For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதியின் தைரியம்: சட்டசபையில் கிண்டல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கருணாநிதியின் தைரியம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசிய பேச்சால் தமிழக சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது.

திமுக மற்றும் அதிக எம்.எல்.ஏக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சபாநாயகரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்ததிமுகவினர் முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ ஆற்காடு வீராசாமி பேசுகையில்,

சென்னை அரசு மருத்துவமனைக்கு ரூ. 104 கோடியில் புதிய கட்டடம் கட்டும் திட்டம் திமுக ஆட்சியில் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டாலும், அத் திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்று, அதை முதல்வர் ஜெயலலிதா திறக்க இருப்பதாக ஆளுநர் உரையில்கூறப்பட்டுள்ளது. இதற்காக மகிழ்ச்சி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே போல மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு சிடி ஸ்கேன் கருவிகள் வழங்கவும், சென்னை மருத்துவமனைக்கு எம்ஆர்ஐஸ்கேன் வழங்கவும் திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது. இதற்காக உலக வங்கியிடம் கடன் வாங்கி திட்டத்தை கொண்டு வந்தார்கருணாநிதி.

அப்போது நலத்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் (குறுக்கிட்டு): 1995ம் ஆண்டிலேயே இத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துவிட்டார்.

ஆற்காடு வீராசாமி: திமுக ஆட்சியில் இதற்கான முயற்சியே நடக்காதது போல அமைச்சர் பேசுகிறார். கோப்புகளைப் பார்த்தால்உண்மை தெரியும். சுனாமி நிவாரணத்தைப் பொறுத்தவரை கருணாநிதி அதை அரசியலாக்க விரும்பவில்லை. இதனால் தான்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்றது.

ஆனால், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறாமல் பயந்து போய் கருணாநிதி மருத்துவமனையில் போய்ப்படுத்துக் கொண்டார் என்று ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் பேசினார்.

கருணாநிதியின் 60 ஆண்டு கால பொது வாழ்வில் அவர் யாருக்கும் பயப்பட்டதில்லை, எதைப் பற்றியும் கவலைப்படாதவர்,பயப்படாதவர், தைரியசாலி.

அப்போது அமைச்சர் ஜெயக்குமார் (குறுக்கிட்டு): திமுக தலைவரை போலீசார் கைது செய்தபோது அவரது தைரியத்தை தான்எல்லோருமே பார்த்தார்களே. ஐயோ, கொல்றாங்களே, கொல்றாங்களே என்று அலறினாரே, கருணாநிதி. அப்போதே அவரதுதைரியம் நாட்டு மக்களுக்குத் தெரிந்து விட்டது என்றார்.

ஜெயக்குமாரின் இந்தப் பேச்சுக்கு திமுகவினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆவேசமாக சபாநாகரின் இருக்கைக்கு எதிரேகூடிய அவர்கள், காளிமுத்துவை நோக்கி, ஜெயக்குமார் பேசியகை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூச்சல்எழுப்பினர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

அப்போது பேசிய சபாநாயகர் காளித்து: திமுக ஆட்சியில் இன்றைய முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியது எல்லாம் அவைக்குறிப்பில் பதிவாகியிருக்கிறது. இப்போத யாரும் கண்ணியக் குறைவாக பேசிடவில்லை. இதனால் அனைவரையும் இருக்கைக்குசெல்ல வேண்டும் என்றார்.

ஆனால் துரைருகன், அமைச்சர் ஜெயக்குமார் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பிறதிமுகவினரும் அதையே வலியுறுத்தினர். அப்போது நிதியமைச்சர் பொன்னையன் எழுந்து, ஜெயக்குமார் பேசியதில் தவறில்லை.அவர் உண்மையத்தான் கூறினார் என்றார். இதற்கும் திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதுவரை அமைதியாக இருந்த காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் எழுந்து திமுகவுக்கு ஆதரவாக குரல்கொடுத்தனர்.

இதையடுத்து கோபமடைந்த காளிமுத்து, அனைவரும் அமைதியாக அமர வேண்டும். அவை நடவடிக்கைக்கு குந்தகம்விளைவிக்கக் கூடாது என்றார்.

இதையடுத்து திமுகவினர் மேலும் குரலை எழுப்பி கூச்சலிட்டனர். இதற்கு அதிமுகவினர் எதிர்க் கூச்சல் போட, அமைச்சர்கள்ஆவேசமாக பதில் தர, அவர்களை நோக்கி திமுகவினர் சத்தமிட்டனர்.

அப்போது எழுந்த முதல்வர் ஜெயலலிதா: இங்கு யாரும் தவறாக எதையும் கூறவில்லை. திமுக தலைவரின் தைரியத்தைதொலைக்காட்சியில் பொது மக்கள் பார்த்ததைத் தான் கூறினார் அமைச்சர் ஜெயக்குமார். கருணாநிதி முதல்வராக இருந்தபோதுஎதிர்க் கட்சித் தலைவியாக இருந்தேன்.

