For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்தில் சிந்து பாடிய ப.சிதம்பரம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வாசனின் ஆதரவாளர்களுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, கமல்நாத்தின்திருவிளையாடலுக்கு அவர் பலியாகி விட்டதாகவே தெரிகிறது.

அதே நேரத்தில் மிக டீசண்டாக அரசியல் செய்வதாகக் கூறிக் கொண்டு தனிக் கட்சி நடத்தி வரும் ப.சிதம்பரம்,டெல்லியில் பேச வேண்டிய இடத்தில் பேசி, அடுத்த கட்சியான காங்கிரசில் தனது மகனுக்கு சீட் வாங்கிசாதித்துள்ளார். இது தான் காங்கிரசாரை மிகவும் நோகடித்துள்ளது.

அப்படியானால், தமிழகத்தில் உள்ள மற்ற கட்சியினருக்கும் காங்கிரசில் போட்டியிட இடம் ஒதுக்குவீர்களா எனகமல்நாத்திடம் முகத்தில் அடித்தார்போலக் கேட்டுவிட்டு டெல்லி கூட்டத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்வாசன்.

மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த பிறகு வாசனின்ஆதரவாளரான சோ.பாலகிருஷ்ணன் தலைவராக்கப்பட்டார். அதுவரை தலைவராக இருந்து கட்சியைபலப்படுத்திய பெருமையைப் பெற்ற இளங்கோவன் செயல் தலைவரானார்.

இதையடுத்து கட்சியில் வாசன் கோஷ்டியால் இளங்கோவன் ஒதுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து வாசனைக்கவிழ்க்கும் வேலையைத் தொடங்கினார் இளங்கோவன். இருப்பினும் மற்ற கோஷ்டித் தலைவர்களைப் போலஅப்பட்டமாக எதையும் அவர் செய்வதில்லை. எங்கே அடித்தால் வலிக்குமோ அங்கே அடிக்க ஆரம்பித்தார்.

இவர்களது கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை எட்டவே சோ.பா, இளங்கோவன் இருவரையும் தூக்கி விட்டுவாசனையே தலைவராகப் போட்டது மேலிடம்.

ஆனால், தமிழக காங்கிரஸ் பார்வையாளரான கமல்நாத்தை தன் கைக்குள் போட்டுக் கொண்டு வாசன்கோஷ்டியின் தூக்கத்தை தொடர்ந்து கெடுத்தார் இளங்கோவன்.

தமிழக காங்கிரஸ் விவகாரங்கள் குறித்து தலைவர் என்ற முறையில் ஜி.கே.வாசனிடம் எந்த ஆலோசனையையும்கமல்நாத் கேட்பதில்லை. மாறாக, அவராகவே சில முடிவுகளை எடுத்து அதை நிறைவேற்றுமாறு வாசனிடம்கூறுவார் அல்லது இளங்கோவனிடம் ஆலோசனை கேட்பார் என்கின்றனர் தொண்டர்கள்.

இதனால் அதிருப்தியடைந்த வாசன், டெல்லி சென்று கட்சி மேலிடத்திலேயே இது குறித்துப் புகார்கள் கூறியுள்ளார்.இருப்பினும் நிவாரணம் கிடைக்கவில்லை. காரணம், சோனியாவிடம் கமல்நாத்துக்கு உள்ள செல்வாக்கு தான்.

இளங்கோவன் ஒரு பக்கம் தலைவலி தர இன்னொரு பக்கம் கட்சிக்கு வெளியே இருந்து கொண்டு ப.சிதம்பரம்நடத்திய நாடகங்கள் வாசனை மேலும் எரிச்சலாக்கின. சிவகங்கை சீட் கேட்டு தமிழக காங்கிரசாரிடம் பேசாமல்,நேரடியாக டெல்லிக்குச் சென்று பேசினார்.

இதையடுத்து அவரது கட்சியை நம்முடன் இணைத்தால் அவருக்கு சீட் தருவதில் எனக்கு ஆட்சேபணை இல்லைஎன்று சோனியாவிடம் வாசன் கூறினார். ஆனால், இதற்கு சிதம்பரம் முன் வரவில்லை.

வாசன் கோஷ்டி-இளங்கோவன் கோஷ்டி என இரு முக்கிய கோஷ்டிகள் சண்டையிட்டு நாறிக் கொண்டிருக்க,சைக்கிள் கேப்பில் சந்தில் புகுந்த சிதம்பரம், தனக்கு (தனது மகன் கார்த்திக்குக்கு) சிவகங்கையை தட்டிக் கொண்டுவந்துள்ளார்.

முக்கிய எதிரி வாசன் தான் என்பதால் இதை இளங்கோவன் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அடுத்த கட்சியைச்சேர்ந்த சிதம்பரத்துக்கு சீட் கொடுப்பதை ஏற்க தொண்டர்கள் தயாராக இல்லாததால் அதை பிரஸ்டிஜ் விஷயமாகஎடுத்துக் கொண்டார் வாசன்.

சிதம்பரம் விஷயம் ஒரு பக்கம் இருக்க, பழனி தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.காந்தி,கட்சியில் உறுப்பினராகக் கூட இல்லாதவர் என்கிகிறார்கள். கபில் சிபலின் பலத்த பரிந்துரை காரணமாகவேஅவருக்கு சீட் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதேபோல, திருநெல்வேலிக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத வசந்த் அண்ட் கோ உரிமையாளர்எச்.வசந்தகுமாருக்கு சீட் கொடுத்ததும் வாசன் தரப்பினரை கடுப்பாக்கி விட்டது. வசந்தகுமார் சென்னை மேயர்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்.

ராசிபுரத்தில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள ஜெயக்குமார் என்பவருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இவரும்வாசன் எதிர்ப்பாளர்தான். எம்.எல்.ஏக்களுக்கு எம்.பி தேர்தலில் சீட் கொடுக்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டுவந்த நிலையில் ஜெயக்குமாருக்கு மட்டும் எப்படி சீட் கொடுக்கலாம் என்று வாசன் தரப்பினர் கோபமாககேட்கின்றனர்.

வாசனின் கோபத்தை தணித்துவிட்டு இதே வேட்பாளர்களை சோனியா அறிவிப்பாரா அல்லது அவரதுஆட்களுக்கு சீட் கொடுத்து கமல்நாத்-இளங்கோவன் தரப்பை அடக்குவாரா என்பதை பொறுத்திருந்து தான்பார்க்க வேண்டும்.

என்னமோ பண்ணிக்குங்க.. சிவகங்கை சீட்ல கை வச்சுற வேணாம் என்று டெல்லியில் மீண்டும் தனது சொந்தவேலையை ஆரம்பித்துள்ளார் சிதம்பரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X