For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

400 விக்கெட்: கும்ப்ளேவுக்கு சென்னையில் பாராட்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Kumble with Wife and Childடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளேவுக்கு சென்னையில் பாராட்டுவிழா நடந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள்நேற்றிரவு சென்னை வந்தனர். தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு அங்குசிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பின்னர் அனில் கும்ப்ளேவைப் பாராட்டும் வகையில் 400 என்று வடிவமைக்கப்பட்டிருந்த கேக்வைக்கப்பட்டிருந்தது.

இந்த கேக்கை வெட்டிய கும்ப்ளே அதனை தனது மனைவி சேத்னா, குழந்தை மற்றும் சக வீரர்கள், ஹோட்டல்ஊழியர்களுக்கு வழங்கினார்.

கையில் காயமடைந்துள்ள சச்சின் டெண்டுல்கரும் சென்னை வந்துள்ளார். ஆனால் ஹோட்டலில்செய்தியாளர்களிடம் பேச மறுத்த சச்சின் நேராக தனது அறைக்குச் சென்று விட்டார்.

ஆஸ்திரேலிய அணி வீரர்களும் நேற்றிரவே சென்னை வந்துவிட்டனர். இன்று காலை முதல் இரு அணி வீரர்களும்சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். 14ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டிதொடங்குகிறது.

Sewag, Zaheer and Pathanஇதையொட்டி சென்னையில் 5,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் போட்டிநடக்கும் சேப்பாக்கம் மைதானத்துக்கு நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகளும்இயக்கப்படவுள்ளன.

45,000 இருக்கைகள் கொண்ட சேப்பாக்கம் மைதானத்துக்கு சுமார் 35,000 பார்வையாளர்கள் வருவார்கள் எனபோலீசார் எதிர்பார்ப்பதாக மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், கிரிக்கெட் மைதானத்தில் வாகனங்களை நிறுத்த 1,500 வாகன பாஸ்கள்வழங்கப்படவுள்ளன. போட்டியை ஒட்டி வாலாஜா ரோடு சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படும்.சென்னை ரசிகர்கள் மிகவும் அறிவுப்பூர்வமானவர்கள். இதனால் போட்டியின்போது இடையில் பிரச்சனை வராதுஎன்று நினைக்கிறேன்.

கிரிக்கெட்டை வைத்து சூதாட்டம் நடத்தும் கும்பலை கண்காணிக்கவும் தனிப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.மைதானத்துக்குள் செல்லும் பார்வையாளர்களை போலீசார் தீவிரமாக சோதனையிடுவர் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X