• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

நிவாரண நிதி வழங்க வைகோ பட்ட பாடு: திருந்தாத ஜெ

By Staff
|

சென்னை:

வெள்ள நிவாரணத்துக்காக மதிமுக சார்பில் ரூ.10 லட்சத்தை தமிழக அரசிடம் வழங்க அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ,பெரும்பாடு பட வேண்டியிருந்தது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு பயந்து வைகோவிடம் பணத்தை வாங்க அதிகாரிகள் முன்வராமல் ஓடி ஒளிந்தனர்.

ஒரு வழியாக உள்துறை செயலளர் பவன் ரெய்னாவிடம் வைகோ ரூ.10 லட்சத்தை வலுக்கட்டாயமாக திணித்து விட்டுவெளியேறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:

தமிழகத்தில் சுனாமி பாதிப்பு ஏற்பட்டபோது மதிமுக சார்பில் முதன் முதலாக முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கினோம்.அதே போல் இப்போது வெள்ள நிவாரணத்துக்கு நிதி வழங்க தமிழக அரசை தொடர்பு கொண்டேன். கோட்டையில் முதல்வரும்,தலைமைச் செயலரும் இல்லை என்பது எனக்குத் தெரியும். அதனால் உள்துறை செயலரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நிதி கொடுப்பது பற்றி பேசினேன்.

அவர் தனக்கு வேறு வேலையிருப்பதாக கூறினார். அப்படியானால் வேறு யாராவது ஒரு அதிகாரியை குறிப்பிட்டு சொல்லுங்கள்,அவர்களிடம் நிதியைக் கொடுக்கிறேன் என்று கேட்டேன். அதற்கு அவர் எண் தொலைபேசி எண்ணைக் கேட்டார். பிறகு தொடர்புகொள்வதாக கூறினார்.

நான் பகல் ஒரு மணிக்கு மதுரை செல்ல இருப்பதால் மதியம் 12.15 மணிக்கு உங்களைச் சந்திக்க வருகிறேன் என்று உள்துறைசெயலரிடம் கூறினேன்.

அதிகாரிகளின் தயக்கத்தை அறிந்தவுடன் நான் 11.55 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு வந்தேன். உள்துறை செயலர் அவசரஅவரமாக அறையைவிட்டு வெளியேறினார். அவரை வழியில் மறித்து ரூ.10 லட்சத்திற்காக செக்கை வழங்கினேன். மாற்றுக் கட்சிதலைவர்களை கண்டால் அதிகாரிகள் இந்த அளவிற்கு பயப்படுகின்றனர்.

தமிழகத்தில் சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் கடந்த பல ஆண்களில் இல்லாத அளவுக்கு வெள்ளச் சேதம்ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாழாய் போய்விட்டன. பல ஊர்கள் நீரில் மிதக்கின்றன. போக்குவரத்துஅடியோடு ஸ்தம்பித்துவிட்டது.வெள்ளத்தில் பஸ்கள் மூழ்கியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

இது போன்ற கொடுந்துயரில் சிக்கி இருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு ஏற்கனவே கோரியுள்ள நிவாரணத்தொகையையும் இனி கோரப்படவுள்ள தொகையையும் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தலைமையில்கூட்டணி கட்சித் தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றி பிரதமரிடம் அனுப்பியிருக்கிறோம்.

தமிழகத்துக்கு அதிக நிவாரணம் வழங்கும் படி விரைவில் பிரதமரை சந்தித்துப் பேச இருக்கிறேன். வீடு உடைமைகள் விவசாயநிலம் ஆகியவற்றை இழந்தவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.

தஞ்சையில் வைகோ:

இதையடுத்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சென்ற வைகோ அங்கு வெள்ளத்தில் பஸ் சிக்கி பலியானவர்களின்உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்து நடந்த இடத்தையும் வைகோ பார்வையிட்டார்.அங்கு நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

இதே காட்டாற்று வெள்ளத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா பஸ் கவிழ்ந்துள்ளது. இதை தொடர்ந்து பாலம் கட்டஅரசுக்கு மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. அப்போதே பாலம் கட்டியிருந்தால் இந்த விபத்தை தவிர்த்து இருக்கலாம்.

மேலும் மழை காரணமாக இந்த ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய உடனேயே வருவாய் அதிகாரிகளும், போலீஸ்அதிகாரிகளும் முன்னெச்சரிக்கையாக போக்குவரத்தை தடை செய்து இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இந்தஉயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு ரூ.3 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும். காயத்துடன் உயிர்தப்பியவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

நாளை மதிமுக எம்பிகளுடன் டெல்லியில் பிரதமரை சந்தித்து தமிழகத்துக்கு தேவையான வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யவலியுறுத்துவேன் என்று கூறிார் வைகோ.

கவர்னரிடம் விஜயகாந்த் கோரிக்கை:

இந் நிலையில், தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டு உள்ள பேரிழப்பை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி காலம்தாழ்த்தாமல் உடனடியாக நிவாரண உதவி கிடைக்க தமிழக கவர்னர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேமுதி கட்சியின் தலைவர்விஜயகாந்த் கோரியுள்ளார்.

கடந்த மாதம் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தில் ஏறக்குறைய 175 பேர்கள் இறந்துள்ளனர். இந்த பேரழிவால் தமிழகம் தன்முகம்இழந்து நிற்கிறது. இந்த நிலையை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு தமிழக கவர்னர் பர்னாலா உரியநடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

விஜயகாந்த் தமது கட்சி சார்பில் ரூ.10 லட்சத்திற்கு வெள்ள நிவாரண உதவிகள் செய்யவிருப்பதாக அறிவித்திருந்ததுகுறிப்பிடத்தக்கது.

வெள்ளசேத பகுதியில் வாசன்:

தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டை மகாராஜாசமுத்திரம் காட்டாற்று பாலத்தில் பஸ் உருண்டு வெள்ளத்தில் மூழ்கி பலர்உயிரிழந்தனர். இவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் சந்தித்து அனுதாபம் தெரிவித்தார்.

பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

பட்டுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட பஸ் விபத்துகளை நினைவில் கொண்டு தமிழக அரசு முதல்பணியாக தரைப் பாலங்களை மாற்றி அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. கொள்ளிடம் படுகை பகுதியில் பலகிராமங்கள் நீர் சூழ்ந்து உள்ளன. முழுமையான சீரமைப்பு சூழ்நிலை உருவாகும் வரை அவர்களுக்கு உணவு தங்குவதற்குபாதுகாப்பான இடம் ஆட்சியாளர் செய்து தர வேண்டும்.

மத்திய அரசு உண்மை நிலை அறிந்து போதிய நிதியினை வழங்கிட வேண்டுகிறேன். இது போல் பாதிக்கப்படுகிற காலத்தில்பொது மக்கள், தொண்டு நிறுவனங்கள் தைரியமாக உதவிகள் செய்வது போல் காங்கிரஸ் தொண்டர்களும் செயல்பட வேண்டும்என்றார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X