For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீசுடன் கண்ணாமூச்சி ஆடும் கராத்தே தியாகு: தனிப்படை டெல்லி விரைவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

துணை மேயர் கராத்தே தியாகராஜனைத் தேடி தனிப்படை டெல்லி விரைந்துள்ளதாகத் தெரிகிறது.

சமீப காலம் வரை ஆளும் தரப்பு ஆதரவாக எதிர்க் கட்சியினரை வாட்டி எடுத்து வந்த கராத்தே மீது இப்போது நெற்றிக்கண்ணைத் திறந்துவிட்டது போயஸ் கார்டன்.

கமிஷன், நில அபகரிப்பு, ஊழல், சொத்து குவிப்பு, கடத்தல்காரர்கள் தொடர்பு என கராத்தேவின் பயோ-டேட்டாவில்கிரிமினலிஸத்துக்கு பஞ்சமே இல்லை என்பதால் அவரைக் கைது செய்ய போலீசாரும் அதிகம் சிரம்பப்பட வேண்டிய நிலையில்இல்லை.

ஆனால், தனக்கு எதிராக போயஸ் தோட்டம் காய் நகர்த்துவரை முன்பே தெரிந்து கொண்டுவிட்ட கராத்தே அமைதியாகதலைமறைவாகிவிட்டார். கராத்தேவை பதவி நீக்கம் செய்தால் மீண்டும் துணை மேயர் பதவியை அதிமுக பிடிக்க முடியுமா என்பதுசந்தேகமாக உள்ளதால் அந்த நடவடிக்கையை அதிமுக எடுக்கவில்லை.

அவரைக் கைது செய்து பழி தீர்க்கும் முயற்சியில் அதிமுக தலைமை ஈடுபட்டுள்ளது. ஆனால், இந்த பிளானை மிக ரகசியமாகநிறைவேற்ற போலீசார் முயற்சித்தாலும் விஷயம் வெளியில் கசிந்துவிட்டது.

போலீஸ், அரசுத் தரப்பில் இருந்து கராத்தே குறித்து எந்த விஷயமும் வெளியில் சொல்லப்படவில்லை. படு ரகசிய வேலைகள்நடந்து வருகின்றன.

அவரைக் கைது செய்யும் முயற்சியில் வெளிப்படையான நடவடிக்கைகள் இல்லாததால், அவர் தலைமறைவாகிவிட்டதாகஅறிவிக்க முடியாத நிலையில் போலீசார் உள்ளனர். போலீசார்- அரசின் இந்த ரகசிய முயற்சிகளையே தனக்கு சாதமாகபயன்படுத்திக் கொண்டு கராத்தே எஸ்கேப் ஆகிவிட்டார்.

அவரை மிகுந்த சிரமத்துக்குப் பின் தொடர்பு கொள்ளும் நிருபர்களிடம், நான் எதுக்கு தலைமறைவாகனும்.. கோவிலுக்குத் தானேபோயிருக்கேன் என்று பதில் சொல்லிக் கொண்ருடிக்கிறார்.

இப்போது டெல்லியில் அவர் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மடக்க ஒரு சிறப்புப் படை டெல்லிகிளம்பியுள்ளதாகத் தெரிகிறது.

கராத்தே மீதான பழைய வழக்குகளைத் தோண்டியெடுக்கும் வேலையில் துணை கமிஷ்னர் கலியமூர்த்தி தலைமையில் ஒரு டீம்ஈடுபட்டுள்ளது.

கராத்தே மீதான முக்கிய புகார்கள் சில:

பல கோடி கமிஷன் வாங்கிக் கொண்டு சென்னையில் தனியார் செல்போன் நிறுவனத்துக்கு 250 இடங்களில் விளம்பரப் பலகைகள்வைக்க அனுமதி தந்தது, மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டி மாதாமாதம் மாமூல் வசூலித்தது, மாநகராட்சி நிலத்தை விற்றுபணத்தை சுவாஹா செய்தது,

கந்து வட்டித் தொழில் நடத்தியது, பணம் வாங்கிக் கொண்டு விதிகளை மீறி கட்டடங்கள் கட்ட அனுமதி தந்தது, வருமானத்தைமீறி சொத்து குவித்தது, வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூல் செய்தது, பல வீடுகளை வளைத்துப் போட்டுள்ளது ஆகியவை.

இதில் பல சொத்துக்கள் தியாகராஜனின் பினாமிகள் பெயரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போது போலீசாரிடம் சிக்காமல் பதுங்கியிருக்கும் வேறு மாநில நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறவும் முயன்று வருவதாகக்கூறப்படுகிறது.

இந் நிலையில் கராத்தே தியாகராஜனை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெரவள்ளூரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், எனது பகுதி குடிநீர் பிரச்சனை தொடர்பாகதுணை மேயரை சந்திக்கச் சென்றேன். ஆனால், அவர் அலுவலகத்தில் இல்லை. 26ம் தேதி முதலே அவரைக் காணவில்லைஎன்கின்றனர்.

அவர் காணாமல் போனது அச்சத்தைத் தருகிறது. அவர் இல்லாததால் மாநகராட்சிப் பணிகள் பாதிக்கப்பட்டு, மக்கள்பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் அவரைக் கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவால் தியாகராஜன் மற்றும் போலீஸ் இரண்டு தரப்பினருக்குமே சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X