For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்னொரு இந்திய வீராங்கனையும் சிக்கினார்

By Super
Google Oneindia Tamil News

ஏதென்ஸ்:

ஊக்க மருந்து உட்கொண்டதாக மேலும் ஒரு இந்திய பளு தூக்கும் வீராங்கனை போட்டியிலிருந்துநீக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ரத்தோர் வெள்ளிப் பதக்கம் வென்ற சந்தோஷத்தை, பளு தூக்கும் வீராங்கனைபிரதிமா குமாரி ஊக்க மருந்து உட்கொண்டார் என்று செய்தி மழுங்கடித்துவிட்டது. இவரைத் தவிர இன்னொருஇந்திய பளுதூக்கும் வீராங்கனையான சானுவும் ஊக்க மருந்து உட்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே தன் மீதான குற்றச்சாட்டை பிரதிமா மறுத்துள்ளார். இதில் தனது பயிற்சியாளர்களின் சதி இருக்கக்கூடும் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது:

நான் ஒருபோதும் ஊக்க மருந்தை உபயோகித்ததில்லை. ஏதென்ஸ் நகருக்குக் கிளம்பும் முன்பு இந்தியாவிலும்,பெலாரசிலும் நடந்த ஊக்க மருந்து பரிசோதனையில் நான் தேர்வானேன். பெலராஸில் முதுகு வலி ஏற்பட்டபோது பயிற்சியாளர்கள் பால்சிங் சந்து மற்றும் லியோனிட் டர்னென்கோ எனக்கு முதுகுத் தண்டில் ஒரு ஊசிபோட்டனர்.

அந்த ஊசி போட்டதில் இருந்து எனக்குக் கடுமையான வலி உண்டாகியது. கர்ணம் மல்லேஸ்வரியும் நானும் ஒரேபிரிவில் பங்கேற்றோம். அதில் மல்லேஸ்வரிக்கு ஆதராவகவும் என்னை மட்டம் தட்டவும் பயிற்சியாளர்கள்எனக்கு ஊசி மூலம் ஊக்க மருந்து செலுத்தியிருக்கலாம் என்று நினைக்கிறேன் என்றார்.

அவரைப் போலவே மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனை சானு என்பவரும் ஊக்க மருந்துபயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் 53 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொள்ளவிருந்தார்.

இந்திய வீராங்கனைகள் இருவர் ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கியிருப்பது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் தத்திடம் கருத்து கேட்டபோது, ஊக்க மருந்து உட்கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார்.

டென்னிஸில் தோல்வி:

ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் தங்கம் வெல்வார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டஇந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடிஅரையிறுதியில் தோல்வி அடைந்தது. இருப்பினும்வெண்கலம் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது.

அரையிறுதி போட்டியில் பயஸ், பூபதி ஜோடி, ஜெர்மனியின் நிக்கோலஸ் கெய்பர், ரெய்னர் ஷட்லர் ஜோடியைஎதிர்த்து விளையாடியது. முன்னணி வீரர்களையே தோற்கடித்த இந்திய வீரர்கள் 2-6, 3-6 என்ற நேர் செட்களில்ஜெர்மனியிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர்.

இதனால் டென்னிசில் தங்கம் வெல்லும் வாய்ப்பு தகர்ந்தது. ஆனாலும் வெண்கலப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்புஇந்திய வீரர்களுக்கு உள்ளது.

ஹாக்கியிலும் தோல்வி:

டென்னிஸ் தோல்வியை அடுத்து, ஹாக்கியிலும் இந்தியா தோல்வியைத் தழுவியது.

ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் 8 முறை தங்கம் வென்ற இந்தியா, இம்முறை அரையிறுதிக்குத் தகுதி பெறவேபோராடி வருகிறது. ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் இந்தியா 3-4 என்ற கோல் கணக்கில்தோல்வியடைந்தது.

இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதே கடினமாகி உள்ளது.

பதக்கப் பட்டியல்: டாப் 10

1. அமெரிக்கா 14 தங்கம்- 11 வெள்ளி- 10 வெண்கலம்

2. சீனா 14- 9- 6

3. ஜப்பான் 9- 4- 2

4. ஆஸ்திரேலியா 7- 5- 7

5. உக்ரைன் 5- 1- 1

6. இத்தாலி 4- 5- 3

7. பிரான்ஸ் 4- 3- 4

8. ஜெர்மனி 4- 2- 7

9. ரஷ்யா 3- 8- 10

10. துருக்கி 3- 0- 1

இந்தியா ஒரு வெள்ளியுடன் பதக்கப் பட்டியலில் 31வது இடத்தில் உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X