For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குமரியில் கடலரிப்பை தடுக்க தடுப்புச் சுவர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அரிப்பை தடுக்க 13 இடங்களில் தடுப்பு சுவர் கட்டுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் 1076 கிமீ நீளமுள்ள கடற்கரைப் பகுதிகள் புயல், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களினால் அடிக்கடிபாதிப்புக்குள்ளாகி அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் பெரும்சிரமத்திற்கும், துன்பங்களுக்கும் ஆளாகின்றனர்.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வசித்து வரும் மக்களையும் மற்றும் அவர்தம் உடைமைகளையும் இம்மாதிரியானஇயற்கை சீற்றங்களிலிருந்து நிரந்தரமாகப் பாதுகாக்க தடுப்பு சுவர்கள் கட்டுதல், தூண்டில் வளைவு அமைத்தல் போன்ற பல்வேறுபணிகளை மேற்கொள்ளும் வகையில் தொலை நோக்குப் பார்வையுடன் ஒரு நிரந்தர திட்டம் தயாரிக்க நான் ஆணையிட்டேன்.

இதன்படி கடலரிப்புத் தடுப்பு திட்டங்களை உடனே துவக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்தில்ரட்சகர் தெரு என்னுமிடத்தில் வங்ககடற்கரையையொட்டி 500 மீ நீளத்திற்கு 4.80 கோடி ரூபாய் மதிப்பில் தூண்டில் வளைவுஒன்றை அமைப்பதற்கு நான் ஆணை பிறப்பித்துள்ளேன்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடலையொட்டி உள்ள கடற்கரைப் பகுதியில் சில மாதங்களாக தொடரும் கடல்அலைச் சீற்றங்களிலிருந்து அப்பகுதி மக்களைப் பாதுகாக்கும் வகையில் 6.20 கோடி ரூபாய் மதிப்பில், நீரோடித்துறை,மார்த்தாண்டம் துறை, வள்ளவிளை, சின்னத்துறை, இரவிப்புத்தன் துறை, தூத்தூர், பூத்துறை, இரையுமன் துறை,தேங்காய்பட்டணம், முள்ளூர் துறை, கோடி முனை, பெரிய விளை துறை, பெரிய காடு மற்றும் கோவளம் ஆகிய 13 இடங்களில்கடல் அரிப்பு தடுப்புச் சுவர்கள் கட்ட நான் ஆணையிட்டுள்ளேன்.

இப்பணிகளை அனைத்தையும் விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு நான் ஆணை பிறப்பித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X