For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மன்னித்து விடுங்கள் அம்மா! ஏ.சி.எஸ். கெஞ்சல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நான் செய்த தவற்றையெல்லாம் மன்னித்து, கடவுள் போல கருணை காட்டி, கல்லூரிக் கட்டிடத்தை இடிப்பதை நிறுத்தஉத்தரவிடுங்கள் என்று இடிபட்டுக் கொண்டிருக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், புதிய நீதிக்கட்சித் தலைவருமான ஏ.சி.சண்கம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கல்லூரிகளைக் கட்டிய ஏ.சி.சண்கம் இப்போது பெரும் அவஸ்தையில் சிக்கியுள்ளார். ரூ. 40 கோடிமதிப்புள்ள கட்டிடங்களை புல்டோசர்களைக் கொண்டு இரவு பகலாக இடித்து வருகிறது திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்.

இடிப்பைத் தடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அவர் போட்ட மனு தள்ளுபடியாகி விட்டது. உச்சநீதிமன்றம் தலையிட முடியாதுஎன்று மறுத்து விட்டது. இந்த நிலையில் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது சிறந்தது என்றஅடிப்படையில், முதல்வர் ஜெயலலிதாவிடம் சரண்டர் ஆகியுள்ளார் ஏ.சி.சண்கம்.

மிகவும் உருக்கமாக ஜெயலலிதாவுக்குக் கோரிக்கை விடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையாவது:

முதல் அமைச்சர் புரட்சித் தலைவி அவர்களுக்கு, டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழக நிலப் பிரச்சினை சம்பந்தமாககல்லூரி நிர்வாகம் எடுத்த முடிவுகள் தவறானவை. நான் ஊரில் இல்லாததால், மேல் முறையீடு பிரச்சினையை எனக்குத்தெரியாமல் கல்லூரி நிர்வாகம் எடுத்த முடிவாகும்.

உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல் முறையீட்டு வழக்கைத் திரும்பப் பெறக் கோரி வழக்கறிஞர்களுக்குத்தெரிவித்துள்ளேன். தாங்கள் பெரிய மனதுடன் கல்லூரி நிர்வாகம் செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து விட்டு கடவுள்போல கருணை காட்ட வேண்டுகிறேன். தங்கள் விசுவாசியாக என்றும் இருப்பேன் என்று உருகித் தள்ளியுள்ளார் ஏ.சி.எஸ்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாகவும் வேலூரைச் சேர்ந்த தாஜ்முல் அஹமத் என்ற முன்னாள் கல்லூரி மாணவர் கொடுத்தமிரட்டல் புகார் காரணமாகவும் போலீசார் ஏ.சி. சண்முகத்தை கைது செய்ய தேடி வருகின்றனர். ஆனால், அவர் தனது மனைவி,கல்லூரியின் டீனுடன் தலைமறைவாகி விட்டார்.

அவரைத் தேடி ஆரணி, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ள அவரது கல்லூரிகளுக்கு தனிப்படை போலீசார்விரைந்துள்ளனர்.ே

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X