• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலித்களுக்கு 19 சத ஒதுக்கீடு: சிபிஎம் கோரிக்கை

By Staff
|

சென்னை:

தலித்களுக்கான இட ஒதுக்கீட்டை 18 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்த்த மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இக் கட்சியின் தமிழ் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. டி.கே. ரெங்கராஜன்தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் தலைமைக் குழு உறுப்பினர் பி.ராமச்சந்திரன், மாநிலச்செயலாளர் என்.வரதராஜன், மத்தியக் குழு உறுப்பினர்தளான சங்கரய்யா, பாப்பா உமாநாத்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

சமீபத்தில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர்ஜெயலலிதா, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீராக இருப்பதாகவும், மக்கள் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் சுபிட்சமாக வாழ்வதாகவும் பேசியிருக்கிறார்.

வறட்சியையும் வெற்றிகரமாக சமாளித்துவிட்டதாகவும் பேசியிருக்கிறார்.

ஆனால், தமிழகத்தில் பரவலாக கொலை, கொள்ளை, வழிப்பறி, வீடு புகுந்து திருட்டு போன்றசம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கள்ளச் சாராயம் காய்ச்சும் சமூக விரோதிகள் மீது எந்தநடவடிக்கையும் இல்லை.

கல்வி இயக்குனரை சந்திக்கப் போன மாணவர்களை போலீசார் காட்டுமிராண்டித்தனமாகத்தாக்கியுள்ளனர். நிலைமை இப்படி இருக்க முதல்வர் ஜெயலலிதா பேசியிருப்பது முழுக்க முழுக்கஉண்மைக்குப் புறம்பான பேச்சு.

ஒரு கோடி மக்கள் வசிக்கும் காவிரிப் பாசனப் பகுதியில் 4வது ஆண்டாக வறட்சிதாண்டவமாடுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் ஏதும்கிடைக்கவில்லை. அவர்களுக்கு கடன் ரத்து, புதிய கடன்களை வழங்க வேண்டும் என்பதைவலியுறுத்தி வரும் செப்டம்பர் 27ல் விவசாயத் தொழிலாளர்களைத் திரட்டி மறியல் போராட்டம்நடத்தவுள்ளோம்.

தமிழகத்தில் தலித் மக்களின் எண்ணிக்கை 19 சதவீதம் என 2001ம் ஆண்டு கணக்கெடுப்புதெரிவிக்கிறது. இதனால் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 18 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாகஉயர்த்த மத்திய, மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேட்டுக் கொள்கிறது.

வழக்கறிஞர்கள் போராட்டத்தால் நீதிமன்றப் பணிகள் ஸ்தம்பித்து பொது மக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சனையை சுமூகமாகத் தீர்க்க உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றதலைமை நீதிபதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்சியின் 18வது அகில இந்திய மாநாடு அடுத்த ஆண்டு ஏப்ரலில் டெல்லியில் நடக்கிறது.இதையொட்டி அனைத்து மட்டக் குழுக்களின் ஸ்தாபன மாநாடுகள் வரும் அக்கோடபர் முதல்நடக்கவுள்ளன.

கட்சியின் மாநில மாநாடு நாகர்கோவிலில் வரும் 2005ம் ஆண்டில் நடக்கும் என்று தீர்மானத்தில்கூறப்பட்டுள்ளது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X