For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்நியனுக்கு சங்கரமடம் ரூ. 5 கோடி பைனான்ஸ்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Jayendrarசங்கர மடத்தின் பணம் சினிமா பக்கம் பாய்ந்திருப்பதாக அரசல் புரசலாக செய்திகள் வரும் நிலையில், இப்போது பணம் பெற்றவர்கள் யார்யார் என்ற பெயர் விவரங்களும் வெளியில் வர ஆரம்பித்துள்ளது.

விக்ரம் நடிக்க, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஷங்கர் இயக்கும் அந்நியன் படத்துக்கு ரூ. 5 கோடியை பைனாஸ் செய்திருக்கிறார்சங்கராச்சாரியார் என்கிறார்கள்.

மேலும் மடத்துக்கு நெருக்கமான ஜன் கல்யாண் அமைப்பின் நிர்வாகியான சுவாமிநாதன் வானம் வாழ்த்தட்டும் என்ற படத்தை எடுத்தார்.படம் அட்டர் பிளாப். இதற்கான பணம் வந்ததும் மடத்தில் இருந்து தானாம்.

அதே போல ஆனந்தா பிக்சர்ஸ், அன்பே சிவத்தைத் தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கும் சங்கர மடத்தின் பணகரிசனம் காட்டப்பட்டுள்ளதாம்.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது பா.ஜ.கவில் நடிகை, நடிகர்களை சேர்த்துவிடும் வேலையில் பல பேர் இறங்கினர். இந்தியா ஒளிர்கிறதுகோஷத்தோடு இந்த கனவுலக சிங்காரிகளையும் பிரச்சாரத்தில் இறக்கிவிட்டால் வெற்றி உறுதி என பா.ஜ.க தலைவர்கள் கருதினார்கள்.

இதையடுத்து வடக்கிலும் தெற்கிலும் ஏராளமான நடிகைகள் வரிசை கட்டி பா.ஜ.கவில் சேர்க்கப்பட்டனர். இதற்காக லட்சக்கணக்கில்பணத்தையும் அள்ளித் தந்தது பாஜக என்ற விவரத்தை மும்பையின் முன்னணி பத்திரிக்கை போட்டு உடைந்தது.

தமிழகம் உள்பட தென்னகத்தில் இப்படி நடிகைகளை பா.ஜ.கவுக்கு இழுத்துப் போகும் வேலையைப் பார்த்தவர் ரேவதி நரசிம்மன்என்பவர். இவரே அப்போது தான் பா.ஜ.கவில் சேர்ந்திருந்தார். சேர்ந்த வேகத்தில் நடிகைகளை கட்சியில் இழுக்கும் வேலை அவருக்குத்தரப்பட்டது.

இந்த வேலைக்கு அவர் நாடியது சங்கராச்சாரியாரின் உதவியைத் தான். சினிமாவில் சங்கர மடத்தின் பைனான்ஸ் டீல்கள் இருப்பதால்அவர் மூலமாக தயாரிப்பாளர்களைப் பிடித்து, அப்படியே நடிகைகளுக்கு பிராக்கெட் போட்டார் ரேவதி.

கந்து வட்டிக்கு பணம் வாங்கி படம் எடுத்து போண்டியான ரம்பாவின் நிதி நிலையை அறிந்திருந்த சங்கரமடம், அவரை ரேவதி மூலமாகபா.ஜ.கவுக்குக் கொண்டு போனது. இதே போல ஆந்திரா, கர்நாடகத்திலும் நடிகைகள் சேர்ப்பு வேலைகளை செய்து தந்தார் ரேவதி.

இந்த ரேவதி சமீபத்தில் சுக்ரா சினிவோர்ல்ட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். சினிமா உபகரணங்கள் விற்கும் இந்தக் கடையை தொடங்கிவைத்தது சாட்சாத், சங்கராச்சாரியாரே தான். கூடவே விஜயேந்திரரும் வந்திருந்து கடையை ஆசிர்வதித்துவிட்டுப் போனார்.

இந்தக் கடையிலும் சங்கராச்சாரியாரின் ஆட்களின் தனிப்பட்ட முதலீடு இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

சொர்ணமால்யாவுக்கு பிரேம்குமார் சம்மன்:

இதற்கிடையே விசாரணைக்கு வருமாறு கூறி நடிகை சொர்ணமால்யாவுக்கு காஞ்சிபுரம் காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரேம்குமார்சம்மன் அனுப்பியுள்ளார். எப்போது வர வேண்டும் என்று அதில் தேதி ஏதும் குறிப்பிடப்படவில்லை.

இருப்பினும் அவர் இன்னும் ஓரிரு நாட்களில் காஞ்சிபுரம் சென்று விசாரணைக்கு உட்படுவார் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X