ஜெயலட்சுமி: இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல்
மதுரை:
ஜெயலட்சுமியை போலீஸார் பாலியல் மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் சிபிஐ தரப்பில் இன்று மதுரை நீதிமன்றத்தில்குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
20க்கும் மேற்பட்ட போலீஸார் தன்னை பாலியல் ரீதியாகவும், பண ரீதியாகவும் மோசடி செய்ததாக கூறிய ஜெயலட்சுமியின்புகாரை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில், குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இன்று மதுரை தலைமை குற்றவியல்நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
சிபிஐ தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், டிஎஸ்பி ராஜசேகர், இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, இளங்கோவன்,சுந்தரவடிவேலு, ஜான் ரோஸ், சப் இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேல், விக்னேஷ்வர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைசெய்யப்பட்டிருந்தது.
ராஜசேகர், ஜெயலட்சுமியை திருமணம் செய்தது உண்மைதான் என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதேசமயம்,போலீஸாருடன் தனக்கிருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி வங்கியில் கடன் பெற்று ஜெயலட்சுமி மோசடி செய்துள்ளார்.
செக் மோசடியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். திரைமறைவு வேலைகளிலும் அவர் ஈடுபட்டதாக ஜெயலட்சுமி மீதும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |