• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ராம்மோகனை மாற்றுவதில் தவறில்லை: கருணாநிதி

By Staff
|

சென்னை:

தமிழகத்தில் நடக்கும் எந்த விஷயத்தையும் கண்டுகொள்ளாமல் இருக்கும், செயலிழந்த ஆளுநரை மாற்றக்கோருவதில் எந்தத் தவறும் இல்லை என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஆளுநர் ராம்மோகன் ராவை மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக கோரிக்கை விடுத்து வருகிறது.ஆனால், மத்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகராக உள்ள, சோனியா காந்திக்கு நெருக்கமான கேரளத்தைச் சேர்ந்தநாராயணன் மூலமாக தப்பி வருகிறார் ராம்மோகன் ராவ்.

இன்டலிஜென்ஸ் பீரோவில் முக்கிய பதவியில் இருந்த நாராயணுக்கும், ஆந்திர காவல்துறை தலைவராக இருந்தராம்மோகன் ராவுக்கும் நெருக்கம் உண்டு. இந்த நெருக்கத்தை வைத்து தனது மாற்றத்தைத் தவிர்த்து வந்தார் ராவ்.

ராவை மத்திய அரசு மாற்றாமல் காலம் தாழ்த்தி வரும் காரணத்தால் தான் சென்னை வந்த பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்கும் திட்டத்தை கருணாநிதி கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், தன் கோரிக்கையை மத்திய அரசு உதாசீனப்படுத்தியதாக கருணாநிதி கருதுகிறார். இதை உணர்ந்து தான்மத்திய அரசு, கடந்த வாரத்தில் ராவை டெல்லிக்கு அழைத்து ராஜினாமா கடிதத்தை வாங்கிக் கொண்டு அனுப்பிவைத்துள்ளது.

விரைவில் அவர் தூக்கப்படுவது உறுதியாகிவிட்டது. ஆனால், மொத்தமாக பதவி நீக்காமல், நாராயணனின்பரிந்துரைப்படி கோவா மாநிலத்தில் ஆளுநராக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இந் நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதியிடம் ஆளுநரை மாற்ற மத்திய அரசுமுயற்சிப்பற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளதே என்று கேட்டபோது,

ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கண்காணிக்கும் பொறுப்பு ஆளுநருக்கு உண்டு. மாநில அரசின் நிர்வாகத்தைகண்காணிப்பதும் அவரது பணிதான்.

ஆனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விட்டது குறித்து பலமுறை எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டுபோய் ஆளுநரிடம் மனு அளித்தும், கேட்பாரற்று அது குப்பையில் தூக்கி போடப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில்அதிமுக நடத்திய தில்லுமுல்லு குறித்தும், அராஜகம் குறித்தும் கொடுத்த புகாரையும் கவர்னர் கவனிக்கவில்லை.

இப்படி செயலிழந்து போன ஒரு ஆளுநரை மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?. நிராவாகரீதியில் மத்திய அரசும் எடுக்கும் முடிவுக்கு திமுகவைக் குறை சொல்வது தவறு.தேவையில்லாமல் இதில் எங்களை இழுக்கிறது தமிழக அரசு.

மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுக்க திமுகவுக்குத் தெரியாது. ஆனால், ஆளுநர்கள் விஷயத்தில் அதிமுககொடுத்த நெருக்குதல்கள் உலகறிந்தது. சென்னா ரெட்டிக்கு ஜெயலலிதா கொடுத்த நெருக்கடியும், அவருக்குஎதிராக பேசிய வார்த்தைகளும் யாரும் மறக்க முடியாது.

ஆளுநரை இடம் மாற்றுவதற்கு ஜெயலலிதா ஏன் இவ்வளவு கவலைப்பட வேண்டும். அமைச்சர்களையும்அதிகாரிகளையும் நினைத்தபோதெல்லாம் மாற்றுபவர்தானே ஜெயலலிதா. அது மாதிரி தான் மத்திய அரசும் மாற்றநினைக்கிறது. இது தவறா?.

சென்னா ரெட்டியை நீக்கச் சொல்லி போராடிய ஜெயலலிதா இன்று ராம்மோகன் ராவை நீக்கக் கூடாது என்றுபோராடுவது ஏன்?

திமுக ஆட்சி காலத்தில் வீரப்பனை சரணடைய வைக்க முயற்சி மேற்கொண்டோம். ஆனால் வீரப்பன் காட்டைவிட்டு வெளியே வந்தால் அவனை கொல்லாமல் விட மாட்டேன் என்று ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி(தேவாரம்) பகிரங்கமாக சவால் விட்டார்.

இதனால்தான் வீரப்பன் தனது சரண்டர் முடிவிலிருந்து பின்வாங்கி விட்டான். அவனை சரணடைய வைக்கும்முயற்சியைக் கெடுத்தது அந்த அதிகாரிதான்.

வீரப்பன் கொல்லப்பட்ட விதம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அதை திமுக எதிர்க்காது.

அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்த பல சலுகைகளைப் பறித்து விட்டு தற்போது அவற்றில் ஓரளவேதிருப்பித் தரப்பட்டுள்ளன. இது கூட சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துத் தான் தரப்பட்டுள்ளன. திமுகஆட்சிக்கு வந்தால் டெஸ்மா சட்டத்தையே ரத்து செய்ய வைப்போம்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-பா.ஜ.க. கூட்டணிக்கு ஏற்பட்ட படுதோல்வி, பா.ஜ.வுக்கு ஏற்பட்ட பெரும் அரசியல்சறுக்கலாகும். இந்தத் தோல்வியைத் தந்த மக்களுக்கும் காங்கிரஸ்-தேசிய வாத காங்கிரசுக்கும் என வாழ்த்துக்கள்.முதல்வர் பதவி விஷயத்தில் இரு கட்சிகளும் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

பிரதமர் சென்னை வந்தபோது அவரை புறக்கணித்ததாக அதிமுக கூறுகிறது. நான் கொடைக்கானலில் இருப்பதால்உங்களை சந்திக்க முடியாது என்பதை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தொலைபேசியில் தெரிவித்துவிட்டேன்.இருவரும் பேசி முடிவெடுத்த விஷயம் அது என்றார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X