For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிவாரணம்: சர்வதேச நாடுகளுக்கு புலிகள் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

கிளிநொச்சி:

The scene in Lanka

இலங்கையின் வட கிழக்குப் பகுதிக்கு உரிய நிவாரணம் வந்து சேருவதை சர்வதேச நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என விடுதலைப்புலிகள் இயக்கம் கோரியுள்ளது.

இலங்கைக்கான நார்வே தூதர் ஹான்ஸ் பிட்ஸ்கர் கிளிநொச்சியில் விடுதலைலப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனைச்சந்தித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் தமிழ்ச் செல்வன் கூறியதாவது:

சுனானி பேரலைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறோம். இதற்காக மாவட்ட அளவில்செயல் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களுக்கு சர்வதேச நிறுவனங்கள், சர்வதேச சமூக அமைப்புகள் சில ஆரம்பகட்டஉதவிகளைச் செய்துள்ளன.

அடுத்தகட்டமாக மக்களுக்கு மறுவாழ்வுப் பணிகளைச் செய்து தர, சர்வதேச உதவிகளை வட கிழக்குப் பகுதி மக்களுக்கு சரியானமுறையில் பகிர்ந்தளித்துத் தரக் கூடிய ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

இது குறித்து இலங்கை அரசிடமும் சர்வதேச சமூகத்துடனும் விரைந்து பேசி முடிவெடுக்குமாறு நார்வே தூதரிடம் கூறியுள்ளோம்.

ஒவ்வொரு நாடும் இலங்கைக்கு எவ்வளவு நிதி உதவிகள் வழங்கியுள்ளன என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், சுனாமியால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது வட கிழக்குப் பிரதேசம் தான். அந்த அடிப்படையில் சர்வதேச சமூகம் தனது உதவிகளை முறையாகபகிர்ந்தளித்துத் தர வேண்டும்.

பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு உரிய உதவிகள் சரியான முறையில் வந்து சேருவதை சர்வதேச நாடுகள் உறுதி செய்ய வேண்டும். கடந்த 4நாட்களாக புலிகளும், தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் தான் நிவாரணப் பணிகளை இந்தப் பகுதிகளில் செய்து வருகின்றன. இனி இதற்கானஉதவிகளை சர்வதேச நாடுகள் இப் பகுதிக்குத் திருப்ப வேண்டும்.

இலங்கைக்கு நார்வே 170 மில்லியன் டாலர்கள் தரப் போவதாக அறிவித்துள்ளது. இதில் ஈழப் பகுதிக்கு எவ்வளவு ஒதுக்கப்படும் என்றுதீர்மானிக்கப்படவில்லை.

வட கிழக்கில் ஏற்பட்ட சேதங்கள், மறு புணரமைப்புக்குத் தேவைப்படும் உதவி ஆகியவை குறித்து மதிப்பிட்டு வருகிறோம். அந்தமதிப்பீட்டுப் பணிகள் முடிந்தவுடன் சர்வதேச சமூகத்திடம் அதை அளிப்போம்.

உடனடியாக, மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு பொதுவான கோரிக்கை விடுத்துள்ளோம். இலங்கை அரசிடமும் இதைத்தான் கோரியுள்ளோம்.

வட கிழக்குக்கு வரும் உதவிகளை நாங்கள் தடுப்பதாக தெற்குப் பகுதியில் இனவாத சக்திகளும் செய்தி ஊடகங்களும் தவறானசெய்திகளைப் பரப்பி வருகின்றன. ஈழத்துக்கு வரும் பொருட்கள் கடத்தப்படுவதாகவும் பறிக்கப்படுவதாகவும், அரசின் உதவி முகாம்களைபுலிகள் எரித்ததாகவும் தவறான பிரச்சாரத்தை தெற்கு இலங்கையில் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.

வட கிழக்கில் கட்டுப்பாட்டுடனும் ஒழுங்கமைப்போடும் மனிதாபிமானப்பணிகள் நடந்து வருகின்றன. இதை சீர்குலைக்கும் முயற்சியாகவேதெற்கில் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

உள்ளூர் வெளியூர் செய்தி ஊடகங்களுக்கு ஒரு கோரிக்கை விடுக்கிறேன். நேரடியாக வந்து பார்த்து செய்திகளை வெளியிடுங்கள். பொய்ச்செய்திகளை வெளியிடுவது என்பது சுனாமி இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்னும் மோசமாக பாதிக்கும். எனவே இந்தச்செயல்களை தவிர்த்திடுங்கள் என்றார் தமிழ்ச்செல்வன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X