• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான் காமப் பிசாசா?: ஜெலட்சுமி ஆத்திரம்

By Staff
|
Jayalakshmiநக்கீரன் இதழுக்கு ஜெயலட்சுமி தந்துள்ள சிறப்புப் பேட்டி விவரம்:

இன்னைக்கு பத்திரிக்கைகள் செக்ஸ் வெறி பிடிச்சவளா, அதிகாரிகளையெல்லாம் சதிவலையில் வீழ்த்தியசாகசக்காரியா, இரக்கமே இல்லாத காமப் பிசாசா, செக்ஸ் பாமா என்னை சித்தரிச்சிக்கிட்டு இருக்கு.

நான் ஆண்களை வேட்டையாடியவள் இல்லை. தொடர்ந்து அதிகார வர்க்க ஆண்களால் வேட்டையாடப்பட்டவள்.அவர்களால்தான் இப்ப நடுத்தெருவில் நிற்கிறேன். என் வாழ்வில் அரங்கேறிய இருட்டு நாடகங்களில் இருந்து சிலகாட்சிகளை மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன்.

19 வயசில் எனக்குக் கல்யாணம். ஜவுளி மில்லில் உத்தியோகத்தில் இருந்த கேசவன்தான் மாப்பிள்ளை. எங்கதிருமண வாழ்க்கை சோபிக்கவில்லை. புரிஞ்சிக்காத தாம்பத்தியம். வருஷம் ஒடுச்சி. அபிநயா, கோகுல்னு இரண்டுகுழந்தைகள். நான் மனசில் கட்டி வைச்ச வாழ்க்கைக் கனவு வசப்படலை. அவருக்கு பற்றாக்குறை சம்பளம்.

மனசு பேதலிக்க ஆரம்பிச்சது. அந்தச் சமயத்தில் கெமிக்கல் பேக்டரியில் வேலை பார்த்த செல்வராஜ்பழக்கமானார். சிரிச்சி சிரிச்சி பேசியே வசியம் செஞ்சார். இது தெரிஞ்சதும் வீட்டில் பிரச்சினை வெடிச்சுது. 92ல்ஆன கல்யாணம் 97ல் விவாகரத்து ஆனது.

அப்புறம் செல்வராஜோட தனிக்குடித்தனம். அப்பவும் சம்பாத்தியம் எதிர்பார்த்த மாதிரி இல்லை. அவரோடும்பிரச்சினை. ரோஷமா வீட்டை விட்டு குழந்தைகளோடு கிளம்பினேன். பிறகு விதி என்னை எங்கெங்கோஅழைச்சிட்டுப் போக ஆரம்பிச்சிடிச்சு.

Jayalakshmiசங்கரன் கோயிலுக்கு வந்தேன். அந்த சமயத்தில் ஆம்வே என்கிற மல்டிலெவல் மார்க்கெட்டிங் நிறுவனம்(எம்.எல்.எம்) பற்றி தெரிஞ்சுக்கிட்டேன். இதில் இறங்கினா வசதி மல்டிலெவல்ல பெருகும்னு அதில் இறங்கினேன்.ஆனா நான் மல்டிலெவல்ல சந்திச்சது எல்லாம் துச்சாதனர்களைத்தான்.

நான் எம்.எல்.எம். பற்றி விளக்கிச் சொல்லும்போது, பல ஆண்களோட கண்ணு என் மாராப்புக்குள்ளும்,இடையிலும்தான் மேயும். சில பேர் எதேச்சையா தொரட மாதிரி வேணுமனே தொடுவாங்க. வேலி இல்லாதோட்டம் தானேங்கிற இளக்காரம். இந்த சமயத்தில் நெல்லை டி.எஸ்.பி. ஆக இருந்த ராஜசேகரனையும், ஆம்வேசம்பந்தமாக பார்க்கப் போனேன். நல்லா பேசினார். நட்பு வளர்ந்தது.

தனக்குக் கீழ் உள்ள போலீஸ்காரங்களை எல்லாம் மெம்பராக வைச்சார். ஒரு கட்டத்தில் கல்யாணம் பண்ணிக்கஆசைப்படுவதாக சொன்னார். சரி நமக்கு ஒரு வேலி கிடைச்சிடுச்சின்னு ஒத்துக்கிட்டேன். 200ல் போலீஸ்ஜீப்லேயே திருச்செந்தூருக்கு அழைச்சிட்டுப் போய் தாலி கட்டினார். இதமான வாழ்க்கை தொடங்குதுன்னுநினைச்சேன்.

