For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவகங்கை வங்கி முடக்கம்: ஜெ- சிதம்பரம் கடும் மோதல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நஷ்டமடைந்த விவகாரத்தில், அதிமுக அரசு மீது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்குற்றம் சாட்டியிருப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த வங்கியை முடக்க ரிசர்வ் வங்கி வெளியிட்ட உத்தரவுக்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அந்தநடவடிக்கையை வாபஸ் பெறுமாறு ரிசர்வ் வங்கிக்கு ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள நீண்ட அறிக்கை:

சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, மாநில அரசின் நிர்வாகத்தின் கீழ் வருவதாகவும், அதன் நிதி நிலையைமேம்படுத்துமாறு பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அரசுத் தரப்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும்,வங்கியின் சீர்குலைவுக்கு மாநில அரசே காரணம் என்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியிருப்பதாக செய்திகள்வெளியாகியுள்ளன.

வழக்கம்போல, அடிப்படை உண்மையை ஒதுக்கித் தள்ளி, அரசியல் ஆதாயம் தேட முனைந்துள்ளார் ப.சிதம்பரம். இவ்வாறுபேசுவதையே அவர் வாடிக்கையாகக் கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

31.3.1999ம் ஆண்டு நிலவரப்படி, சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நிகர மதிப்பு ரூ. 1 லட்சத்துக்கும் கீழே போய்சீர்குலைந்து விட்டது. இங்கு இந்தத் தேதிதான் முக்கியமானது.

அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்தது திமுகதான். ஆகவே, சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சீர்குலைவுக்குதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுதான் காரணம்.

1949ம் ஆண்டு வங்கி முறைப்படுத்ததுல் சட்டத்தின் 11(1) பிரிவை நிறைவு செய்யாததால், மத்திய அரசு இவ்வங்கி தொடர்ந்துசெயல்பட ஏதுவாக இவ்வங்கிக்கு முதலில் 31.3.2003 வரையிலும் பின்னர் 31.3.2004 வரையிலும் இப்பிரிவிலிருந்து விலக்குஅளித்தது.

மீண்டும் இவ்வங்கி 31.3.2007 வரை விதி விலக்கு கோரி விண்ணப்பித்தது. மாநில அரசும் 30.3.2004 அன்று பரிந்துரைத்துநபார்டு வங்கிக்கு அனுப்பி வைத்தது.

இந்த விண்ணப்பம் இன்னம் நிலுவையில் இருக்கும்போதே, இந்திய ரிசர்வ் வங்கியானது, இவ்வங்கி வைப்பீடுகளைத் திரும்பப்பெறுவதற்கும், அவற்றைப் புதுப்பிப்பதற்கும் மற்றும் வைப்பீட்டாளர்களுக்கு அவர்களுடைய கணக்கில் இருந்து ரூ. 1,000ரூபாய்க்கு மேல் திருப்பிக் கொடுப்பதற்கும் தடை விதித்து, 5.4.2005 அன்று தன்னிச்சையான, தேவையற்ற கடுமையானஉத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவுகள் ஒருதலைப்பட்சமாக பிறப்பிக்கப்பட்டுள்ளன. காரண- விளக்கம் கேட்டு இவ்வங்கிக்கு அறிவிப்பு ஏதும்கொடுக்கப்படவில்லை. உத்தேச நடவடிக்கை குறித்து மாநில அரசுக்கும் கூட தெரிவிக்கப்படவில்லை. இது மிகவும்துரதிர்ஷ்டவசமான, தேவையற்ற, கடுமையான நடவடிக்கை ஆகும்.

விவசாயிகள், கைவினைஞர்கள், நெசவாளர்கள் ஆகியோரின் தேவைகளை கருத்தில் கொள்ளாமல், அவர்களின் நலனைஅலட்சியப்படுத்தும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம் என்னுடைய அரசின் மீது பழி சுமத்துவதற்கு முன்பு இவ்வங்கி சீர்குலைந்தது திமுக ஆட்சியில்தான் என்பதனையும்,என்னுடைய அரசு உண்மையில், அச்சீர்குலைவிலிருந்து வங்கியை மீட்டது என்பதைனயும் தெரிந்து கொள்ளாமல் போனது ஏன்?

அவருடைய கூட்டணிக் கட்சிகள் செய்யும் கடும் முறைகேடுகளை எல்லாம் எனது ஆட்சி மீது போடுவதுதான் அவரது கூட்டணிதருமம் போலிருக்கிறது.

2001ம் ஆண்டில் இருந்து தமிழ்நாடு அடுத்தடுத்து கடும் வறட்சிக்கு இலக்காகியது என்பதும், இதனால் விவசாயிகளால்கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.

ஒட்டுமொத்தக் கூட்டறவுக் கடன் அமைப்பே பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தது. தேவையான நிதியுதவி அளித்து, இந்தக்கூட்டுறவுக் கடன் அமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையை விட்டு விட்டு, ப.சிதம்பரம் 2004-05ம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில், ஒரு

பணிக்குழு அமைக்கப்படும் என வெற்று அறிவிப்பை மட்டும் வெளியிட்டார்.

