ரயில்வே பட்ஜெட்: தமிழகத்துக்கு 6 புதிய ரயில்கள்!
டெல்லி:
இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 43 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 6 ரயில்கள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அவற்றின் விவரம்:
1. சென்னை-பெங்களூர் சதாப்தி (வாரம் 6 நாட்கள்)
2. சென்னை-பாண்டிச்சேரி புதிய ரயில்
3. சென்னை- செகந்திராபாத் இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில்
4. கும்பகோணம்-தஞ்சாவூர் புதிய ரயில்
5. மதுரை- மானாமதுரை புதிய பாஸஞ்சர் ரயில்
6. தஞ்சாவூர்-திருவூரூர் புதிய பாஸஞ்சர் ரயில்
தூரம் நீட்டிக்கப்பட்ட ரயில்கள்:
1. சென்னை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் கோவை வரை நீட்டிப்பு
2. சென்னை- விசாகபட்டிணம் எக்ஸ்பிரஸ் புவனேஸ்வர் வரை நீட்டிப்பு
3. மைசூர்-தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் கும்பகோணம் வரை நீட்டிப்பு
4. கோவை-தஞ்சை எகிஸ்பிரஸ் கும்பகோணம் வரை நீட்டிப்பு
5. திருச்சி-தஞ்சை 2 பாஸஞ்சர் ரயில்களும் திருவாரூர் வரை நீட்டிப்பு
டெல்லி-சென்னை சூப்பர் பாஸ்ட் ரயில்:
டெல்லி தாதர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் சூப்பர் பாஸ்ட் ரயிலாகிறது. இந்த ரயில் 150 கி.மீ. வேகத்தில் ஓடவுள்ளது. மொத்தமே இந்தபட்ஜெட்டில் இரண்டு சூப்பர் பாஸ்ட் ரயில்களுக்குத் தான் அனுமதி தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கப்பட்ட ரயில்கள்:
வாரம் 6 நாட்கள் இயக்கப்பட்ட சென்னை எழும்பூர்- திருவனந்தபுரம் இடையிலான அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இனிமேல் தினசரிஇயக்கப்படும்.
வாரம் ஒரு நாள் மட்டும் இயக்கப்படும் சென்னை எழும்பூர்- தென்காசி இடையிலான பொதிகை எக்ஸ்பிரஸ் இனி வாரம் இரு முறைஇயக்கப்படும்.
பிராட் கேஜ் பணிகள்:
கும்பகோணம்- மயிலாடுதுறை, மானாமதுரை-மண்டபம், திருச்சி-புதுக்கோட்டை, விருதாச்சலம்-ஆத்தூர் ஆகிய மீட்டர் கேஜ் பாதைகள்அகலப் பாதைகளாக்கப்படவுள்ளன.
புதிய ரயில் பாதைகளுக்கு சர்வே:
இவை தவிர, ஈரோடு- பழனி (தாராபுரம் வழியாக), சத்யமங்கலம்- மேட்டூர் (அந்தியூர் வழியாக), மயிலாடுதுறை- காரைக்கால் இடைய(தரங்கம்பாடி, திருநள்ளாறு வழியாக), சென்னை- கடலூர் (மகாபலிபுரம் வழியாக) ஆகிய நகர்களுக்கு இடையே ரயில் பாதைகள்அமைப்பது தொடர்பாக ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அகலப் பாதை சர்வே:
இதே போல மதுரை-போடி இடையிலான மீட்டர் கேஜ் பாதையை அகலப் பாதையாக்க ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
சென்னை பறக்கும் ரயில்:
சென்னை திருமயிலை-வேளச்சேரி ரயில் பாதை 2006-07ல் தயாராகும் வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி- பரங்கிமலைஇடையிலும் மாடி ரயில். இதற்கான 3ல் 2 பங்கு செலவை தமிழக அரசு ஏற்கவுள்ளது.
அதே போல விழுப்புரம்-புதுவை இடையே மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்தப் பாதையை மின்மயமாக்கும் செலவில் பாதியைபாண்டிச்சேரி அரசு ஏற்கவுள்ளது.
சென்னை எக்மோர்- சென்ட்ரல் இடையிலான ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றப்படவுள்ளது.
திட்டத்தில் இருந்தாலும்..
மதுரை-மானாமதுரை, தஞ்சை-திருவாரூர் இடையே புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் இப்போதைக்கு அவை விடப்படும்வாய்ப்பு இல்லை. காரணம் இந்த மார்க்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகலப் பாதைப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை.
புது ரயிலா??
அதேபோல, கும்பகோணம்-தஞ்சாவூர் பாசஞர் ரயில் ஏற்கனவே பரீட்சார்த்தமாக இயங்கி வருகிறது. எனவே இதை பட்ஜெட்டில் புதியரயிலாக அறிவித்து காதில் பூ சுற்ற முயற்சி நடப்பதாகவே தெரிகிறது.
தலைநகர் சென்னையின் முக்கிய ரயில் சேவையாக கருதப்படும் சென்னை கடற்கரை- வேளச்சேரி வரையிலான மாடி ரயில் பாதைப்பணிகள் முடிவடைய இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் என்று லாலு பிரசாத் அறிவித்துள்ளார். இது சென்னை மக்களை பெரும் ஏமாற்றத்தில்ஆழ்த்தியுள்ளது.
பாராடப்பட வேண்டிய பாமக:
எது எப்படியிருந்தாலும் தமிழகத்துக்கு ஓரளவுக்கு புதிய திட்டங்களைக் கொண்டு வந்த ரயில்வேத்துறை இணையமைச்சர் வேலுவைபாராட்டாமல் இருக்க முடியாது.
ரயில்வே திட்டங்கள் விஷயத்தில் வழக்கமாக தமிழகத்தை மத்திய அரசுகள் கண்டு கொள்ளாமலேயே இருந்து வந்தன.
மத்திய ரயில்வே இணையமைச்சராக கடந்த பாஜக ஆட்சியில் பாமகவின் மூர்த்தி பதவியேற்ற பின் நிலைமை மாறியது. சராசரியாகவாரத்துக்கு ஒரு ரயில்வே திட்டத்தை தமிழகத்தில் துவக்கி வைத்து சாதனை படைத்தார்.
ஏகப்பட்ட புதிய ரயில்களையும் அறிமுகப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து ரயில்வே இணை அமைச்சராகியுள்ள ஆர்.வேலுவும்தமிழகத்தின் எதிர்பார்ப்பை ஓரளவுக்கு பூர்த்தி செய்துள்ளார்.
ரயில்வே அமைச்சர் லாலுவின் சொந்த மாநிலமான பிகாருக்கு ஏகப்பட்ட திட்டங்கள் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளன. பிகாரில் ரயில்சக்கரம் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாக்கப்படவுள்ளது.
பிகாருக்கு அடுத்தபடியாக தமிழகம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் கிடைத்துள்ளன.
வழக்கமாக ரயில்வே திட்டங்களை அமைதியாக இருந்தே வாரி சுருட்டும் கேரளத்தை இந்த முறை ரயில்வே பட்ஜெட் மொத்தமாகஏமாற்றிவிட்டது. அம் மாநிலத்துக்கு ஒரு புதிய ரயில் கூட ஒதுக்கப்படவில்லை.


