• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

அடுத்தவர் காலில் விழ மாட்டேன்: திண்டிவனம் ராமமூர்த்தி

By Staff
|

சென்னை:

காரியம் சாதிப்பதற்காக அடுத்தவர் காலில் விழும் பழக்கம் எனக்குக் கிடையாது என்று திண்டிவனம் ராமமூர்த்திகூறியுள்ளார்.

தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி தலைமையில் வன்னிய சதாயத்தைச் சேர்ந்தகாங்கிரஸ் தலைவர்கள் சமீபத்தில் ரகசியமாக கூடி ஆலோசித்தனர்.

வன்னியர்களுக்கு தொகுதிகளை ஒதுக்காமல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கருணாநதி சதி செய்துவிட்டார். அதேபோல, அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டியில் வன்னியர்களுக்கு போதுமானபிரதிநதித்துவம் கிடைக்காமல் ஜி.கே.வாசன் சதி செய்து விட்டார்.

வன்னியர்கள தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். பிறருக்கு பல்லாக்கு தூக்குபவர்களாக இனியும் நாங்கள்இருக்க மாட்டோம். திமுகவினருக்கு கொடி பிடிக்க மாட்டோம். வருகிற சட்டசபைத் தேர்தலில்வன்னியர்களுக்குரிய தொகுதிகளை திமுக தராவிட்டால் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் எனவும்அவர்கள் எச்சரித்தனர்.

திண்டிவனத்தின் இந்தப் போக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளும், திமுகவுக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக தலைவர்கள் பலர் திண்டிவனத்தின் பேச்சு குறித்து அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து திண்டிவனம் ராமர்த்தி கூறுகையில், எனது கருத்தை எதிர்ப்பவர்கள், வரலாறு தெரியாதவர்கள். அன்றுமாணிக்கவேலன் காமல் வீல் கட்சியின் துணையோடுதான் ராஜாஜி ஆட்சி அமைத்தார். ராமசாமிபடையாச்சியாரின் துணையோடு தான் காமராஜர் ஆட்சி அமைத்தார்.

பாமக தான் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளதே, பிறகு எதற்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளும் வன்னியர்களுக்குமுன்னுரிமை என சிலர் கூறலாம். பிரச்சினை அதுவல்ல, வட மாவட்டங்களில் காங்கிரஸ் தேய்ந்து வருகிறது,வன்னியர்களுக்கு முக்கியத்துவம் தராத காரணத்தால் தான் இந்த நிலை என்பது தான் எனது கருத்து.

காங்கிரஸ் கட்சி வட மாவட்டங்களில் அழிய நான் அனுமதிக்க மாட்டேன். காமராஜர், இந்திரா, ராஜீவ்ஆகியோரிடம் வளர்ந்தவன் நான். எனது கோரிக்கை குறித்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே சோனியாகாந்தியிடம் தெரிவித்தேன். எனது கருத்தை நியாயம் என்று கூறிய அவர் அடுத்த தேர்தலில் கண்டிப்பாககோரிக்கையை நிறைவேற்றுவதாக தெவித்தார்.

வருகிற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மானம் காத்திட, வன்னியர் சமுதாயத்தின் உணர்வுகளை மதித்திடும்வகையில்,கூடுதல் தொகுதிகள், வன்னியர்களுக்கான தொகுதிகளை திமுகவிடமிருந்து கேட்டுப் பெற வேண்டும்என்பதற்காகத்தான் நான் எனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன்.

என்னை யாரும் தூண்டி விட்டு இவ்வாறு பேசவில்லை. அதிமுக மட்டுமல்ல, திமுக, கம்யூனிஸ்ட் என அனைத்துக்கட்சிகளிலும் எனக்கு நண்பர்கள் உள்ளனர். ஆனால் நான் மனிதர்களை மதிப்பவன், கொள்கைக்காகப்போராடுபவன். எனது நண்பர்கள் என்பதற்காக எனது கட்சி அரசியலில் வேறு கட்சி நண்பர்களை தலையிட நான்அனுமதிக்க மாட்டேன்.

பதவி பெறுவதற்காக யார் காலிலும் போய் விழ வேண்டிய அவசியம் எனக்குஇல்லை. கட்சித் தலைமையின்உத்தரவுப்படி பலமுறை கருணாநிதியை சந்தித்திருக்கிறேன். ஆனால் கருணாநிதி செய்வது தவறு என்று தெரிந்தால்அவரை கட்டாயம் விமர்சிப்பேன். ஜெயலலிதா தவறு செய்தாலும் விமர்சிப்பேன்.

இதற்கிடையே, ராமமூர்த்தி மீது திமுக தலைமை கடும் கோபமடைந்துள்ளது.

ராமமூர்த்தியின் பேச்சு திமுக தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இருப்பினும்நேரடியாக திண்டிவனம் ராமமூர்த்தியை தாக்கி பதில் அறிக்கையோ, பேட்டியோ கொடுத்தால், அதுவன்னியர்களை நேரடியாக விமர்சித்தது போல மாற்றப்பட்டு விடும் என்பதால் கோபத்தை அடக்கிக்கொண்டுள்ளது திமுக தலைமை.

ராமமூர்த்தியின் பேச்சு மற்றும் கருணாநதி மீதான புகார்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம்எடுத்துக் கூறவும் திமுக தலைமை தீர்மானித்துள்ளது.

திண்டிவனம் ராமமூர்த்தியின் பின்னணியில் யார் உள்ளனர், யார் அவர்களைத் தூண்டி விட்டு பேச விடுவதுஎன்பது குறித்தும் திமுகவினர் ஆராய்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே, கூட்டணியை உடைக்கும் அளவுக்கு திண்டிவனம் ராமமூர்த்தியின் பேச்சு இருப்பதாக ஜி.கே.வாசன்தரப்பு கருதுகிறது. எனவே திண்டிவனத்தார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறவும்அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X