• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திமுக ஆத்திரம்: சோனியாவிடம் புகார்- இளங்கோவனுக்கு டோஸ்

By Staff
|

டெல்லி:

2009-பிப். 27-ல் அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த கருணாநிதியின் உருக்கமான கடிதம்

யாரோ முதல்வராவதற்கு நாங்கள் கஷ்டப்பட வேண்டுமா என்று மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ள கருத்து திமுகதலைமையை ஆத்திரப்படுத்தியுள்ளது. இதையடுத்து இளங்கோவனின் பேச்சு குறித்து சோனியா காந்திக்கு திமுக அமைப்புச் செயலாளர்விடுதலை விரும்பி மூலமாக கடிதம் அனுப்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து இளங்கோவனைக் கூப்பிட்டு காங்கிரஸ் மேலிடம் டோஸ் விட்டதால், உடனடியாக கருணாநிதிக்கு வருத்தம் தெரிவித்துஇளங்கோவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுக, காங்கிரஸ் இடையே சமீப காலமாக புதிய உரசல் ஏற்பட்டுள்ளது. மத்தியில் எங்கள் கூட்டணி ஆட்சியில் பங்கெடுத்துள்ள திமுக,மாநிலத்தில் ஆட்சி அமைத்தால் ஆட்சியில் எங்களுக்கும் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வருகிறது.

கூட்டு சேர்ந்த கோஷ்டிகள்:

முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்த புதிய கோஷத்திற்கு தலைமை தாங்கி வருகிறார். போகும்இடமெல்லாம் ஆட்சியில் பங்கு குறித்து அவர் வலியுறுத்திப் பேசி வருகிறார். அவருக்கு ஆதரவாக சுதர்சன நிாச்சியப்பன் எம்.பியும் பேசிவருகிறார்.

இவர்களது பேச்சுக்கு தமிழகத்தில் அனைத்து காங்கிரஸ் கோஷ்டிகளும் முழு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந் நிலையில் நேற்று முன் தினம் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்.பி, எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் இளங்கோவன் மிகக்கடுமையாக பேசியுள்ளார்.

கருணாநிதிக்கு இளங்கோவன் இடி:

யாரோ (கருணாநிதி) முதல்வராவதற்காக நாம் கஷ்டப்பட வேண்டுமா? நமது உழைப்பை அவர்களுக்கு தாரை வார்க்க வேண்டுமா என்றுபேசிய இளங்கோவன், திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், தயாநிதி மாறன் ஆகியோர் குறித்தும் தாறுமாறாக வார்த்தைகளை விட்டார்.

இது திமுக தலைமைக்கு பெரும் ஆத்திரத்தைக் கிளப்பியுள்ளது. இதுவரை தங்களுக்கு முழு ஆதரவு தந்து வந்த இளங்கோவன் இப்படிப்பேசியது திமுகவை கோபப்படுத்திவிட்டது.

அநியாயம், அருவருப்பு: சோனியாவுக்கு லெட்டர்

இதையடுத்து கருணாநிதியின் உத்தரவுப்ப, திமுக எம்.பியும் அமைப்புச் செயலாளருமான விடுதலை விரும்பி, காங்கிரஸ் தலைவர்சோனியா காந்திக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், கடந்த 24ம் தேதி நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, தயாநிதி மாறன்,ஸ்டாலின் ஆகியோருக்கு எதிராக, மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் இளங்கோவன், அநியாயமான, அருவருக்கத்தக்க, தனிப்பட்டமுறையில் கண்மூடித்தனமாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

அவரது பேச்சு வெளியாகியுள்ள தமிழ் நாளிதழின் மொழிபெயர்ப்பையும் இத்துடன் இணைத்துள்ளேன் என்று அந்தக் கடிதத்தில்கூறியுள்ளார்.

சோனியா சார்பில் டோஸ்:

இதைத் தொடர்ந்து இளங்கோவன் அவசர அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அவரிடம் சோனியாவின் அரசியல் ஆலோசகரனாஅகமது படேல், பொதுச் செயலாளர் அம்பிகா சோனி இருவரும் பேச்சு நடத்தினர்.

அப்போது, நான் தவறாக எதையும் பேசவில்லை. 1967 முதல் காமராஜர் ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்று பேசி வருகிறோம்.அதைத்தான் அன்றும் பேசினேன். புதிதாய் எதையும் பேசிவிடவில்லை என்றார்.

ஆனாலும் கருணாநிதியை புண்படுத்தும் விதத்தில் பேசியது ஏன் என சோனியாவின் சார்பில் இளங்கோவனுக்கு அகமது படேல் டோஸ்விட்டார்.

அம்பிகா சோனி விளக்கம்:

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அம்பிகா சோனி, காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவுகளை வெளியிட யாருக்கும் (இளங்கோவன்)கட்சி மேலிடம் அதிகாரம் கொடுக்கவில்லை. கூட்டணி ஆட்சி என்ற கருத்தை யாரும் தனிப்பட்ட முறையில் பேச வேண்டியதில்லை.

தமிழகத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம். வரும் சட்டசபைத் தேர்தலிலும் திமுகதலைமையில் கூட்டணியில் இணைந்தே போட்டியிடுவோம் என்றார்.

இளங்கோவன் பேச்சினால் கடுப்பாகியிருக்கும் கருணாநிதியை சந்தித்துப் பேச காங்கிரஸ் மேலிடத் தலைவர் ஒருவரை சென்னைக்குஅனுப்பவும் சோனியா காந்தி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X