நான் எம்எல்ஏவாக இல்லாத போது என்னைப் பற்றி இந்த அவையில் திமுகவினர் தரக்குறைவாகப் பேசினர். ராஜிவ்கொலைக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாகவும் கொலையாளிகளுடன் நான் போட்டே எடுத்துக் கொண்டதாகவும் கருணாநிதிபேசியிருக்கிறார்.

அப்போது சட்ட அமைச்சராக இருந்தவர், ஜெயலலிதா ஜெயலிலில் கம்பி எண்ணப் போவார். ஆயுட்காலம் முழுவதும் தண்டனைஅனுபவிப்பார் என்று பேசியிருக்கிறார். அப்படியெல்லாம் நாங்கள் பேசவில்லையே.

1989ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது துரைமுருகன் அமைச்சராக இருந்தார். நான் எதிர்க் கட்சித் தலைவி.சட்டசபையில் என்னை அவமானப்படுத்தி அடித்தார்கள். இதே துரைமுருகன் என் சேலையைப் பிடித்து இழுத்தாரா? இல்லையா?.நான் திசை திருப்புவதற்காக இதையெல்லாம் கூறவில்லை. திமுக தலைவர் தைரியமானவர் என்று கூறியதால் சொல்கிறேன்என்றார் ஜெயலலிதா.

அமைச்சர் கருப்பசாமி: திமுக ஆட்சியில் நான் உறுப்பினராக இருந்தபோது எங்கள் முதல்வரை அவமானப்படுத்தியதை தட்டிக்கேட்டேன். அப்போது உன்னைக் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள். இதே திமுகவினர் என்னை தாக்கினார்கள் என்றார்.

இதையடுத்து திமுகவினரின் குரல் மேலும் உயர்ந்தது. அவர்களை காளிமுத்து இருக்கைகளுக்குச் செல்லுமாறு உத்தரவிட்டார்.இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்த அவர், ஆற்காடு வீராசாமியை மீண்டும் பேச அழைத்தார்.

அப்போது பேசிய திமுக உறுப்பினர் துரைமுருகன்: திமுக தலைவர் புண்படுத்தும் வகையில் அவையில் பேசுவதா? 80 வயதானஒருவரை போலீசார் தாக்கினால் அலர மாட்டாரா? என்றார்.

அப்போது மீண்டும் ஜெயலலிதா எழுந்து தந்த பதில்: 2001ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியை போலீசார் கைது செய்தபோதுஎன்ன நடந்தது? அத்துமீறல் நடந்ததா என்பது குறித்து விசாரணைக் கமிஷன் விசாரித்து வருகிறது. நீங்கள் பேச வேண்டியஅவசியமில்லை. வயதானவரை அடித்தால் கத்த மாட்டாரா என்று கேட்கிறீர்கள்.

அடிக்கவேயில்லை என்பது எங்கள் வாதம். காவல்துறையினர் அடிக்கவும் இல்லை துன்புறுத்தவும் இல்லை. என்னை நாடு கடத்தவேண்டும் என்று பேசியவர்கள் தானே திமுகவினர்கள். இங்கு இப்போது யாரும் அப்படித் தரக்குறைவாக பேசினார்களா?

கருணாநிதியை கைது செய்யப் போன போது முரசொலி மாறன் டிஐஜி முகம்மது அலியை கண்ணில் குத்தினார். அவர்கள் தவறுசெய்துவிட்டு என் மீது பழி போடுகிறார்கள் என்றார்.

சபாநாயகர் காளிமுத்து: அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க முடியாது. உங்கள் இடத்துக்குச்செல்லுங்கள். இல்லாவிட்டால் அவையில் இருந்து திமுகவினரை வெளியேற்ற வேண்டிய நிலை வரும்.

இதையடுத்து சர்வாதிகார சபாநாகர் ஒழிக என்று கோஷமிட்டபடியே திமுகவினர் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். சுமார் 35நிமிட அமளிக்குப் பின் ஒரு வழியாய் அவையில் அமைதி திரும்பியதும் ஆற்காடு வீராசாமி தொடர்ந்து பேசியதாவது:

திமுக தலைவரை விட அமைச்சர் ஜெயக்குமார் தைரியசாலியாக இருக்கலாம். கருணாநிதி 67 வருட அரசியல் அனுபவம்உள்ளவர். பல்வேறு போராட்டங்களை சந்தித்தவர். இது நாட்டுக்குத் தெரியும். மக்களுக்குத் தெரியும். கைதான போதெல்லாம்எப்போதுமே அவர் ஜாமீன் கூட கேட்டதில்லை என்றார் வீராசாமி.

இத்தனை அமளி துமளி நடந்து கொண்டிருந்த போதிலும் மு.க.ஸ்டாலின் தனது இருக்கையை விட்டு எழாமலும், எதுவும்பேசாமலும் அமைதியாக இருந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X