For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இடைத் தேர்தல்: வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட உத்தரவு!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுடஉத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தல்களிலேயே அதிக பாதுகாப்பும், கெடுபிடிகளும் கொண்டதாக காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டிதேர்தல் ஏற்பாடுகள் அமைந்துள்ளன. எந்தவித வன்முறைக்கும், முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்காமல் தேர்தலை நடத்திமுடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக சிறப்புத் தேர்தல் பார்வையாளராக கே.ஜே.ராவை நியமித்த தேர்தல் ஆணையம், அவர் மூலம் பல அதிரடிநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இரு தொகுதிகளிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் ராவ், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் சிம்மசொப்பமனமாக விளங்கி வருகிறார்.

பாரபட்சம் பார்க்காமல், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் என்று பயப்படாமல், இரு கட்சியினரும் செய்து வரும் விதிமீறல்களை கடுமையாக கண்டித்து வரும் ராவ், இரு கட்சியினரும் விதிகளுக்குப் புறம்பாக வைத்துள்ள பேனர்கள், கட்அவுட்டுகள், தோரணங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றை அகற்றி குப்பை லாரியில் போட்டுக் கொண்டு போய்க் கொண்டேஇருக்கிறார்.

இந் நிலையில், தற்போது புதிய உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவின்போது வன்முறையில்ஈடுபடுவோரைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் யாரும்காரணமில்லாமல் இரு தொகுதிகளிலும் நடமாடக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ராவின் உத்தரவையடுத்து வெளியூர்க்காரர்களை கண்டுபிடித்து அகற்றுவதற்காக, இரு தொகுதிகளிலும் உள்ள கல்யாணமண்டபங்களில் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். சம்பந்தமில்லாமல் கல்யாண மண்டபத்தில் தங்கியிருப்போர்அங்கிருந்து அகற்றப்பட்டு வருகிறார்கள்.

கல்யாண மண்டபங்களில் கல்யாணம் போன்ற சுப காரியங்கள் மட்டுமே நடத்தப்பட வேண்டம். வேறு எதற்கும் அனுமதிஅளிக்கக் கூடாது என்று கல்யாண மண்டப உமையாளர்களுக்கு போலீஸ் மூலமாக ராவ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதேபோல, முன் பின் தெரியாதவர்களுக்கு வீடுகள் வாடகைக்குக் கொடுக்கக் கூடாது என்றும் வீட்டு உரிமையாளர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

போலீஸ், அரசு இயந்திரத்தின் உதவியுடன் கோல்மால் செய்யத் திட்டமிட்டிருந்த அதிகவின் எண்ணத்திலும், கூட்டணிக்கட்சிகளின் தொண்டர்கள் மூலம் அதைச் சமாளிக்க, ஊர் ஊராக அடிதடிக்கு ஆள் திரட்டிக் கொண்டு வந்த திமுகவின் கனவிலும்லாரி, லாரியாக மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார் ராவ்.

போலீசாரும் அதிகாரிகளும் நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள ராவ், அதைத்கண்காணிக்க மத்தியப் படைகளையும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் பணியில் மத்திய அரசு ஊழியர்கள்: வீடியோவில் பதிவாகிறது வாக்குப் பதிவு
ராவ் வர்றார்ரா...:தெறித்து ஓடும் கரை வேட்டிகள்- காலியாகும் திருமண மண்டபங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X