பிரபாகரன் கெடு: நார்வே குழு இந்தியா வருகை
கொழும்பு:
தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற இலங்கை அரசு உடனே முன் வராவிட்டால் டிசம்பர் 31க்குப் பின்தங்களது போராட்டம் தீவிரமடையும் என விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளதையடுத்து அதிபர் ராஜபக்ஷே அவசரஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவது குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் தனது கட்சியின் மூத்ததலைவர்களுடன் ராஜபக்ஷே ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதே நேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட மிக முக்கிய காரணமாக இருந்த நார்வேயை ராஜபக்ஷே தொடர்ந்து புறக்கணித்துவருகிறார். அந் நாட்டு அமைதிக் குழுவின் உதவிகள் குறித்து தனது அறிக்கைகள், பேட்டிகள், உரைகளில் இருட்டடிப்பு செய்துவருகிறார்.
இதனால் இலங்கை விவகாரத்தில் நார்வே தொடர்ந்து தலையிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதற்கிடையே இந்த வாரம் எரிக் சோல்ஹைம் தலைமையில் இலங்கை வரவிருந்த நார்வே தூதுக் குழு அந்தப் பயணத்தை ஒத்திவைத்துவிட்டது. அந்தக் குழுவினர் இந்தியாவுக்கு வந்து வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளனர்.
இந் நிலையில், ராஜபக்ஷேவின் பேச்சுவார்த்தை அழைப்பை விடுதலைப் புலிகள் ஏற்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.அந் நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
விடுதலைப் புலிகள் தீவிரவாதத்தையும் வன்முறையையும் கைவிட வேண்டும். சிறுவர்களை படையில் சேர்ப்பதை நிறுத்தவேண்டும். பிரபாகரனின் பேச்சைப் பார்த்தால் அவர் இதுவரை எந்த நோக்கத்தை முன் வைத்துப் போராடினாரே அதையே அவர்தொடர்ந்து செய்திடும் முடிவில் இருப்பது புரிகிறது.
இந்த விஷயத்தில் நார்வேயின் மத்தியஸ்தத்தை அமெரிக்கா தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |