For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி, ராமதாசுக்கு ஜெ டோஸ் மேல் டோஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அகில உலக அக்மார்க் தமிழர் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் கருணாநிதி தனது குடும்பத் தொலைக்காட்சிக்கு சன்டிவி என்று பெயர் சூட்டியிருப்பது ஏன் என்று முதல்வர் ஜெயலலிதா கேள்வி கேட்டுள்ளார்.

மேலும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் ஆங்கில சினிமா பெயர்களுக்கு எதிராக ராமதாசும், திருமாவளவனும்போராட்டம் நடத்தி வன்முறையைத் தூண்டினால் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்றும் ஜெயலலிதாஎச்சரித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்:

தமிழ்த் திரைப்படங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருக்கக் கூடாது, அப்படி இருந்தால் போராட்டம் நடத்துவோம் என பாமகநிறுவனர் ராமதாசும் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவனும் எச்சரித்திருக்கிறார்கள்.

இரண்டு படங்களின் பெயர்களை (மும்பை எக்ஸ்பிரர், பிஎப்) குறிப்பிட்டு அந்தப் படங்களை ஓட விட மாட்டோம் எனஅச்சுறுத்தியுள்ளனர்.

படத் தயாரிப்பாளர்கள் தாங்கள் விரும்பிய பெயரை படத்துக்கு வைக்கலாம். இந்தப் பெயர் தான் வைக்க வேண்டும், வைக்கக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. மேலும் ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது என்று தடை போட எந்தசட்டமும் இல்லை.

இதெல்லாம் ராமதாஸ், திருமாவளவனுக்குத் தெரியாதா?. தெரியும்!.

ஆனால், தங்களுக்கும் தமிழ்ப் பற்று இருக்கிறது என்று மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக இந்த திடீர் தமிழ் அபிமானிகள்வேடம் பூண்டிருக்கிறார்கள். இவர்களது போராட்டம் வேடிக்கையானது.

இத்தனையாண்டு காலம் இல்லாத தமிழுணர்வு திடீரென பொங்கிப் புறப்பட்ட என்ன காரணம்? அப்பட்டமான சுயநலம் தானே.

இந்த திடீர் தமிழ் அபிமானிகளின் சொல்லுக்கும் செயலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?. வட மொழிப் பெயரை தாங்கிநிற்கும் ராமதாஸ் தன் பெயரை தூய தமிழில் மாற்றுவாரா?, மாட்டார். ஊருக்குத் தானே உபதேசம்.

ஆங்கிலப் பெயர்களை எதிர்க்கும் ராமதாஸ், அவரது கூட்டணியின் தலைவரான கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சிகளின்பெயர்களை தமிழில் மாற்றச் சொல்லி போராடுவாரா?. சன் டிவி, சன் நியூஸ், கேடிவி இதெல்லாம் தமிழ்ப் பெயரா?.கலப்படமில்லாத ஆங்கில பெயர்கள் தானே?

அகில உலக அக்மார்க் தமிழர் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் கருணாநிதி, கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகியமாநிலங்களில் தனது குடும்பத் தொலைக்காட்சியின் பெயர்களை அந்தந்த மாநில மொழிகளிலேயே வைத்துவிட்டு தமிழகத்தில்தனது குடும்பத் தொலைக்காட்சிக்கு மட்டும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டி அழகு பார்ப்பது ஏன்?

வியாபாரம் என்று வந்தால் தமிழ்ப் பற்று காணாமல் போகிறதே..

தனது மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்திருக்கிறாரே கருணாநிதி, இது தமிழ்ப் பெயரா? ஸ்டாலின் பெயரை மாற்றச் சொல்லிராமதாஸ் போராட்டம் நடத்துவாரா?

முதலில் சன், கேடிவி, சன் நியூஸ் பெயர்களை மாற்றச் சொல்லி ராமதாசும் திருமாவளவனும் போராட்டம் நடத்தட்டும்.

தமிழ் மக்களிடையே எழுச்சியை பரப்ப இவர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து தமிழ் தேசிய வாகனப் பயணம் தொடங்கஇருப்பதாகவும், திருச்சியில் பொதுக் கூட்டம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளார்கள். தமிழ் வளர்ச்சிக்காக இந்தப் பயணம்என்றற் தாராளமாய் நடத்தலாம், அதற்கு எந்தத் தடையும் இல்லை.

ஆனால், தமிழ்ப் பாதுகாப்பு என்ற போர்வையில் திரைப்படத் துறைக்கு எதிராக வன்முறையைத் தூண்ட நினைத்தால் அதைஅனுமதிக்க முடியாது. தமிழ்ப் படங்கள் வெளியிடுவதைத் தடுத்தால், வன்முறையில் ஈடுபட்டால் அதை இந்த அரசு வேடிக்கைபார்க்காது.

சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாத இவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது.

அண்ணா வகுத்துத் தந்த இருமொழிக் கொள்கையை இந்த அரசு பின்பற்றி வருகிறது. அண்ணாவின் நிலைப்பாடு ஆங்கிலத்துக்குஎதிரானதல்ல. தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் போராட்டம் ஆங்கில எதிர்ப்புப் போராட்டமாக இருக்கிறது. இது அண்ணாவின்கொள்கைக்கு எதிரானது.

இந்த விஷயத்தில் திரையுலகை நிர்பந்திக்க போராட்டம் நடத்தினால் தமிழக அரசை அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காதுஎன்பதை இந்த போலி போராட்டவாதிகள் புரிந்து கொள்வது நல்லது.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X