For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயேந்திரருடன் தொடர்பு வைத்திருந்த உஷா!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Jayandrarஜெயேந்திரருக்கும் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த உஷா என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாகவும், இந்த அசிங்கத்தை வெட்டவெளிச்சமாக்கப் போவதாக சங்கரராமன் மிரட்டியதால் தான் அவர் கொல்லப்பட்டார் என்றும் நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி சங்ராச்சாரியார் தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில்விசாரணை நடந்தது. நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் மனுவை விசாரித்தார்.

அப்போது சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் அதிகாரியான கூடுதல் எஸ்.பி. சக்திவேல் சார்பில் போலீஸ் வழக்கறிஞர்துல்சி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில்,

ஜாமீனில் விடக் கோரி ஜெயேந்திரர் தரப்பு கூறியுள்ள வாதங்களை ஏற்க முடியாத நிலை உள்ளது.

கணவரால் கைவிடப்பட்ட உஷா:

ஜெயேந்திரருக்கும், சங்கரராமன் கொலைக்கும் மிக மிக நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இதற்கான போதிய ஆதாரங்கள் காவல்துறைவசம் உள்ளது. மேலும், இரவு 10 மணிக்கு மேல் சங்கர மடத்தில் பெண்கள் நடமாட்டம் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாகவும்விசாரிக்க வேண்டியுள்ளது. வேதம் சொல்லித் தருவதாகச் சொல்லி இரவில் வரவழைத்துள்ளார்கள்.

அதே போல திருச்சி ஸ்ரீரங்கத்தில் கணவரால் கைவிடப்பட்ட உஷா என்ற பெண் இருக்கிறார். அவருக்கும் ஜெயேந்திரருக்கும் நீண்டகாலமாகவே தொடர்பு இருந்துள்ளது. தினமும் அதிகாலையில் அவர் ஜெயேந்திரருடன் தொலைபேசியில் நீண்டநேரம் பேசுவார். சுமார்ஒன்றரை மணி நேரமெல்லாம் இருவரும் தொடர்ந்து பேசியிருக்கிறார்கள்.

சங்கரராமன் மிரட்டல்:

இரவில் மடத்தில் பெண்கள் தங்குவது, உஷாவுடனான சங்கராச்சாரியாரின் தொடர்பு ஆகியவை குறித்து வெளியுலகுக்குத் தெரிவிக்கப்போவதாக தனது கடிதத்தில் சங்கரராமன் மிரட்டியுள்ளார். இது தான் அவர் கொலை செய்யப்பட்டதற்கு முக்கியக் காரணம்.

உஷாவுக்கு திருச்சி மற்றும் சென்னையில் ஜெயேந்திரர் வீடுகள் வாங்கிக் கொடுத்துள்ளார். அத்தோடு உஷாவுக்கு ஏராளமான பணத்தையும்அள்ளிக் கொடுத்துள்ளார்.

30 கிலோ தங்கம் எங்கே?

காஞ்சிபுரம் கோவிலுக்கு தங்கத் தேர் செய்ய வெளிநாடுகளில் இருந்து 65 கிலோ தங்கம் வந்தது. அதில் 35 கிலோ தங்கம் மட்டுமேதேருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதி 30 கிலோ தங்கம் எங்கே? அதை சங்கராச்சாரியாரே எடுத்துக் கொண்டுள்ளார். அது மடத்தின்கணக்கிலேயே இல்லை. இதன் மதிப்பு ரூ. 4 கோடிக்கும் அதிகமாகும்.

இந்தத் தங்கம் காணாமல் போனது குறித்தும், மடத்தில் இரவு 10 மணிக்கு மேல் பெண்கள் தங்குவதற்கும் சங்கரராமன் ஆட்சேபம்தெரிவித்துள்ளார். ஜெயேந்திரரின் ஆடம்பர வாழ்க்கை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் உஷா, ஜெயேந்திரர் தொடர்புகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியதோடு, விரைவில் இந்த விஷங்களை வெளியுலகுக்குஅம்பலப்படுத்தப் போவதாக மிரட்டியுள்ளார்.

உஷா-சங்கராச்சாரியார் பேச்சு:

இது ஜெயேந்திரருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. உஷாவுடனான தொடர்புகளை சங்கரராமன் அம்பலப்படுத்தி விட்டால் தனதுமரியாதையே போய்விடும் என்ற பயத்தினால்தான் சங்கரராமனை தீர்த்துக் கட்ட அவர் கூலிப் படையை ஏவிவிட்டார்.

சங்கரராமன் கொலைக்கு முன்பும், அதன் பின்பும், ஸ்ரீரங்கத்தில் இருந்த உஷாவைத் தொடர்பு கொண்டு ஜெயேந்திரர் நீண்டநேரம்தொலைபேசியில் பேசியுள்ளார். அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.

ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு:

ஆனால், இப்போது அந்த உஷா தலைமறைவாகியுள்ளார். இதனால் கொலையைத் தூண்டிவிட்டதில் உஷாவுக்கும் தொடர்பிருக்கலாம்என்று நினைக்கிறோம்.