ஆனா அந்த டி.எஸ்.பி. தனியா வீடு பார்த்த பிறகு தன்னோட வக்கிரங்களை இரவுகளில் காட்ட ஆரம்பித்தார்.இன்பமா கழியவேண்டிய இரவுகள் வேதனைகளோட கழிய ஆரம்பிச்சது.

டி.எஸ்.பி. மனைவிங்கறதால் பலபேர் டிரான்ஸ்பர், புரமோசன் என்று வர ஆரம்பித்தார்கள். பணமும் கொடுத்தாங்க.அதையெல்லாம் வாங்கிட்ட டி.எஸ்.பி. சில பேருக்கு காரியத்தை செஞ்சித் தரலை. அவங்க என்னை நெருக்கஆரம்பிச்சிட்டாங்க. அவங்களுக்கெல்லாம் திருப்பி செட்டில் பண்ண 4 லட்சம் தேவைப்பட்டது. எங்களுக்குள்பிரச்சினை.

மிரட்ட ஆரம்பிச்சார். உடுமலைப்பேட்டைக்கு வந்த ரூரல் எஸ்.பி.சொக்கலிங்கத்தைப் பார்த்து புகார் கொடுத்தேன்.உதவிக்காகப் போன என்னை தனக்கு உதவியா செயல்பட வச்சிட்டார். அவரும் நேரா பெட்ரூம்விஷயத்துக்குத்தான் வந்தார். மறுக்க முடியாதபடி என்னை கட்டிலில் வீழ்த்தினார்.

Jayalakshmiஎன்னை மகிழ்ச்சிப்படுத்த 100க்கும் மேற்பட்ட காக்கிச் சட்டைகளை எம்.எல்.எம். பிஸினசில் மெம்பராக்கினார்.தன்னோட நிறுத்திக்காம தன் நண்பர்களுக்கும் என்னை விருந்தாக்கினார். அவருக்குத் தேவைப்படும் பணத்துக்காகதொழிலதிபர்களுக்கும் என்னைத் தர வேண்டியிருந்தது. ஒரு கொலை வழக்குல அவர் சிக்க, அதிலிருந்து தன்னைக்காத்துக்க பல பேருக்கு என்னை சதைப் பிண்டமா விருந்தாக்கினார்.

சொக்கலிங்கம் மூலம் திண்டுக்கல் வரை போய் எம்.எல்.எம். பிஸினஸ் செய்தேன். அந்தச் சமயத்தில்தான்சமயநல்லூர் டி.எஸ்.பி. கனகராஜ் அறிமுகமானார். அவரும் என்கிட்ட எதிர்பார்த்தது இந்த பாழாய்ப்போனஉடம்புதான். அவர் 50க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்களை எம்.எல்.எம்.மில் சேர்த்து விட்டு அதுக்குப் பதிலாக50க்கும் மேற்பட்ட தடவை டேஸ்ட் பார்த்துட்டார். அதோடு பலருக்கும் என்னை விருந்தாக்கி வசூல்ல கொழிச்சார்.

சென்னை கோட்டையில் உள்ள பலருக்கும் நான் கம்பெனி கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளினார்.

இவர் மூலம்தான் இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, இளங்கோவன், எஸ்.ஐகள் ஷாஜகான், உதயசூரியன் போன்றகாக்கிச் சட்டைகளும் பழக்கம். எஸ்.ஐ. ஷாஜகான் இருக்கிறாரே அவரைப் பொறுத்தவரை என்னை பயன்படுத்திக்கிட்டாலும் பதற வைக்காம பக்குவமா பயன்படுத்திக்கிட்டவர். மத்தவங்க அப்படியில்லை. அறைக்குள்ளவந்துட்டா ஓநாய்தான்.

கரூர்ல மதுவிலக்கு இன்ஸ்பெக்டரா இருந்த சுந்தரவடிவேலு பெரிய துரோகத்தைச் செய்தார். பல போலீஸ்அதிகாரிகள் என்மேல் நம்பிக்கை வச்சி என் மூலம் பணத்தை வட்டிக்கு விட்டுக்கிட்டிருந்தாங்க. அப்ப போலீஸ்அதிகாரிகள் கிட்ட இருந்து நான் வாங்கிய 10 லட்ச ரூபாயை சுந்தரவடிவேலு திருப்பித் தராம ஏமாத்தினார்.

