• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காவிரி:கர்நாடக முதல்வருடன் பேசுவேன்- திமுக கூட்டணித் தலைவர்களிடம் பிரதமர் உறுதி

By Staff
|

சென்னை:

காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்வர் தரம்சிங்கிடம் உடனடியாக பேசுவதாக பிரதமர் மன்மோகன் சிங், திமுககூட்டணித் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

காவிரிப் பிரச்சினை தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில்நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தனர். அப்போது கருணாநிதி எழுதிய கடிதத்தை பிரதிநிதிகள் குழு மன்மோகன்சிங்கிடம் கொடுத்தது.

அந்தக் கடிதத்தில் கருணாநிதி எழுதியுள்ளதாவது: கடந்த 1990ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி வி.பி.சிங் பிரதமராகஇருந்தபோது காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

1991ம் ஆண்டு நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில் தமிழக காவிரிப் பாசனப் பகுதிக்குஒவ்வொரு ஆண்டும் 205 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என கூறியிருந்தது.

இதில் ஒவ்வொரு மாதமும் கர்நாடகம் வழங்க வேண்டிய நீரின் அளவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்டஇடைக்கால உத்தரவை வெளியிடுவதற்கு நடுவர் மன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில்உறுதிப்படுத்தியுள்ளது.

கர்நாடகம் இந்த உத்தரவை ஒருபோதும் நிறைவேற்றியதில்லை. அம்மாநில அணைகளில் போதிய நீர் இருந்தும் தண்ணீர்திறந்து விடுவதில்லை. இதை எல்லா ஆவணங்களும் தெளிவுபடுத்தும்.

காவிரி பாசனப் பகுதியில், விவசாயத்தை மட்டுமே நம்பி பல லட்சம் விவசாயக் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும்தொடர்ந்து துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். வறுமையிலும், சோகத்திலும் வாழும் அந்த விவசாயிகளை, அதிலிருந்து மீட்டு,அவர்களுக்கு அனைத்து வகைகளிலும் உதவிட அரசு நிர்வாகம் கடமைப்பட்டுள்ளது.

குறுவைப் பயிரை வெற்றிகரமாக சாகுபடி செய்ய ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 107 டிஎம்சி தண்ணீர் தேவை. கடந்த 4ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள், மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாதகாரணத்தால் சாகுபடியை மேற்கொள்ள முடியாமல் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

சமீபத்தில் மேட்டூர் அணைக்கு பெருமளவில் தண்ணீர் திறந்து விட்டதாக கர்நாடகம் கூறக் கூடும். ஆனால் மேட்டூர் அணைக்குவந்ததெல்லாம் கபினி அணை நிரம்பியதால், வெளியான உபரி நீர்தான். இதுதான் உண்மை.

அந்த உபரி நீரும், விநாடிக்கு 25,000 கன அடி நீர் என்ற அளவில் வந்து கொண்டிருந்தது. இப்போது அது 5000 கன அடியாககுறைந்து விட்டது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, வழங்கத் தவறிய நீர் இன்னும் ஏராளமாக உள்ளது.

இந் நிலையில் தமிழக விவசாயிகளின் அவசரமான, கட்டாயமான தேவையைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டுக்குச் சேரவேண்டிய உரிய நீரை வழங்கிட கர்நாடக அரசை வலியுறுத்துவதற்கு ஏற்ற வகையில் தாங்கள் தலையிட வேண்டும்.

காவிரி நீர் ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் தங்களின் தலையீடு, விவசாயிகள் விரும்பி எதிர்பார்க்கும்விளைவுகளை உருவாக்கும் என்று நம்புவதாக கருணாநிதி கூறியுள்ளார்.

முன்னதாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் டெல்லி சென்ற திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரதமரைசந்தித்து காவிரிப் பிரச்சினை தொடர்பாக மனு ஒன்றைக் கொடுத்தனர்.

இந்த சந்திப்பில் அன்பழகன், ஜி.கே.மணி, ஜி.கே.வாசன், எல்.கணேசன், தா.பாண்டியன், டி.கே.ரங்கராஜன், மத்தியஅமைச்சர்கள் ப.சிதம்பரம், தயாநிதி மாறன், மணிசங்கர அய்யர், அன்புமணி, டி.ஆர்.பாலு, ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஜெயலலிதா சொந்தம் கொண்டாடுவார்:

கர்நாடக அரசு உடனடியாக தண்ணீர் திறந்து விட கர்நாடகத்தை வலியுறுத்த வேண்டும். இல்லாவிட்டால் காவிரிப் பாசனப்பகுதி விவசாயிகளின் துயரம் அதிகமாகி விடும். கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளது.

காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் வேலை தேடி பஞ்சாப் மாநிலத்திற்குச் செல்லக் கூடிய அளவுக்கு சோகம் அதிகமாகஉள்ளதாகவும் பிரதமரிடம் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்சினை இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினை அல்ல, மாறாக தேசிய அளவில் விவசாய உற்பத்தியில்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று புதுவை பாமக எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் தெரிவித்தார்.

மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் அரசியல் கலந்து பேசுகையில், இந்தப் பிரச்சினைக்கு இன்றே முடிவெடுங்கள். நாளைஉங்களை (பிரதமரை) ஜெயலலிதா சந்திக்கவுள்ளார். அதன் பிறகு முடிவெடுத்தால் அதற்கு அவர் சொந்தம் கொண்டாடிவிடுவார் என்றார்.

சந்திப்புக்குப் பின்னர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இப்பிரச்சினை குறித்து நன்றாகத் தெரியும் என்று பிரதமர்தெரிவித்தார். இதுதொடர்பாக திங்கள்கிழமை இரவே கர்நாடக முதல்வருடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகஉறுதியளித்துள்ளார்.

இவ்வளவு கொடுங்கள் என்று நாங்கள் கோரவில்லை, எவ்வளவு நீர் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்றார் அன்பழகன்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X