For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கன்னடத் திரையுலகுக்கு பதிலடி தர முடிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பிற மொழித் திரைப்படங்கள் தொடர்பாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால்,பதில் நடவடிக்கையில் இறங்க சென்னையில் உள்ள தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்துள்ளது.

கர்நாடகத்தைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களை பிற மொழித் திரைத் துறையினர் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது, கர்நாடக திரைக் கலைஞர்களை (நடிகர், நடிகையர்) தங்களது படங்களில் பிற மொழித் திரைத் துறையினர்பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கன்னடம் அல்லாத பிற மொழிப் புதுப் படங்களை 7 வாரங்கள் கழித்தே திரையிட வேண்டும் என்றுஅம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது. இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

இதையடுத்து கர்நாடக திரைத் துறையினருக்கும், அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் 7 வாரத்தடையை 3 வாரத் தடையாக குறைக்க உடன்பாடு காணப்பட்டது.

இந்த முடிவு சென்னையில் உள்ள தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபைக்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளது.கன்னட திரைத் துறையினர் தங்களது தடை உத்தரவை முழுவதுமாக விலக்கிக் கொள்வார்கள் என்றுஎதிர்பார்த்திருந்த தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை, தற்போது தடை உத்தரவு வேறு வழியில்தொடருவதைக் கண்டு அதிருப்தி அடைந்துள்ளது.

இதையடுத்து கன்னடத் திரையுலகுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையில் இறங்க முடிவு செய்துள்ளனர்.

அடுத்த மாதம் சென்னையில் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த திரைத் துறையினர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இக் கூட்டத்தில் கன்னடத் திரையுலகுக்கு எதிராக மிகக் கடுமையான முடிவுகளை எடுக்கவுள்ளதாக திரைப்படவர்த்தக சபை பொதுச் செயலாளர் எல்.சுரேஷ் அறிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், கன்னடத் திரையுலகினர் இறங்கி வருவார்கள் என்று எதிர்பார்த்து பொறுமையுடன்காத்திருந்தோம். ஆனால் அவர்களது போக்கு துரதிர்ஷ்டவசமாக உள்ளது. எனவே, கன்னடத் திரையுலகினருக்குஒத்துழைப்பு அளிப்பதில்லை என்ற முடிவை அடிப்படையாகக் கொண்டு பல கடுமையான முடிவுகளை எடுக்கதீர்மானித்துள்ளோம்.

இதன்படி பிற மொழித் திரைத் துறையினர் கர்நாடகத்தில் எந்தப் படப்பிடிப்பையும் மேற்கொள்ளக் கூடாது.கர்நாடகத்தைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களை பிற மொழித் திரைத் துறையினர் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. கர்நாடக திரைக் கலைஞர்களை (நடிகர், நடிகையர்) தங்களது படங்களில் பிற மொழித் திரைத் துறையினர்பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளை தீர்மானித்து வைத்துள்ளோம்.

எங்களது கூட்டம் நடப்பதற்குள் கர்நாடகத் திரைத் துறையினர் நல்ல முடிவாக எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.அப்படி இல்லையென்றால் தென்னிந்தியத் திரையுலகைக் காக்கும் வகையில் நல்ல முடிவாக எடுப்போம் என்றார்சுரேஷ்.

இதற்கிடையே, பிற மொழித் திரைப்படங்களுக்கான தடையில் தெலுங்குப் படங்களுக்கு மட்டும் கர்நிாடகத்தின்பெல்லாரி மாவட்டத்தில் தடை நீக்கப்பட்டு அங்கு சிரஞ்சீவி நடித்துள்ள சங்கர்தாதா எம்.பி.பி.எஸ். படத்தைத்திரையிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அனுமதி அளித்துள்ளது.

பெல்லாரியில் சுமார் 70 சதவீதம் தெலுங்கு பேசும் மக்கள்தான் வசிக்கிறார்கள். அங்கு தனது தடையை கர்நாடகதிரைப்பட வர்த்தக சபை திணிக்க முடியாத நிலையில் உள்ளது.

கர்நாடகத்தில் தமிழ் சினிமா இவ்வளவு பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்க, இந்த விஷயத்தில் நடிகர்ரஜினிகாந்த் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது தமிழ்த் திரையுலகினர் பலரையும் எரிச்சலடையச்செய்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X