய அமைச்சரும் இளங்கோவன் கோஷ்டியைச் சேர்ந்தவருமானபிரபு, செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆலோசனைக் கூட்டத்தை வாசன் புறக்கணித்தது தவறு என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X