For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியா: மறைந்த தமிழ் வீரருக்கு பதவி உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

கேலாலம்பூர்:

மலேசிய ராணுவத்தில் பணியாற்றி இஸ்லாமிய மதத்துக்கு மாறியதால் மனைவியின் விருப்பத்தையும் மீறி உடல் அடக்கம்செய்யப்பட்ட மறைந்த தமிழ் வீரருக்கு மறைவுக்குப் பின் பதவி உயர்வு வழங்கி அந் நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

மலேசிய ராணுவத்தில் பணியாற்றிய தமிழர் மூர்த்தி மனியம் (வயது 36), கடந்த வருடம் இஸ்லாமியராக மாறினார். தனதுபெயரை முகம்மது அப்துல்லா என்று மாற்றிக் கொண்டார். ஆனால், இவரது மனைவி காளியம்மாள் தொடர்ந்து இந்துவாகவேஇருந்து வந்தார்.

கடந்த 1998ம் ஆண்டு ராணுவ பயிற்சியில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் இடுப்பில் அடிபட்டு பக்க வாதத்தால்பாதிக்கப்பட்டார். அவரை மனைவி காளியம்மாள் தான் கவனித்து வந்தார்.

இந் நிலையில் கடந்த டிசம்பர் 20ம் தேதி மூர்த்தி காலமானார். இதையடுத்து அவரது உடலை இந்து முறைப்படி எரிக்ககாளியம்மாளுக்கு மலேசிய நீதிமன்றம் அனுமதியளிக்க மறுத்தது.

அவரது உடலை இஸ்லாமிய முறைப்படி புதைக்க வேண்டும் என மலேசிய இஸ்லாமிய நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும்உத்தரவிட்டன.

இத்தனைக்கும் மூர்த்தி இஸ்லாமியராக மாறியதற்கு எந்தவிதமான சான்றிதழும் இல்லை எனவும், அவர் மதம் மாறியதைஎன்னிடம் கூறியது கூட இல்லை என்று காளியம்மாள் வாதிட்டத்தையும் நீதிமன்றங்கள் ஏற்கவில்லை.

இதையடுத்து மனைவியின் விருப்பத்தை மீறி அவரது கணவரின் உடலை மலேசிய அதிகாரிகள் புதைத்தனர்.

மலேசிய நீதிமன்றங்களின் இந்தச் செயலுக்கு அந் நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தினர் மத்தியில் கடும்எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

சில மலேசிய அமைச்சர்களே இதைக் கண்டித்துள்ளனர். இந் நிலையில் இந்துக்கள், புத்த மதத்தினர் உள்ளிட்டசிறுபான்மையினரை தாஜா செய்யும் வேலையில் மலேசிய அரசு இறங்கியுள்ளது.

அதன்படி மறைந்த மூர்த்திக்கு இப்போது பதவி உயர்வு வழங்கி மலேசிய அரசு உத்தரவிட்டுள்ளது. ராணுவத்தில் கார்போரல்என்ற பதவியில் இருந்த அவருக்கு நேற்று செர்ஜென்ட் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் முதல் இந்தப் பதவி உயர்வு அமலுக்கு வருவதாகவும், ராணுவத்தில் மூர்த்தி செய்த சேவைகளைப் பாராட்டிஇந்த பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும் மலேசிய துணை அதிபர் நஜிப் ரஜாக் தெரிவித்தார்.

எவரெஸ்ட் சிகரம் ஏறிய மலேசிய கமாண்டோ படையில் இடம் பெற்றிருந்தவர் மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X