For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏட்டு வீட்டுக்குச் சென்று பாராட்டிய டிஜிபி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அம்பத்தூர் போக்குவரத்து தலைமைக் காவலர் முத்தையாவின் நேர்மையான பணி, மனிதாபிமானத்தைக்கேள்விப்பட்டு வியந்த தமிழக காவல் துறை தலைவர் (டிஜிபி) அலெக்சாண்டர், அவரது வீட்டுக்கே சென்று பாராட்டி, பரிசும்வழங்கினார்.

அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் போக்குவரத்துப் பிரிவுத் தலைமைக் காவலராக இருப்பவர் முத்தையா.இப்பகுதியில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் மிக கடமையுடன் ஈடுபட்டு அப்பகுதி மக்களின் நன்மதிப்பைப்பெற்றவர்.

அதிக போக்குவரத்து உள்ள இந்த பகுதியில் மிகுந்த திறமையோடும், புத்தி சாதுர்யத்தோடும், அசாத்திய பொறுமையுடனும்முத்தையா செயல்படுவதால், அந்தப் பகுதி மக்கள் அனைவரின் அன்பையும் பெற்றவர் முத்தையா.

முத்தையா குறித்து பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகின. இதைப் பார்த்த டிஜிபி அலெக்சாண்டர் அவரை நேரில்சந்தித்துப் பாராட்ட முடிவு செய்தார். இதற்காக முத்தையாவை டிஜிபி அலுவலகத்திற்கு வரவழைக்காமல் நேராக அவரதுவீட்டிற்கே சென்று பாராட்டினால் என்ன என்று யோசித்த அவர், உடனடியாக அதை செயல்படுத்தினார்.

அலெக்சாண்டருடன், உளவுப் பிரிவு கண்காணிப்பாளர் சிவனாண்டி மற்றும் அதிகாரிகளும் சென்றனர். வழியில் அம்பத்தூர்காவல் நிலையத்திலும், எஸ்டேட் காவல் நிலையத்திலும், ஆட்டோ நிறுத்தங்களிலும் முத்தையா குறித்து அலெக்சாண்டர்விசாரித்தார்.

அனைவருமே சொல்லி வைத்தது போல முத்தையாவைப் புகழ்ந்து தள்ளினர். இதனால் சந்தோஷமடைந்த அலெக்சாண்டர்காரை நேராக முத்தையா வீட்டுக்கு விட்டார். காரிலிருந்து டிஜிபியும், உயர் அதிகாரிகளும் இறங்கியதைப் பார்த்தமுத்தையாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

பதட்டத்துடன் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார். முத்தையாவின் மனைவிக்கும் சந்தோஷமும், இன்ப அதிர்ச்சியுமாகஇருந்தது. அவர்களை அமர வைத்த அலெக்சாண்டர் முத்தையாவின் பணிகள் குறித்துப் பாராட்டினார். அத்தோடு அவரதுகுடும்பம் குறித்தும் விசாரித்தார்.

அப்போது முத்தையாவின் மனைவி, தனது கணவருக்கு நரம்பியல் பிரச்சினை இருப்பதாக டிஜிபியிடம் தெரிவித்தார்.இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அரசு செலவில் சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

பின்னர் முத்தையாவின் பணிகளைப் பாராட்டி அவருக்கு ரூ. 1000 அன்பளிப்பாக கொடுத்தார். அதன் பின்னர் அங்கிருந்துசென்றார். டிஜிபியே வந்து தன்னைப் பாராட்டிச் சென்றது குறித்து முத்தையா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டிஜிபி என்பவர் காவலர்களுக்கு தலைவர் மட்டுமல்ல, அவர்களது குடும்பங்களுக்கும் குடும்பத் தலைவர் போல. நேர்மையாகபணியாற்றினால் நிச்சயம் நம்மைத் தேடி பெருமை வந்து சேரும். நான் எனது கடமையைத் தான் செய்தேன். அதற்கு இன்றுபாராட்டு கிடைத்துள்ளது. இதை வாழ்நாளில் மறக்க மாட்டேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X