For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்ணுடன் உல்லாசம்: அலங்கோலமாக சிக்கிய பாஜக-ஆர்எஸ்எஸ் விஐபி

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

Sanjayமும்பையில் பாஜக வெள்ளி விழா மாநாடு நடத்தி வரும் நிலையில், அக் கட்சியில் உள்ள ஆர்எஸ்எஸ்சின் முக்கிய நிர்வாகியானசஞ்சய் ஜோஷி பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் அடங்கிய சிடி வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் தனது பாஜக பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய பிரமுகர் சஞ்சய் ஜோஷி. குஜராத்தைச் சேர்ந்த இவரை ஆர்எஸ்எஸ், பாஜகவின் பொதுச்செயலாளராக நியமித்தது.

வாஜ்பாய் ஆட்சியின்போது பாஜக அரசு, ஆர்எஸ்எஸ்சின் கொள்கைகளை நிறைவேற்றுவதை சஞ்சய் ஜோஷி உறுதி செய்துவந்தார். வாஜ்பாய் அரசின் கடைசி ஓராண்டில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான முடிவுகள் ஜோஷியால் எடுக்கப்பட்டவையே.

சில மாதங்களுக்கு முன் சஞ்சய் ஜோஷியுடன் தனக்கு நெருக்கமான உறவு உள்ளது என்று கூறி ஒரு மராட்டியப் பெண், பத்திரிகைஅலுவலகங்களுக்கு தகவல் அனுப்பினார். ஆனால், அதை யாரும் பொருட்படுத்தவில்லை.

இந் நிலையில் இப்போது பாஜகவின் வெள்ளி விழா மாநாடு மும்பையில் நடந்து வரும் நிலையில் அந்தப் பெண்ணுடன் சஞ்சய்ஜோஷி கொஞ்சிக் குலாவும் ஒலி அடங்கிய ஆடியோ கேசட் வெளியானது.

ஆனால், அது போலியான கேசட் என்று பாஜக தலைவர்கள் கூறினர்.

இதையடுத்து அடுத்த சில மணி நேரங்களிலேயே பெண்ணுடன் ஜோஷி உல்லாசமாக குஜால் செய்யும் காட்சிகள் அடங்கியவீடியோ சிடி வெளியானது.

இதையடுத்து பாஜக மாநாட்டில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கட்சியில் ஆர்எஸ்எஸ்சின் தலையீட்டை விரும்பாத சிலபாஜகவினர் தான் இந்த சிடியை வெளியில் விட்டதாகக் கூறபபடுகிறது.

ஆர்எஸ்எஸ்சின் நெருக்குதலால் இந்த மாநாட்டின் இறுதியில் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அத்வான் விலகப்போகிறார். மேலும் அவரை மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் விலகுமாறு ஆர்எஸ்எஸ் நெருக்கி வருகிறது.அதை அத்வானி ஏற்க மறுத்து வருகிறார்.

இப்படியாக பெரும் கோஷ்டி கலாட்டாவுடன் நடந்து வரும் பாஜகவின் வெள்ளி விழா மாநாட்டில் ஆர்எஸ்எஸ்சுக்கு பெரும்நெருக்கடி தரும் வகையில் ஜோஷியில் குஜால் சிடி வெளியாகியுள்ளது. இதை பாஜகவைச் சேர்ந்த சிலரே வெளியிட்டுள்ளதாக்கூறப்படுகிறது.

இந்த சிடி வெளியான விவகாரத்தில் உமா பாரதியின் கைவரிசை இருக்கலாம் என பாஜக தலைவர்கள் நறநறக்கின்றனர். தனக்குமீண்டும் முதல்வர் பதவி கிடைக்காமல் போனதிலும், தான் கட்சியை விட்டு நீக்கப்பட்டதிலும் ஜேட்லி-மகாஜன்-நாயுடுவோடுசேர்ந்து சதி செய்த முக்கியஸ்தர் சஞ்சய் ஜோஷி தான் என உமா நினைக்கிறார்.

மத்தியப் பிரதேச அரசாங்கத்தில் ஜோஷி அநாவசியமாகத் தலையிடுவதாகவும் உமா ஒரு முறை குற்றம் சாட்டியிருந்தார்.

இந் நிலையில் பாஜகவின் வெள்ளி விழா மாநாட்டை ஒட்டி இந்த அஜால் குஜால் சிடியை உமா பாரதி தரப்பினர் தான் லீக்செய்திருக்க வேண்டும் என அக் கட்சியினர் கருதுகின்றனர்.

சஞ்சயி ஜோஷி மீது பெண் புகார் எழுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, இவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒருநிரோத்துடன் (காண்டம்) ஒரு பெண் எழுத்தாளர் தேசிய மகளிர் ஆணையத்துக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியிருந்தார்.ஏழையான தனக்கு உதவுவதாகக் கூறி ஜோஷி கற்பழித்துவிட்டதாக அந்த எழுத்தாளர் புகார் கூறியிருந்தார்.

ஆனால், அனுப்பியவரின் பெயர், விவரம் இல்லாததால் அதை மகளிர் ஆணையம் புகாராக பதிவு செய்யவில்லை. இப்போதுநிமிர்ந்து உட்கார்ந்துள்ள தேசிய மகளிர் ஆணையம் ஜோஷி மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. ஆணையத்தின்தலைவராக இருப்பது காங்கிரஸ் மூத்த தலைவர் கிரிஜா வியாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட பெண் தனது முழு விவரத்துடன் எனக்கு நேரடியாக ஒரு கடிதம் அனுப்பினால் போதும், நான் நடவடிக்கையில்இறங்குவேன் கிரிஜா கூறியுள்ளார். இதனால் இந்த பெண் விவகாரம் பாஜக, ஆர்எஸ்எஸ்சை அவ்வளவு லேசில் விடாது என்பதுமட்டும் உறுதி.

முதலில் ஜோஷிக்கும் பெண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வெங்கையா நாயுடு உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முழக்கம்கொடுத்த நிலையில், வெளியான வீடியோ காட்சி பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

ஜோஷி ரொம்ப நல்லவரு என்று நாயுடு பத்திரிக்கைகளுக்குப் பேட்டியளித்துக் கொண்டிருந்தபோதே, ஜோஷியை பதவியைவிட்டு விலகுமாறு ஆர்எஸ்எஸ் கூறிவிட்டது.

இதையடுத்து அவர் தனது பாஜக பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தனது தவறை அவர் ஒப்புக்கொண்டது போல் ஆகியுள்ளது.

மேலும் ஜோஷியை பாஜகவில் இருந்தும் ஆர்எஸ்எஸ் திரும்ப அழைத்து கொண்டுவிட்டது.

சிடி வினியோகிக்கப்பட்டதை அடுத்து மாநாட்டு பந்தலுக்கு வராத ஜோஷி அங்கிருந்து எஸ்கேப் ஆகி நாக்பூர் சென்றுவிட்டார்.

இப்பிரச்னை குறித்து போபால் போலீசாரிடம் அவர் புகார் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X