கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்?
சென்னை: ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல், தமிழகத்தில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு கடுமையாகியுள்ளதால், பல உணவக உரிமையாளர்கள் மீண்டும் கொரோனா காலத்தைப் போன்ற சூழ்நிலை உருவாகும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் விரைவில் நிலைமை சீராகும் என்கின்றனர் அதிகாரிகள்.
தமிழகத்தின் பல நகரங்களில் சமையலுக்கு பயன்படும் வணிக எல்பிஜி சிலிண்டர்கள் கிடைக்காத நிலை உருவாகி வருவதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சென்னை மற்றும் கோவை போன்ற நகரங்களில் இந்த பிரச்சினை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பல உணவகங்கள் தங்களது மெனுவில் உள்ள உணவு வகைகளை குறைத்து செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரிய இடையூறை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் இஸ்ரேல் போர்
குறிப்பாக உலகின் முக்கியமான எண்ணெய் கடத்தல் வழித்தடங்களில் ஒன்றான ஹேர்மூஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக எரிபொருள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையால் எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளன. கடந்த சனிக்கிழமை சமையல் எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டது. வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்துள்ளதுடன், வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.115 அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு விநியோகம்
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல உணவகங்கள் தற்போது குறைந்த அளவிலேயே உணவு தயாரித்து வருகின்றன. மீண்டும் கொரோனா ஊரடங்கு காலத்தை நினைவுபடுத்துகிறது. எல்பிஜி சிலிண்டர்களின் பயன்பாட்டை குறைத்து வருகிறோம். அதனால் மெனுவில் உள்ள உணவுப் பொருட்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளோம் என்கின்றனர் உணவக உரிமையாளர்கள். தோசை, டீ அல்லது காபி போன்ற உணவுகளை தயாரிக்க அடுப்பில் தொடர்ந்து எரிவாயு கிடைக்க வேண்டும்.
எல்பிஜி தட்டுப்பாடு
ஆனால் தற்போது சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் குறைந்த அளவில் மட்டுமே உணவு வழங்க முடிகிறது. தற்போதைய கையிருப்பில் இன்னும் ஒரு அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே செயல்பட முடியும். அதற்கு பிறகும் சிலிண்டர் விநியோகம் கிடைக்கவில்லை என்றால் உணவகங்களை மூட வேண்டிய நிலை உருவாகும் என்றும் சொல்கின்றனர்.
ஹோட்டல் சிலிண்டர் பிரச்சனை
இதற்கிடையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அவசர நடவடிக்கையாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எரிவாயு பதுக்கல் மற்றும் கருப்பு சந்தை விற்பனையை தடுக்கும் நோக்கில் புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
வணிக எல்பிஜி
அதன்படி ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய குறைந்தது 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற முக்கிய துறைகளுக்கு முன்னுரிமையாக எல்பிஜி விநியோகம் செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஹோட்டல்கள் மற்றும் பிற தொழில்துறைகளுக்கு எரிவாயு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் நிர்வாகிகளைக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications