For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரக்கு விமானங்கள் கோரும் ஐ.நா சபை

By Staff
Google Oneindia Tamil News

ஜகார்த்தா:

The Scene in Malathives

சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்ப கார்கோ விமானங்களைத் தந்து உதவுமாறுஅமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு ஐ.நா. சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவ ஜெர்மனி 668 மில்லியன் டாலர்களைத் தருவதாகக் கூறியுள்ளது. உலகநாடுகள் அறிவித்த நிவாரணத் தொகையில் இதுவே அதிகத் தொகையாகும்.

இதற்கு அடுத்ததாக ஜப்பானும் (500 மில்லியன் டாலர்களும்), அமெரிக்காவும் (350 மில்லியன் டாலர்கள்) அதிக நிதி அளித்தநாடுகள் வரிசையில் 2வது, 3வது இடங்களைப் பெறுகின்றன.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்ல சி-17 கார்கோ விமானங்களை தந்துஉதவுமாறு அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளை ஐ.நா. சபை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த ரக விமானங்கள் குறைந்த தூர விமான ஓடுபாதையில் இயங்கும் திறனும், 60 டன் வரை பொருட்களை ஏற்றிச் செல்லும்வல்லமையும் படைத்தவை.

இந் நிலையில் பன்டா ஏசே விமான நிலைய ஓடுபாதையில், கார்கோ விமானமும் எருமை மாடும் மோதிக் கொண்டதில் ஓடுபாதைசேதமடைந்தது. இதை சரிப்படுத்த கிரேன் மற்றும் புல்டோசர்கள் தேவைப்படுவதாக ஐ.நா. சபை கூறியுள்ளது.

இதற்கிடையே இலங்கையின் கிழக்குப் பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் கன மழை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்குஉணவு மற்றும் மருந்துப்பொருட்கள் கொண்டு செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் மட்டும் 8,000 பேர்இறந்துள்ளனர்.

கலாமிடம் உலக தலைவர்கள் இரங்கல்:

இந் நிலையில் உலக நாடுகளின் தலைவர்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளனர்.

லிபியா அதிபர் மெளம்மர் அல் கடாபி, எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக், ஜோர்டான் அரசர் அப்துல்லா ஆகியோர் இந்தியாவில்சுனாமி அலையால் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கலாமிற்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதேபோல் மொராக்கோ, ஜப்பான் நாடுகளின் அரசர்கள், இஸ்ரேல், சூடான், உக்ரைன் நாடுகளின் அதிபர்கள், பாலஸ்தீனத்தின்தாற்காலிக அதிபர் எஸ்.எம்.கான், ஆஸ்திரேலிய கவர்னல் ஜெனரல் மைக்கேல் ஜெப்ரி, அல்ஜீரியா அதிபர் அப்தெலாஜிஸ்பெளடேலிகா மற்றும் சார்ஜா மன்னர் சுல்தான் பின் முகமது அல் குஷிமி ஆகியோரும் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளதாககுடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X