For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

20 சீட்கள் கேட்கிறது காங்கிரஸ்: கடும் எரிச்சலில் திமுக

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகளைக் கேட்க தமிழககாங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால், அத்தனை இடங்களைத் தர திமுக தயாராக இல்லை.

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தேசியஅளவில் தொடங்கியுள்ளன.

திமுக அணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய தேசிய முஸ்லீம் லீக்,இந்திய தேசிய லீக், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை, எம்.ஜி.ஆர். கழகம், வீர வன்னியர் பேரவை உள்ளிட்டகட்சிகள் இடம் பெறவுள்ளன. இந்தப் பட்டியலில் மேலும் சில கட்சிகள் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக அணியில் இடம்பெறும் முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில் மேலிடப் பிரதிநிதியாக முன்னாள்நிதியமைச்சர் மன்மோகன் சிங் விரைவில் சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியுடன் முக்கியப்பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

மன்மோகனுடன் நடக்கும் பேச்சுவார்த்தையின்போது தொகுதி உடன்பாடு ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தைஅமையும் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதற்கு வசதியாக எந்தெந்த தொகுதிகள் தேவை என்றபட்டியலை தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கட்சி மேலிடத்திடம் கொடுக்க உள்ளார். அந்தப்பட்டியலுடன் மன்மோகன் சிங் சென்னை வந்து கருணாநிதியுடன் பேசுவார்.

தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் மொத்தம் 40 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இதில், 20 தொகுதிகளைக்கேட்கலாம் என மேலிடத்திடம் வாசன் யோசனை கூறியுள்ளார். சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தகாங்கிரஸ் எம்.பி. மணிசங்கர அய்யர் இது குறித்து கோடிட்டுக் காட்டினார்.

ஆனால், இதை ஏற்க கருணாநிதி மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. பா.ம.கவும் கூட்டணிக்கு வரும் பட்சத்தில்காங்கிரசுக்கு அதிகபட்சமாக 12 இடங்களை மட்டுமே வழங்க முடியும் என தகவல் அனுப்பப்பட்டு விட்டதாகவும்அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய அளவில் அடுத்தும் கூட்டணி அரசே அமையும் என்பதால், குறைந்தபட்சம் தன் வசம் 10 முதல் 15எம்.பிக்களாவது இருக்க வேண்டும் என திமுக கருதுகிறது. இதனால் இடங்களைப் பகிர்ந்து கொள்வதில் திமுககூட்டணிக்குள் கடும் குழப்பங்களும், மோதல்களும் நடக்கலாம் என்று கருதப்படுகிறது.

தமிழகத்தில் சுமார் 15 சதவீத வாக்குகளை காங்கிரஸ் தன் வசம் வைத்திருந்தாலும், கட்சியில் வேலை பார்க்கதொண்டர்களே இல்லை. இதனால் 20 இடம் கொடுத்தால் அதில் போட்டியிடக் கூட காங்கிரசுக்கு சக்தி கிடையாதுஎன்கின்றனர் திமுகவினர். காங்கிரசுக்கு இடங்களையும் கொடுத்துவிட்டு, அவர்களது வெற்றிக்கும் நாங்கள் தான்உழைக்க வேண்டியிருக்கும் என்கின்றனர் திமுக தலைவர்கள்.

திமுகவின் இந்தக் கருத்தை காங்கிரசின் இளங்கோவன் கோஷ்டி ஆதரிக்கிறது. திமுகவிடம் 20 இடங்கள் கேட்கவேண்டும் என்று வாசன் தரப்பினர் மேலிடத்திடம் வலியுறுத்துவதே, கூட்டணியைக் குழப்பும் வேலை தான்என்கிறது இந்த கோஷ்டி.

வாசன் தரப்பினர் அதிமுகவுக்கு ஆதரவானவர்கள் என்பதால், திமுகவுடனான கூட்டணியைக் குலைக்கும்முயற்சியாகவே இதை கருதத் தோன்றுகிறது என்றும் இளங்கோவன் தரப்பினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஆனால் இது இறுதியான கோரிக்கை அல்ல என்று வாசன் தரப்பினர் கூறுகிறார்கள். இது ஒரு ஆலோசனைதான்.கட்சி மேலிடம்தான் இது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும். அவ்வளவுதான் என்று வாசன் தரப்பினர்சமாளிக்கிறர்கள்.

அதிமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க முயற்சித்துக் கொண்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள்ஓரணியில் சேருவதைத் தடுக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியில் சிலர் செயல்படுவதாக திமுகவினர் கவலையுடன்கூறுகிறார்கள்.

சோனியா காந்தியும் கருணாநிதியும் நேரடியாகப் பேசும்போது இந்தப் பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும் என்றுஇரு தரப்பினரும் கருதுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X