• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

பயமாக இருந்தது: வெள்ளதுரையின் மனைவி

By Staff
|

சென்னை:

வீரப்பன் வேட்டைக்குப் போகிறார் என்று தெரிந்ததும் எனக்கு மிகவும் பயமாக இருந்தது என்று என்கெளண்ட்டர்ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையின் மனைவி ராணி கூறினார்.

வீரப்பனை சுட்டுக்கொன்ற நடவடிக்கையில் முக்கியப் பங்கு ஆற்றியதற்காக வெள்ளத்துரைக்கு இரட்டை பதவிஉயர்வு வழங்கப்படும் என்று காவல்துறையில் பேச்சு அடிபடுகிறது. இந் நிலையில், வீரப்பனைப் பிடிக்கவெள்ளத்துரை போனபோது தனக்கு இருந்த மனநிலை குறித்து, அவரது மனைவி ராணி நக்கீரனுக்கு சிறப்புப்பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியிலிருந்து:

இவர் சத்தியமங்கலம் போகிறார் என்றதும் இவருக்குத் தெரியாமல் விஜயக்குமாரைப் போய் பார்த்தேன். அவரைஇந்த ஆபரேஷனில் ஈடுபடுத்த வேண்டாம் என்று சொன்னேன். அதற்கு விஜயக்குமார், வெள்ளத்துரைக்கு எதுவும்ஆகாமல் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

அதன்பின்பு மிகுந்த கஷ்டத்துடன் அவரை அனுப்பி வைத்தேன். கடந்த 14ம் தேதி சேலத்திலிருந்து போன் பண்ணி,அண்ணாமலை சீரியல் பத்தி கேட்டார். சம்பவம் நடந்த அன்னைக்கு சாயங்காலம் 5 மணிக்கு போன் பண்ணிவழக்கத்திற்கு மாறாக ரொம்ப நேரம் பேசினார். அதே தினம் இரவு மறுபடியும் போன் பண்ணி வீரப்பன் கதையைமுடிச்சிட்டதா சாதாரணமாக சொன்னார்.

அவர் இந்த நடவடிக்கைக்காக கிளம்பிப் போனது அக்டோபர் 14ம் தேதி. அதற்கு அடுத்த நாள் எங்க பொண்ணுபெரிய மனுஷியாயிட்டா. அவளுக்கான சடங்குக்குக்கூட அவரால் வரமுடியலை. இப்போ ஊரே அவரைப்பாராட்டும்போது இந்த கஷ்டங்கள் எல்லாம் மறந்துபோயிடுது என்று கூறியுள்ளார் ராணி.

வெள்ளத்துரை பேட்டி:

நக்கீரனுக்கு வெள்ளத்துரை அளித்துள்ள பேட்டியில்,

வீரப்பனுக்கு கண்ணில் கோளாறு என்பது எங்களுக்குத் தெரியவந்தது. இந்த சமயத்தில் ஒரு இலங்கைக்காரர்எஸ்.பி. செந்தாமரைக் கண்ணன்கிட்ட மாட்னார். அதனையடுத்த இலங்கை ஆள் மாதிரி காட்டுக்குள்ள் நான்போவதா முடிவாச்சு.

சென்னையிலிருந்து கிளம்பும்போதே மொட்டை அடிச்ச மாதிரி முடியை ட்ரிம் பண்ணிக்கிட்டேன். ப்ரெஞ்ச்தாடியும் வைச்சேன். எஸ்.பி.சார் ரூ.1,300க்கு ஒரு க்ரீன் கலர் சட்டையும், ப்ளூ கலர் ஜீன்ஸ் பேண்ட்டும் வாங்கித்தந்தார். சிலோன்காரங்க பெரும்பாலும் அணியிற கோல்டுகலர் வாட்ச்சை கட்டிக்கிட்டேன்.

எனது அடையாளங்களைச் சொல்லி, இலங்கைக்காரர் ஒருவர் இலங்கைக்கு கூட்டிப் போக வர்றார்னு வீரப்பனின்இன்பார்மர் மூலமே வீரப்பனுக்கு தகவல் கொடுத்தோம். அப்புறம் ஒரு வேனை ஆம்புலன்ஸா நிறம் மாத்தினோம்.

அப்புறம் வேனின் சீட் அரேன்ஞ்படி...அதில் உட்காருகிறவர்களை வெளியிலிருந்து சுடணும்னா எந்தெந்தஇடத்தில் சுடணும்னு மார்க் செய்து, அங்கெல்லாம் ரிஃப்ளெக்ஷன் ஸ்டிக்கர்களை ஒட்டினோம். இந்தஸ்டிக்கர்களை குறிவச்சி சுட்டாலே உள்ளே இருப்பவர்கள் மேல் குண்டு பாயும். அப்படி ஒரு ஏற்பாடு.

வீரப்பனுடன் இலங்கைத் தமிழில் பேசினேன். முழுவதுமாகவே நம்பிவிட்டான் என்று கூறியுள்ளார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X