For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ் ஆபிஸ்- 2005 சாப்ட்வேர் வெளியீடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக ஆட்சியில்தான் தமிழகத்தில் சாப்ட்வேர் தொழில்துறை வளர்ச்சியடைந்தது என அக் கட்சியின் தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.

Microsoft Indias Ravi Venkatesan receives Tamil office 2005 software from Karunanidhiமத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சி-டேக் நிறுவனம், பாரதியா என்ற புதிய தமிழ் மென்பொருளைஉருவாக்கியுள்ளது. இதன்மூலம் முற்றிலும் தமிழிலேயே கம்ப்யூட்டரைக் கையாளும் வசதி ஏற்பட்டுள்ளது.

தமிழ் ஆபீஸ் 2005 என்ற பெயரல் உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருள் வெளியிடும் விழா சென்னையில்நடந்தது.

திமுக தலைவர் கருணாநிதி இதனை வெளியிட மைக்ரோ சாப்ட் இந்தியா தலைவர் ரவி வெங்கடேசன் இதனைப்பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் த இந்து ஆசிரியர் என்.ராம், துக்ளக் ஆசிரியர் சோ, நக்கீரன் ஆசிரியர் கோபால், தினமணிபொறுப்பாசிரியர் சந்திரசேகரன், தினத்தந்தி பாலசுப்பிரமணியம், சன் டிவி, ராஜ் டிவி, விண் டிவி ஆகியவற்றின்நிர்வாகிகள், தினமலர், தினகரன், மாலைமலர் உள்பட பல இதழ்களின் அதிபர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.அவர்களுக்கும் தமிழ் ஆபீஸ் 2005 சிடிக்களை கருணாநிதி வழங்கினார்.

பின்னர் கருணாநிதி பேசுகையில், இந்தியாவிலேயே திமுக ஆட்சியில் முதல் முதலாக சாப்ட்வேர் தொழில்கொள்கை உருவாக்கப்பட்டது. அந்த முயற்சிகளின் காரணமாக இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகஅளவிலான மென்பொருள் வல்லுநர்கள் உருவாகிறார்கள், வேலை செய்கிறார்கள் என்ற நிலையை எய்திடமுடிந்தது.

வட நாட்டிலிருந்து வெளியாகும் ஏடுகள் எல்லாம் இதைப் மிகவும் பாராட்டி எழுதியிருக்கின்றன.

இந்த மென்பொருளுக்காக நீண்ட காலமாக எடுக்கப்பட்ட முயற்சிகள் இன்றைக்கு மேலும் முகிழ்த்திருக்கின்றகாட்சியினை நான் காணுகிறேன். இதற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்களை நான் பாராட்டுகிறேன் என்றார்.

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் பேசுகையில், எனது துறைக்கான 10 அம்சத்திட்டத்தை அறிவித்தபோது இந்திய மொழியில் மென்பொருள் உருவாக்கும் திட்டம் அதில் ஒன்று. கொட்டிக்கிடந்த வைரங்களைத் திரட்டி தொகுத்து அதை மாலையாக உங்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.

22 இந்திய மொழிகளிலும் ஃபாண்ட் வெளியிடும் திட்டம் உள்ளது.

இனி வரும் காலத்தில் ஆங்கிலப் பத்திரிக்கையை தமிழிலும், தமிழ்ப் பத்திரிக்கையை ஆங்கிலத்திலும்கம்ப்யூட்டரில் மொழி மாற்றிப் படிக்கும் நிலை உருவாகும்.

இந்த மென்பொருள் 30 லட்சம் நகல்கள் எடுத்து வினியோகம் செய்யப்படவுள்ளது. மேலும் www.tdil.com என்றஇணையதளம் மூலமும் இதை வினியோகிக்க ஏற்பாடு செய்துள்ளோம். அதில் பெயரைப் பதிவு செய்தால் 7நாட்களில் அதற்கான குறுந்தகடு வீடுதேடி வரும் என்றார் தயாநிதி மாறன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X