ஐசிஐசிஐ வங்கியில் மடத்துக்கு 10 கணக்குகள் உள்ளன. அதிலிருந்து பணத்தை எடுத்துத் தான் கூலிப் படையினருக்குத் தந்துள்ளனர்.ஆனால், அதை மறைத்துவிட்டு ஐசிஐசிஐயில் கணக்கே இல்லை என்று பொய் கூறியுள்ளது சங்கர மடம். மடத்தின் கணக்கில் இருந்து பணம்எடுத்தது குறித்து நிர்வாகி சுந்தரேச அய்யரிடம் விசாரணை நடத்தியபோது அவர் ஒழுங்காக பதிலே சொல்லவில்லை.

தூண்டிவிட்டதால் பல்டி:

மேலும் கதிரவன் மற்றும் சின்னா ஆகியோரை அவர்களது வழக்கறிஞர்கள் சிறையில் சந்தித்து பேசிய பின்பு தான் சங்கராச்சாரியாருக்குஎதிராக தந்த வாக்குமூலத்தை மாற்றிக் கொடுத்து பல்டி அடித்துள்ளனர்.

சிறையில் இருந்து கொண்டே சாட்சிகளை கலைக்கும் முயற்சியில் சங்கராச்சாரியார் இறங்கியுள்ளார். இதற்கு கதிரவன் அடித்த பல்டியேநல்ல உதாரணம்.

சாட்சிகளை கலைப்பார்:

மேலும், முக்கியக் குற்றவாளிகளாக உள்ள அப்பு, ரவி சுப்ரமணியம் ஆகியோர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். உஷாவையும் பிடித்துவிசாரிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் ஜெயேந்திரரை ஜாமீனில் விடுவித்தால் வழக்கின் சாட்சிகள் அனைத்தையும் அவர்மொத்தமாகக் கலைத்து விடுவார். அப்பு, ரவி சுப்பிரமணத்தைக் கூட பிடிக்க முடியாமல் போய்விடும்.

எனவே ஜெயேந்திரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. இவ்வாறு கூடுதல் எஸ்.பி. சக்திவேல் தனது மனுவில் கூறியுள்ளார்.

ஜெயேந்திரர் வழக்கறிஞர் மறுப்பு:

போலீசாரின் இந்த மனுவை எதிர்த்து சங்கராச்சாரியாரின் வழக்கறிஞர் சுப்பிரமணியன் வாதாடினார். அவர் கூறுகையில்,

உஷா என்ற எந்தப் பெண்ணுடனும் சங்கராச்சாரியாருக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. இது போலீசார் சொல்லும் கட்டுக்கதை. போனில்பேசினார் என்பதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. அவரை ஜாமீனில் விட்டுவிடக் கூடாது என்பதற்காக பழைய வழக்குகளை தோண்டிஎடுத்து பொய்யாக அவரை வழக்கில் சேர்க்கிறார்கள். தவறான தகவல்களை தந்து கொண்டிருக்கிறார்கள்.

கதிரவனையும் சின்னாவையும் அடித்து உதைத்துத் தான் சங்கராச்சாரியாருக்கு எதிராக வாக்குமூலம் வாங்கியுள்ளனர் போலீசார். இதைஅவர்களே மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்துள்ளனர். இதனால் போலீசார் சொல்வதை எல்லாம் நம்ப வேண்டியதே இல்லை.

சங்கராச்சாரியாரையும் 3 நாட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்தும் முடித்துவிட்டனர். இதனால் அவரை ஜாமீனில் விடுவிக்கவேண்டும் என்றார்.

எதிர்த்து போலீஸ் வழக்கறிஞர் வாதம்:

இதை எதிர்த்து போலீசார் சார்பில் துல்சி வாதாடினார். அவர் கூறுகையில், ராஜிவ் கொலை வழக்கில் கூட முதலில் நளினியைக் கைதுசெய்துவிட்டுத் தான் விசாரணையே நடத்தப்பட்டது. அப்போது தான் நளினிக்கும் அந்தக் கொலைக்கும் இருந்த சம்பந்தம் தெரியவந்தது.அது போலத்தான் இந்த வழக்கும்.

கொலையில் சங்கராச்சாரியாருக்கு தொடர்பு இருப்பது உறுதியானதால் தான் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு விசாரணையில்அது உறுதியாகும். கடந்த 10 நாட்களாக நடத்திய விசாரணையில் மட்டும் போலீசாருக்கு பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே அவரை ஜாமீனில் விடக் கூடாது என்றார்.

இதையடுத்து விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

போலீஸ் சொல்லும் இந்த பெண் தொடர்பு விஷயம் உண்மையா, அல்லது ஜாமீனைத் தடுக்க எடுத்து வைக்கப்படும் வாதமா என்பதுவழக்கு விசாரணை முடிவில் தான் தெரியவரும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X