For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மா.. அம்மா.. அம்மா.. மற்றவறெல்லாம் சும்மா...: டிஆரின் அம்மாவிற்கோர் கீதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

எம்.ஜி.ஆர். நகர் சம்பவத்தையும், வெள்ள நிவாரணப் பணிகளையும் மிகைப்படுத்தி, தவறான செய்திகளை திமுகவும், அதன்குடும்பத் தொலைக்காட்சியும், பத்திரிக்கையும் வெளியிடுவதாக லட்சிய திமுக தலைவரும், திரைப்பட இயக்குனருமானடி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டி:

மாலை நாளிதழ்களான மாலைமுரசும், மாலை மலரும்,எம்.ஜி.ஆர். நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் இறந்ததாகசெய்திகள் வெளியிட்டுள்ளன. மற்ற காலைப் பத்திரிக்கைகளிலும் இதுபோலவே செய்திகள் வந்துள்ளன.

ஆனால் திமுக சார்பில் நடத்தப்படும் தமிழ்முரசு நாளிதழில் மட்டும் 50 பேர் இறந்து விட்டதாக மிகைப்படுத்தி செய்திவெளியிட்டிருக்கிறார்கள். 42 ஐ கூட்டி 50 என்று செய்தி வெளியிடுவது எத்தனை அநியாயமான செயல்? 8 பேரின் உயிர்அவர்களுக்கு அவ்வளவு மட்டமாக போய் விட்டதா?

இதே போலத் தான் திமுக சார்பு தொலைக்காட்சியிலும் எதையுமே மிகைப்படுத்தி காட்டுகிறார்கள். மக்கள் மறியல் செய்கிறார்கள்என்று இல்லாத மறியலை தொடர்ந்து டிவியில் காட்டி வருகிறார்கள். பெண்கள் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தாலும்,அவியல் செய்து கொண்டிருந்தாலும் அவர்கள் மறியல் செய்கிறார்கள் என்று பொய்யாக கூறுகிறார்கள்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அள்ளிக் கொடுத்து வருகிறார் அம்மா. ஆனால் கலைஞரோ கிள்ளிக் கூடகொடுக்காதவர். இதுதான் உண்ம்ை. இதை மறைத்து திமுகவும், அதன் தொலைக்காட்சி, பத்திரிக்கைகளும் என்ன தான் பொய்சொன்னாலும் அதை மக்கள் நம்பப் போவதில்லை என்றார்.

இதேபோல டி.ஆர். வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்று திமுக கூட்டணிக்கட்சிகள் தீர்மானம் போட்டுள்ளனர். இதுவே முதல் அமைச்சராக கலைஞர் இருந்திருந்தால் உடனே பதவி விலகியிருப்பாரா?சொல்ல முடியுமா வரலாறு, சொல்லிக் காட்டட்டுமா நான் வேறு வரலாறு?

கோவையில் நடந்தது தொடர் குண்டுவெடிப்பு, அதில் தான் எத்தனை பேர் உயிரிழப்பு, எத்தனை பொருள் இழப்பு, உடனேமுதல்வரான கலைஞர் ஏற்றாரா பொறுப்பு, இல்லை ஆட்சியை விட்டுத் தான் செய்தாரா வெளிநடப்பு.

கலைஞர் ஆட்சியிலே நெல்லைச் சீமையிலே மாஞ்சோலை தோட்டத்து விவசாயிகள் அடித்துச் செல்லப்பட்டு தாமிரபரணி ஆற்றுவெள்ளத்திலே இரத்த வெள்ளமாய் மிதந்தார்கள். அப்போது இவரைப் பார்த்து பதவி விலகச் சொல்லியிருக்க வேண்டும்தாமிரபரணி, ஆனால் அதையும் மீறி கலைஞர் பாடினார் கைகழுவும் பரணி. ஆட்சியில் இருந்து ஆள நினைத்தார் தரணி.

கலைஞரைப் பொறுத்தவரையில் எப்போதுமே மாமியார் உடைத்தால் அது மண்சட்டி, மருமகள் உடைத்தால் அது பொன் சட்டிஎன்ற பாணியில் தான் பேசுவார். அம்மா மீது சேற்றை அள்ளி வீசுவார்.

வதந்தி பரப்பியதால் தான் வியாசர்பாடியில் முன்பு 6 பேர் இறந்தனர். இப்போது அதே பாணியை பயன்படுத்தி ஆறை ஏழோடுபெருக்கி 42 ஆக பலியை உயர்த்தியிருக்கின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஒன்று மட்டும் நிச்சயம். சுனாமி வந்த போதும் சரி, மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோதும் சரி, அழுகின்றபிள்ளைகளைத் தேடி ஓடி வரும் அன்னையாய் வந்தது நம் அம்மாதான்.

சுனாமி வந்தபோது உடல் நலம் சரியில்லை என்று சொல்லி மருத்துவமனையில் போய் படுத்துக் கொள்ளவில்லை அந்த அம்மா.தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் முடிவில் தர்மமே வெல்லும். தமிழகத்தின் வரலாறு இருக்கும் வரை அம்மாவின்அயராத பணியை அது எடுத்துச் சொல்லும் என்று கூறியுள்ளார் டி.ஆர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X