வீரப்பன் மகள் படிப்புக்கு ஆபத்து !

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

வீரப்பனின் இளைய மகள் பிரபா முதல் முறையாக தனது தந்தையின் முகத்தைப் பார்த்து கதறி அழுதார்.

காட்டு ராஜாவாக திகழ்ந்த வீரப்பனுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.இவர்களில் மூத்த மகள் வித்யாராணி கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இரண்டாவது மகள் பிரபா (வயது 12) கடலூரில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

பிரபா இதுவரை தனது தந்தையை நேரடியாக பார்த்ததில்லை. செய்தித்தாள்களில் மட்டுமே பார்த்துள்ளார்.

முதலில் பிரபா செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். ஆனால் விசாரணை என்ற பெயரில்போலீஸார் அடிக்கடி வந்து தொல்லை கொடுத்ததால், கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் கடலூர் கூத்தப்பாக்கத்தில்உள்ள செயிண்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளியில் வழக்கறிஞர் புருஷோத்தமன் என்வரது உதவியுடன் பிரபாசேர்க்கப்பட்டார்.

Veerappans elder daughter Vidyaraniஇந் நிலையில் வீரப்பன் கொல்லப்பட்டதையடுத்து பிரபா, மூலக்காடு அழைத்துவரப்பட்டார். அங்கு தந்தையின்முகத்தை முதலும், கடைசியுமாக தனது தந்தையின் முகத்தை நேரில் பார்த்து கதறி அழுதார் பிரபா.

முதல் முதலாகப் பார்க்கும்போது பிணமாக பார்க்கும்படியாகி விட்டதே என்று அச் சிறுமி கதறி அழுததுஅங்கிருந்தவர்களையும் கலங்க வைத்தது.

இதேபோல மூத்த பெண்ணான வித்யாராணியும் கோவையிலிருந்து தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்திருந்தார். அவரும் தந்தையின் உடலைப் பார்த்து கதறினார்.

பள்ளியிலிருந்து வெளியேற்றப்படும் பிரபா:

இதற்கிடையே பிரபாவை பள்ளியில் இருந்து வெளியேற்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

செயிண்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கும் பிரபா இவர் வீரப்பனின் மகள் என்பது பள்ளியின்முதல்வர் தவிர வேறு நிர்வாகிகள் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. முதல்வர் இந்த விஷயத்தை ரகசியமாகவேவைத்திருந்தார்.

Muthulakshmi and Praba

தாய் முத்துலட்சுமியுடன் பிரபா (பழைய படம்)
பள்ளி வளாகத்திலேயே உள்ள விடுதியில் தங்கி பிரபா படித்து வந்தாள். இந் நிலையில் இப்போது பிரபா யார்என்ற உண்மை வெளியாகிவிட்டதால், இனி தங்கள் பள்ளியில் அச் சிறுமி படித்தால் அவளுக்கும் மற்ற மாணவ,மாணவிகளால் பிரச்சனை உருவாகலாம் என்று கூறி அவளது டிசியைத் தந்து வெளியேற்ற பள்ளி நிர்வாகிகள்முடிவு செய்துள்ளனர்.

ஆனால், இதற்கு அந்த வழக்கறிஞர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். கல்வியாண்டு முடிவதற்குள், எந்தத் தவறும்செய்யாத ஒரு மாணவியின் டிசியை இடையில் தந்து அவளை வெளியேற்ற பள்ளி நிர்வாகத்துக்கு உரிமையில்லைஎன்று கூறியுள்ள அவர், நீதிமன்றத்தையும் நாடுவார் என்று தெரிகிறது.

முத்துலட்சுமி கோரிக்கை:

இந் நிலையில் தனது இரு மகள்களுக்கும் தடையில்லாமல் கல்வி கிடைக்கச் செய்வது தமிழக அரசுன் கடமை எனவீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார். நிருபர்களிடம் அவர் பேசுகையில், எனக்கு இந்த அரசாங்கம் எந்தஉதவியும் செய்யாவிட்டாலும் கவலையில்லை. என் வாழ்வு முடிந்துவிட்டது. எனது மகள்களின் படிப்பை அரசுகெடுக்காமல் இருக்க வேண்டும் என்றார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...