இங்கதான் பிரச்சினை ஆரம்பிச்சது. அப்ப ஒதுங்க ஒரு முதுகு வேணுமேன்னு நினைச்சப்ப திருநகர் இன்ஸ்பெக்டர்மலைச்சாமி என்னைப் பார்த்து பெருமூச்சு விட்டார். வெப்ப மூச்சிலேயே அவர் எரிஞ்சி சாம்பலாயிடக்கூடாதேன்னு ஒரு தரம் அவருக்கும் உடன்பட்டேன். அவர் வற்புறுத்தலுக்கு அவர் கட்டிய தாலியைக்கட்டிக்கிட்டேன்.

Jayalakshmiஅப்பதான் இளங்கோவன் என்னைப் பார்த்தார். எந்த உதவினாலும் கேளுங்கன்னார். ஒரு நாலு லட்ச ரூபாகொடுங்க. ஸ்டேஷனரி ஸ்டோர் வைக்கப் போறேன்னேன். அந்த மனுஷன் என்னடான்னு நிஜமாவே 4 லட்சத்தைத்தூக்கிக் கொடுத்துட்டார்.

இன்ஸ்பெக்டர் இளங்கோவன் எனக்கு மந்திரம் ஓதினார். ஒரே ஒரு தடவை, ஒரே ஒரு தடவை, ஒரு நிமிஷமாவதுஉன்னோட வாழணும்னு கண்ணீர் விட்டார். சரின்னு அவருக்கும் விருந்தானேன். காணாததைக் கண்டதுபோலகிறங்கிப்போன அந்த மனுஷன், ஒரு தடவைன்னு கேட்டதை மறந்துட்டு என்னோடவே இரு. கல்யாணம்பண்ணிக்கிறேன. உன்னை மறக்க முடியாதுன்னு அடம்பிடிச்சார். ஆனா, நான் ஒத்துக்கலை.

இதில் கடுப்பான அவர் கொடுத்த பணத்தை கேட்டு டார்ச்சர் தந்தார். என்னால் அதைத் திருப்பித் தர முடியல.கையில காசில்லை. அதுக்குப் பிறகு தான் என்னை அவரும் உறவினர்களும் சேர்ந்து காரில் கடத்தினாங்க. மும்பைவிபச்சார விடுதியில விக்கிறதா சொன்னாங்க.

மும்பைக்கு போன கந்தல் பண்ணிவிடுவார்கள் என்பதால் இளங்கோவனிடம் சரண்டர் ஆகிற மாதிரி நடிச்சேன்.திருச்சிக்குக் கூட்டிட்டு போங்க, பணம் தர்றேன்னு சொன்னேன். அங்கே கூட்டிட்டுப் போனப்ப ஹோட்டல் இருந்துதப்பிச்சு வேலூர்ல இருக்கிற எனக்குப் பழக்கமான இன்ஸ்பெக்டர் சமுத்திரக் கனி மூலமாக ஹோட்டல் மவுண்ட்பாரடைஸ்ல பதுங்கினேன்.

என்னை கோட்டை விட்ட இளங்கோவன் என் அம்மா, குழந்தைகள், தாயாரை கடத்திப் போய் டார்ச்சர் செய்தது.இதையடுத்துத் தான் என் தந்தை நீதிமன்றத்தில் புகார் தர என்னை போலீசார் கைது செய்தார்கள். எல்லாவிவரங்களும் வெளியில் வந்துவிட்டன.

எனது தந்தை அழகிரிசாமி கண்ணியமான ஆசிரியர், எனது தாயார் திருவேங்கடத்தம்மாள், வெளி உலகமேதெரியாத ஜீவன். அவங்க வயித்தில இப்படி ஒரு பெண்ணா நான் பிறந்துட்டேன்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

சென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
வருடம்
வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
2014
எஸ்.ஆர் விஜயகுமார் அஇஅதிமுக வென்றவர் 3,33,296 42% 45,841
தயாநிதி மாறன் திமுக தோற்றவர் 2,87,455 36% 0
2009
தயாநிதி மாறன் திமுக வென்றவர் 2,85,783 47% 33,454
முகமது அலி ஜின்னா எஸ்.எம்.கெ அஇஅதிமுக தோற்றவர் 2,52,329 41% 0

 
 
 

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more