கேரள கோவிலுக்கு திடீர் விஷயம் செய்த ஜெ-சசி
கோயம்புத்தூர்:
தேர்தல் பிரச்சாரத்துக்கு பொள்ளாச்சியில் தங்கிய முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் இன்றுஅதிகாலை கேரள மாநிலத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நேற்று பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா நேற்றிரவுபழனியில் தங்கியிருந்து இன்று அந்த ஊரில் பிரச்சாரம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், நேற்று பழனியில் தங்காமல் திடீரென பொள்ளாச்சிக்கே ஜெயலலிதா திரும்பி வந்தார். கூடவேசசிகலாவும் வந்தார்.
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள பங்களாவில் இருவரும் நேற்றிரவு தங்கினர். இந் நிலையில் இன்று காலைகேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள பல்லசேனா என்ற இடத்தில் உள்ள மீன்குளத்தி அம்மன் கோவிலுக்குஜெயலலிதாவும் சசிகலாவும் இன்று அதிகாலை திடீரென சென்றனர்.
அவர்களுக்கு கோவிலில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜையும் நடத்தினார் ஜெயலலிதா.இந்தப் பூஜையை முடித்துக் கொண்டுத் திரும்பும் வழியில் ஆணைமலையில் உள்ள மாசாணி அம்மன் கோவிலுக்குஜெயலலிதாவும் சசிகலாவும் சென்றனர். அங்கும் சிறப்புப் பூஜை நசத்திவிட்டு இருவரும் பொள்ளாச்சிபங்களாவுக்குத் திரும்பினர்.
இன்று முழுவதும் அங்கு ஓய்வில் இருக்கும் ஜெயலலிதா நாளை மீண்டும் பழனியில் பிரச்சாரம் செய்துவிட்டு கரூர்செல்லத் திட்டமிட்டுள்ளார்.
ஆஸ்தான கேரள ஜோதிடரின் பரிந்துரைப்படியே இந்த இரு கோவில்களிலும் ஜெயலலிதா பூஜை நடத்தியதாகத்தெரிகிறது.
ஜெவுக்கு நோட்டீஸ்:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசி பிரச்சாரம் செய்து வரும்ஜெயலலிதாவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து திமுக கூட்டணிக் கட்சிகள் தந்த புகாரையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போலதிமுகவினர் சில்வர் பாத்திரங்கள் தந்து ஓட்டு கேட்பதாக அதிமுக கொடுத்த புகார் மீதும் விசாரணை நடத்த தேர்தல்கமிஷன் முடிவு செய்துள்ளது.


