For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மது விற்பனையில் போயஸ் தோட்டத்து பினாமி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

போயஸ் தோட்டத்தின் பினாமியான மிடாஸ் கோல்டன் நிறுவனத்தின் மதுவை விற்பனை செய்வதற்காகத் தான் மதுக்கடைகளை அரசே எடுத்து நடத்துகிறது என்று திமுக துணைப் பொதுச் செயலாளரான ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டைக்கூறியுள்ளார்.

வேலூர் திமுக மாநாட்டில் பேசிய பேச்சாளர்களில் மு.க. ஸ்டாலினுக்கு மிக பயங்கர கைத் தட்டல் கிடைத்தது. அவரது உரைஅவ்வளவு ஆவேசமாக இருந்தது. அதன் சுருக்கம்:

கழகத்தின் பொருளாளர் ஆற்காட்டாறும், பொன்முடியும், துரைமுருகனும் சேர்ந்து இந்த மாநாட்டை மிகப் பெரிய வெற்றிமாநாடாக நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.

திமுக என்பது கூடுக் கலையும் காகங்கள் அல்ல... கூடிப் பொழியும் மேகங்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்மக்களுக்கு சேவை செய்வர்கள் நாங்கள். பதவிக்கு அலைபவர் அல்ல கருணாநிதி.

கருணாநிதியால் பதவிகளுக்குத் தான் பெருமை. சட்டமன்றத் தேர்தல் வருகிறது. மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி ஓட்டுவாங்கலாம் என்ற தீவிர யோசனையில் இருக்கிறார் ஜெயலலிதா.

இருட்டில் இருக்கும் ஒருவன் பயந்து கொண்டு தனக்குத் தானே சத்தம் போட்டு பேசிக் கொள்வானாம். அது மாதிரித் தான்இருக்கிறது ஜெயலலிதாவின் நடவடிக்கைகள். தேர்தல் பயத்தால் தினம் ஒரு திட்டத்தை அறிவித்துக் கொண்டிரக்கிறார்.

ஜெயலலிதாவின் ஆட்சியில் 4 ஆண்டுகளில் 4 தலைமைச் செயலாளர்கள் மாற்றப்பட்டுவிட்டனர். 4 வருடத்தில் சென்னைக்குஐந்தாவது போலீஸ் கமிஷ்னர் வந்திருக்கிறார். அதே மாதிரி ஜெயலலிதாவி" ஆட்சியில் நான்காவது ஆண்டில் டிஜிபியாக 5வதுநபர் வந்துவிட்டார்.

திமுக தலைமையிலான கூட்டணியை உடைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு டிஜிபி பதவி தந்துள்ளாராம்ஜெயலலிதா. இதை துக்ளக் ஆட்சி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 20 நாட்களில் 3 மந்திரிகள் டிஸ்மிஸ். இதுவரை மொத்தம் 46 மந்திரிகள் மாற்றம்.ஷ்ர

உடன் பிறவா சகோதரியின் மகனை 45 வயதில் தத்தெடுத்து வளர்ப்பு மகன் என்று அறிவித்து ரூ. 100 கோடி செலவு செய்துதிருமணம் செய்து வைத்தவர் தானே இந்த ஜெயலலிதா. அதே வளர்ப்பு மகன் மீது பின்னர் கஞ்சா கேஸ் போட்டார்.

கஞ்சா கேஸ் போடப்பட்டவர் சில நாட்களில் ஜாமீனில் வந்துவிட்டார். அதன் மர்மம் என்ன? அதே போல செரீனா மீதும் கஞ்சாகேஸ். ஜெயலலிதா தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள போடுவது தான் கஞ்சா கேஸ்.

அரசே மணல் வியாபாரம் செய்கிறது. இதில் ஏகப்பட்ட கொள்ளை நடக்கிறது. அதைத் தட்டிக் கேட்கும் அதிகாரிகளைலாரியை விட்டு ஏற்றி கொல்லும் கொடூரம் நிகழ்கிறது. மது விற்பனையையும் அரசே நடத்துக்கிறது.

போயஸ் தோட்டத்தின் பினாமியான மிடாஸ் கோல்டன் நிறுவனத்தின் மதுவை விற்பனை செய்வதற்காகத் தான் மதுக்கடைகளை அரசே எடுத்து நடத்துகிறது. கேட்டால் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என்று வாய் கூசாமல் சொல்கிறார்கள்.

இந்த ஆட்சியில் மந்திரியின் தம்பியே மரம் கடத்துகிறார். அதைத் தட்டிக் கேட்ட வன அதிகாரி ராஜேந்திரனை கைது செய்துஅவர் மீது பல வழக்குகளைபப் போட்டுள்ளனர்.

இவர்கள் இப்படி அடிக்கும் கொள்ளைக்கு சுனாமி கூட தப்பவில்லை. அந்த நிவாரணத்திலும் பணத்தை சுருட்டி வருகிறார்கள்என்றார் ஸ்டாலின்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X