For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சங்கராச்சாரியார் கைதில் மாபெரும் சதி: உமா பாரதி

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட விஷயத்தில் மிகப் பெரிய சதி அடங்கியிருப்பதாக மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமாபாரதி கூறியுள்ளார்.

இன்று வேலூர் சிறையில் சென்று சங்கராச்சாரியாரை அவர் சந்தித்தார். முன்னதாக காஞ்சி சங்கர மடம் சென்று விஜயேந்திரரைஅவர் சந்தித்துப் பேசினார்.

பா.ஜ.கவில் இருந்து லீவில் (இப்படித் தான் அந்தக் கட்சி சொல்கிறது) இருக்கும் உமா பாரதி இன்று காலை டெல்லியில் இருந்துசென்னை வந்தார்.

அவரை வரவேற்க பா.ஜ.கவினர் ரயில் நிலையத்துக்கு வரவில்லை. வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தள் மற்றும் பிராமணர் சங்கபிரமுகர்களே பெரும் அளவில் திரண்டு வரவேற்பு கொடுத்தனர்.

ஜெயலலிதா என் தோழி:

ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் உமாபாரதி பேசுகையில், நான் ஜெயேந்திரரை சந்திப்பதற்காக வந்துள்ளேன். இதில்அரசியல் ஏதும் இல்லை. அவரது நலன் விசாரிக்கவே வந்திருக்கிறேன். ஜெயேந்திரரை சிறையில் சந்திக்க தமிழக அரசு என்னைஅனுமதிக்கும் என்று நம்புகிறேன். ஜெயலலிதா எனது மிகச் சிறந்த தோழி என்றார்.

பின்னர் சிறிது நேர ஓய்வுக்குப் பின் அவர் காஞ்சிபுரம் புறப்பட்டுச் சென்றார். அவருடன் விஎச்பி மாநிலத் தலைவர் வேதாந்தமும்சென்றார்.

இளையவருடன் சந்திப்பு:

சங்கர மடம் சென்ற உமா பாரதி இளையவர் விஜயேந்திரரை சந்தித்துப் பேசினார். மடத்தில் நடந்த சந்திரமெளலீஸ்வரர்பூஜையிலும் பங்கேற்றார். சுமார் 2 மணி நேரம் விஜயேந்திரருடன் பேசிய அவர் பின்னர் வெளியில் கூடியிருந்தசெய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஜெயேந்திரருக்கு மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த மாதமும் அடுத்த மாதமும்அவர் முக்கிய பூஜைகள் நடத்துவது வழக்கம். குறிப்பாக இம்மாத இறுதியில் தனுர் மாத பூஜைகளை சன்னியாசிகள் நடத்துவர்.இந்தப் பூஜைகள் நடத்த சங்கராச்சாரியாருக்கு தமிழக அரசு வசதி செய்து தர வேண்டும்.

சோனியா மீது தாக்கு:

ஜெயேந்திரர் கைது குறித்து சோனியா காந்தி மெளம் சாதிப்பது வியப்பாக உள்ளது. அவரது மெளனம் நாட்டுக்கும் இந்துமதத்துக்கும் எதிரானது. சோனியாவுக்கு இந்து கலாச்சாரத்தின் மீது எந்த மதிப்பும் கிடையாது என்பதை இந்த மெளனம்உறுதிப்படுத்திவிட்டது.

ஜெயேந்திரரை சந்திக்க எனக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக நன்றி என்றார்.

எல்லா முக்கிய பாஜக தலைவர்களைப் போலவே முதல்வர் ஜெயலலிதாவை உமா பாரதி விமர்சிக்கவில்லை. சம்பந்தமில்லாமல்சோனியாவையே வசைபாடினார்.

பங்களா வேண்டும்:

அவருடன் வந்திருந்த விஎச்பி மாநிலத் தலைவர் வேதாந்தம் பேசுகையில், சோனியா காந்தி, நரசிம்ம ராவ் போன்றவர்கள் இந்தக்கைது விஷயத்தில் அமைதியாக இருப்பது மன வேதனை அளிக்கிறது. அவரை சிறையில் இருந்து தனி பங்களாவுக்கு மாற்றவேண்டும் என்றார்.

பின்னர் இருவரும் வேலூர் புறப்பட்டுச் சென்றனர். வேலூர் சிறையில் சங்கராச்சாரியாரை சந்தித்துவிட்டுத் திரும்பிய அவர்நிருபர்களிடம் பேசுகையில்,

மீண்டும் சோனியா மீது வசைபாடல்:

இந்தக் கைது விஷயத்தில் சோனியாவின் அமைதி பெருத்த சந்தேகத்தைக் கிளப்புகிறது. இதன் பின்னணியில் பெரிய சதிஇருப்பதை இந்த அமைதியே தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. விரைவில் கைதின் பின் உள்ள சதி வெளிவரும். இப்போதுஜெயேந்திரரை இறைவன் சோதித்துக் கொண்டிருக்கிறான்.

சங்கராச்சாரியாரின் சாபம்:

அவரது சாபம் மத்திய அரசின் மீது மட்டுமல்ல நாட்டின் மீதும் விழும். நாட்டின் சட்டத்தை நான் உயர்ந்தவன் அல்ல என்றுசங்கராச்சாரியார் என்னிடம் தெரிவித்தார். அவரது உடல் நலம் நன்றாகவே உள்ளது. அவரை சிறையில் நல்லபடியாகவேகவனித்துக் கொள்கிறார்கள்.

தமிழக அரசுக்கு நன்றி:

சங்கராச்சாரியாரை சந்திக்க எனக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி. ஜெயேந்திரரை எனக்கு 1974ம் ஆண்டில் இருந்துதெரியும். இது தந்தையை மகள் சந்தித்தது போன்ற சந்திப்பு தான். இதில் அரசியல் ஏதுமில்லை. இமயத்தில் இருந்து ஜெயேந்திரரைசந்திக்க வந்த சாது நான் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X