இதில் மேலும் மோசம் என்னவென்றால், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது அதன் நெருக்கடியானநிலையிலிருந்து மீண்டு2004-05ம் ஆண்டில் குறிப்பிடத்தகுந்த நல்லதொரு முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், இந்தக் கடும்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட்டித் தள்ளுபடி, ரொக்கத் தேவைகளுக்கான ஆதரவு நிதி முதலியவற்றுக்காக பல்வேறு திட்டங்களின் கீழ் இவ்வங்கிக்கு மாநிலஅரசு கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 16.28 கோடி நிதி வழங்கியுள்ளது.

1999ம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்டு ஒரு முறை மாற்றியமைக்கப்பட்ட கடன்களை சமாளிப்பதற்காக 2004-05ஆம்ஆண்டில் இவ்வங்கிக்கு மாநில அரசு ரூ. 6.8 கோடி வழங்கியுள்ளது. நபார்டு வங்கியிடமிருந்து ரொக்கத் தேவைகளுக்கானஆதரவு நிதியாக ரூ. 7.70 கோடி நிதியைப் பெற்றுள்ளது.

வங்கி முறைப்படுத்ததல் சட்டத்தின் 11(1) பிரிவு நிறைவு செய்யப்படாததைத் தவிர வேறு முறைகேடுகள் எதுவும்நடைபெறவில்லை. சட்டமீறல் இல்லை, எனவே சிதம்பரம் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை.

இவ்வங்கி, 31.3.2004 நிலவரப்படி, மொத்தக் கடன் நிலுவையில் 35.8 சதவீதமாக இருந்த வாராக் கடன் அளவை 31.3.2005நிலவப்படி 22.5சதவீதமாக குறைத்துள்ளது. இவ்வங்கி 2004-05ல் லாபம் ஈட்டக் கூடிய நிலையில் உள்ளது.

31.3.2005 நிலவரப்படி இவ்வங்கியின் நிகர மதிப்பு ரூ. 2.35 கோடியாக இருக்கும். எனவே இவ்வங்கி மீது ரிசர்வ் வங்கி எடுத்தநடவடிக்கை முற்றிலும் தவறானதாகும், தேவையற்றதாகும்.இதனை உடனே திரும்பப் பெற வேண்டும்.

31.3.2007 வரையிலும் வங்கி முறைப்படுத்தல் சட்டம் 11(1)வது பிரிவை பூர்த்தி செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்என்று கோரியும், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அதைப் புறக்கணித்து விட்டன. நாட்டில் உள்ள கூட்டுறவு கடன் அமைப்புகள்அனைத்தும் புனரமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருந்தும் அதை செய்ய ப.சிதம்பரம் தவறியது ஏன்?

சரியான நேரம் பார்த்து, அரசியல் அபிலாஷைகளைத் தீர்த்துக் கொள்ளும் வஞ்சக நோக்கத்தோடு, விவசாயிகள், நெசவாளர்கள்,இவ்வங்கியை நம்பியே உள்ள ஏனையோரையும் பாதிக்கின்ற இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை அவரைத் தேர்ந்தெடுத்த சிவகங்கை மக்களுக்கு எதிரானது ஆகும். என்னுடைய அரசுக்கு எதிராக அரசியல்ஆதாயம் தேடும் முயற்சியில் தன்னுடைய கண்ணையே குத்திக் கொள்கிறார் ப.சிதம்பரம் என்பது அதிர்ச்சியைத் தருகிறது.

நெடுங்காலமாக நிலவி வந்த வறட்சிக்குப் பிறகு இந்த பருவத்தில் பெய்துள்ள நல்ல மழையை பயன்படுத்தி கோடை கால சாகுபடிசெய்ய முற்பட்டுள்ள இந்த சமயத்தில், ப.சிதம்பரம் மேற்கொண்டுள்ள இந்தத் துரோகச் செயலை அவருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த தொகுதி மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

ப.சிதம்பரம் பதில்:

ஜெயலலிதாவின் காட்டாமான அறிக்கையைத் தொடர்ந்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஒரு பதில் அறிக்கை விடுத்துள்ளார்.

சிவகங்கை கூட்டுறவு வங்கி மீது நடவடிக்கை எடுத்தது ரிசர்வ் வங்கி. அது ஒரு சுதந்திரமான, தன்னிச்சையான அமைப்பு என்பதுகூட முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது.

இருப்பினும் சிவகங்கை வங்கி மீண்டும் இயங்க உதவுமாறு ரிசர்வ் வங்கி தலைவருக்கு நான் கோரிக்கை விடுத்துள்ளேன். அதைஅவரும் ஏற்றுக் கொண்டு வங்கியை ஆய்வு செய்ய நபார்ட் வங்கிக் குழுவை அனுப்ப முன் வந்துள்ளார் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X