For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆபாச இணையத் தளம்: பெண் வாழ்வில் புயல்- வாலிபருக்கு தண்டனை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இன்டர்நெட்டை தவறாகப் பயன்படுத்தி குற்றச் செயலில் ஈடுபட்ட மும்பை வாலிபருக்கு சென்னை நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத் தண்டனைவழங்கியுள்ளது. நாட்டிலேயே சைபர் கிரைம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இதுதான்.

மும்பையைச் சேர்ந்தவர் சுஹாஸ் ஷெட்டி. இவரும் சென்னையைச் சேர்ந்த ரோஸ்லின் என்ற பெண்ணும் மும்பை கல்லூயில் படித்துவந்தனர். ரோஸ்லின் மீது ஷெட்டி ஒருதலைக் காதல் கொண்டார். இக் காதலை ரோஸ்லின் ஏற்கவே இல்லை.

படிப்பு முடியும் தருவாயில் ரோஸ்லினுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. இதனால் ஷெட்டி மனம் உடைந்தார். ஆனால் இந்தத்திருமணம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. கணவரைப் பிரிந்தார் ரோஸ்லின்.

தான் காதலித்த ரோஸ்லின் கணவரைப் பிரிந்து விட்டார் என்ற தகவல் ஷெட்டிக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. எப்படியாவதுரோஸ்லினை மீண்டும் கவர்ந்து அவரை அடைவது என்ற முடிவுக்கு வந்தார். இதற்காக பல முயற்சிகள் எடுத்தும் அது பலிக்கவில்லை.

இதனால் ஷெட்டி கோபமடைந்து, ரோஸ்லினைப் பழிவாங்க முடிவு செய்தார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்தது ஆபாச இணைய தளங்கள்.

ரோஸ்லினின் புகைப்படம், அவரது வீட்டு முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை ஆபாச இணைய தளங்களில் பதிவு செய்த அவர்,ரோஸ்லினுக்கு ஒரு ரேட்டும் பிக்ஸ் செய்தார். சந்தோமாக இருக்க விரும்புவோர் என்னை அணுகலாம் என்று ரோஸ்லினே அழைப்பதுபோன்ற வாசகங்களை அந்த இணையத் தளங்களில் வெளியிட்டார் ஷெட்டி.

இதனால் ரோஸ்லின் வீட்டுக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. அனைவரும் ரோஸ்லினை தவறானகாரியத்துக்கு அழைத்தனர். இன்டர்நெட்டில் பார்த்துத் தான் உன்னைத் தொடர்பு கொள்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.

தினமும் 100 போன் கால்கள் வரை ஆரம்பித்ததால், அவரது குடும்பமே அதிர்ச்சியில் ஆழந்தது. நிலைமை மிகவும் மோசமாகிப் போகவேசென்னை சைபர் கிரைம் தடுப்புப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார் ரோஸ்லின்.

உதவி போலீஸ் கமிஷனர் பாலு தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணையில் இறங்கினர். இணைய தளத்தில் வெளியிடப்பட்டதகவல்கள் மும்பையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மையத்திலிருந்து அனுப்பப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட மையத்தை அடைந்த சென்னை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போதுதான் இதன் பின்னணியில்சுகாஸ் ஷெட்டி இருப்பது தெரியவந்தது. ஒன்றாய் படித்தபோது கல்லூரியில் ரோஸ்லின் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஆபாசஇணையத் தளங்களில் அவர் பயன்படுத்தியுள்ளார்.

இதையடுத்து சுகாஸ் ஷெட்டி கைது செய்யப்பட்டு அவர் மீது சைபர் கிரைம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. சென்னைஎழும்பூர் 12வது பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இளம் பெண்ணின் வாழ்வை நாசமாக்க முயன்ற ஷெட்டிக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து நீதிபதிஅருள்ராஜ் தீர்ப்பளித்தார்.

Cyber crime unit of TN policeசைபர் கிரைம் தொடர்பான வழக்குகளில் இதுவரை இந்தியாவில் பல இடங்களிலும் வழக்குகள் தான் பதிவாகியுள்ளதே தவிர, எந்தத்தண்டனையும் வழங்கப்பட்டதில்லை. இந்தியாவிலேயே முதல் முறையாக இப்போதுதான் சென்னையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

இதற்குக் காரணம் தமிழக போலீசின் சைபர் கிரைம் யூனிட் தாக்கல் செய்த பக்காவான சாட்சிகளே காரணம். இந்த யூனிட்டில் கம்ப்யூட்டர்சயின்ஸ் படித்த போலீசாருடன் சாப்ட்வேர் நிறுவனங்கள், நெட்வோர்க்கிங் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து செயல்படுவதுகுறிப்பிடத்தக்கது.

தமிழக சிபிசிஐடியின் கீழ் இந்த சைபர் கிரைம் யூனிட் செயல்பட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X