For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருத்துக் கணிப்புகள் பொய் என்கிறார் ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து என்.டி.டி.வி, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏ.சி.நீல்சன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு விவரங்கள்உள்நோக்கம் கொண்டவை என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இந்த மூன்று நிறுவனங்களும் நடத்திய கருத்துக் கணிப்பில் தேசிய அளவில் பா.ஜ.க. வெல்லும்,ஆனால், தமிழகத்தில் அதிமுக-பா.ஜ.க. கூட்டணி பெரும் தோல்வி அடையும் என்று தெரியவந்தது.

மேலும் மக்களிடம் வெறும் 20 மார்க் வாங்கி நாட்டிலேயே மிக மோசமான முதல்வர் என்றபெருமையை ஜெயலலிதா பெற்றுள்ள விவரத்தையும் கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தியது.

இந் நிலையில் கருத்துக் கணிப்பைக் கண்டித்து ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கை விவரம்:

என்.டி.டி.வி, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏ.சி. நீல்சன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளன. அவை உள்நோக்கத்துடன் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளகணிப்புகளாகும்.

நாட்டின் வேறு பகுதிகள் குறித்து வெளியான கணிப்பு குறித்து நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை.ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்த வரை அதிமுக-திமுகவுக்கு சொற்ப இடங்ளே கிடைக்கும்என்றும், திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்றும் அபத்தமான கணிப்பைவெளியிட்டுள்ளார்கள்.

வழக்கமாகவே கருத்துக் கணிப்பாளர்கள் எண்ணிக்கை விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள். நமதுஉண்மையான எஜமானர்களான மக்களுடன் நேரடியாக எப்போதும் தொடர்பு வைத்துள்ள நான்இந்த யூகக் கணக்குகள் குறித்து கவலைப்படவில்லை.

வாக்காளர்களைக் கவர எனக்கு யூகங்களை வெளியிடும் இடைத் தரகர்களின் உதவி தேவையில்லை.1996ம் ஆண்டு ஒன்றைத் தவிர மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் மக்களிடம் நான் வாக்குகேட்டபோதெல்லாம் என் மீது நம்பிக்கை வைத்து மாபெரும் வெற்றியை அதிமுகவுக்குத்தந்திருக்கிறார்கள்.

அந்த ஒவ்வொரு தேர்தல்களிலும் எனக்குத் தோல்வி தான் ஏற்படும் என வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்த்துப் போயின. நான் வென்று சரித்திரம் படைத்தேன.

இந்தக் கருத்துக் கணிப்பாளர்கள் புள்ளி விவரக் கடலில் மிதந்து அதிமுகவுக்கு ஆதரவானஅலையைப் பார்க்கத் தவறிவிட்டனர். இவர்களின் நம்பகத்தன்மை தமிழகத்தைப் பொறுத்தவரைஒரு நாள் கிரிக்கெட் முடிவை கணிப்பதில் உள்ள நம்பகத்தன்மையைப் போன்று ஆகிவிட்டது.

சொற்பான மாதிரிகளை வைத்துக் கொண்டு போலித்தனமான புலமையின் அடிப்படையில்செயல்படும் இவர்களை நம்புவதற்குப் பதில் நாணயத்தை சுண்டிவிட்டு பூவா, தலையாபார்த்துவிடலாம்.

பத்திரிக்கைகள், பருவ இதழ்களுக்கு கருத்துக் கணிப்பு ஒரு பிடித்தமான விளையாட்டு. நம்பத்தகாதகணக்கெடுப்பு முறைகளை வைத்து வகுப்பறையில் மாணவர்களை தரப்படுவது மாதிரிமுதல்வர்களை தரப்படுத்துகிறார்கள்.

இந்தியா டுடே கடந்த பிப்ரவரியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலொட்டுக்கு முதலிடம் தந்தது.ஆனால், அடுத்து நடந்த தேர்தலில் அவர் தோற்றார்.

ஆங்கில பத்திரிக்கைகள், கட்சி சார்புள்ள தமிழ் பத்திரிக்கைகள் வெளியிடும் கணிப்பு மக்களின்உண்மையான மன நிலையை பிரதிபலிக்காது. இந்த முறையும் அவர்களது கணிப்பு பொய்க்கும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X