For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்து முன்னணிக்கு வைகோ கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தைத் தாக்கிய இந்து முன்னணி அமைப்பினருக்கு மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூரில் விநாயகர் சிலை உடைக்கப்பட்டதாகக் கூறி இந்து முன்னணியினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கொடிக் கம்பங்கள் வெட்டி சாய்த்துள்ளனர். அலுவலகங்களை தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.

அதோடு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கட் அவுட்டை அவமானப்படுத்தியுள்ளனர். இதுபோன்றசம்பவங்களால் திருப்பூர் பொதுமக்களிடையே பதற்றமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதவெறியைத் தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கும் இந்து முன்னணியினரை கடுமையாகக்கண்டிக்கிறேன்.

இத்தகைய நடவடிக்கைகளை அடக்கவும், பொதுமக்களின் பீதியைப் போக்கவும் போலீஸார் நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்து முன்னணியின் சத்யாகிரக போர்:

இதற்கிடையே சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் சத்யாகிரக ஊர்வலம் நடத்தப்போவதாக இந்து முன்னணிதலைவர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

ஐஸ் ஹவுஸ் மசூதி ஏதோ பாதுகாக்கப்பட்ட பகுதி போல் அங்கு ஊர்வலம் செல்ல அனுமதி மறுக்கின்றனர். அந்தஇடத்தில் 100க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள் உள்ளன. அங்கு மசூதியைக் கட்ட அனுமதித்தது இந்துபெரியவர்களின் பெருந்தன்மையாகும்.

திருவல்லிக்கேணியில் ஊர்வலத்திற்கு அனுமதிக்காதது முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு ஊக்கம் அளித்ததுபோலாகிவிடும். எனவே திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலைக் காக்கும்பொருட்டு இன்று மாலை சத்யாகிரகஊர்வலம் நடத்தவிருக்கிறேன். விநாயகர் சிலையை கையில் ஏந்தியவாறு திருவல்லிக்கேணி சாலையில் நடந்துசெல்லவுள்ளேன்.

இந்த ஊர்வலம் சில நாட்களுக்கு நடக்கும். போலீஸார் கைது செய்யும்வரை நடந்து செல்வோம். இந்தஊர்வலத்தில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க விரும்பினால், அந்தப் பகுதி முஸ்லீம் பெரியவர்கள் எங்களைஅழைத்துச் செல்லட்டும்.

சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு பயப்படுவது போல் போலீஸ் இவர்களைக் கண்டு ஏன் பயப்படுகிறது. விநாயகர்ஊர்வலத்திற்கு 2 மாதத்திற்கு முன்பே அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை. ஜெயலலிதா முதல்வராகஇருக்கும்போதே நீதி கிடைக்காவிட்டால் எப்போதும் அது கிடைக்காது என்று ராமகோபாலன் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X