For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எஸ்.சி.வி. விவகாரம்: அரசுக்கு சன் டிவி கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சுமங்கலி கேபிள் விஷன் மற்றும் ஹாத்வே எம்.எஸ்.ஓ (பன்முக கேபிள் ஆபரேட்டர்கள்) ஆகியவற்றை கையகப்படுத்த அரசுகொண்டு வந்துள்ள புதிய சட்ட மசோதா, தமிழகம் முழுவதும் உள்ள கேபிள் ஆபரேட்டர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை,இந்த சட்ட மசோதாவைக் கொண்டு வந்தது கண்டனத்துக்குரியது என்று சன் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சன் டிவி நிறுவனம் சார்பில் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்டஎம்.எஸ்.ஓக்கள் உள்ளன. இதில் எஸ்.சி.வி மற்றும் ஹாத்வே ஆகிய இரு எம்.எஸ்.ஓக்களை மட்டும் கையகப்படுத்த அரசு முடிவுசெய்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் பழிவாங்கும் போக்கையே இது காட்டுகிறது. தமிழகத்தில் இயங்கி வரும் எம்.எஸ்.ஓக்களில்பெரும்பாலானவை அதிமுகவினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. திருப்பூர் அதிமுக எம்.எல்.ஏ. சிவசாமியும் ஒருஎம்.எஸ்.ஓ.வை நடத்தி வருகிறார்.

ஆனால் இவற்றை எல்லாம் விட்டுவிட்டு இரண்டு எம்.எஸ்.ஓ.க்களை மட்டும் அரசு கையகப்படுத்துதவதன் பின்னணி நோக்கம்என்ன என்பதை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உணர வேண்டும்.

ஜெயலலிதா அரசின் இந்த சட்டம் அமல்படுத்தப்படுமானால், நாளை உங்களது (கேபிள் டிவி ஆபரேட்டர்களின்)எம்.எஸ்.ஓ.க்களும் பறிமுதல் செய்யப்படும் அபாயம் உள்ளது. குடியரசுத் தலைவர் தமிழக அரசின் இந்த சட்ட மசோதாவைநிராகரிக்க வேண்டும்.

ஏற்கனவே கடந்த 2001ம் ஆண்டு கேபிள் டிவிக்களை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது.அந்த சட்டத்தை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். அதே நிலை தான் தற்போதைய சட்ட மசோதாவுக்கும் ஏற்படும்.

கேபிள் டிவி நிறுவனங்களின் செயல்பாடுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. எனவே தமிழக அரசு இதில்தலையிட முடியாது. தேர்தல் வரும் சமயத்தில் எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசாரத்தை முறியடிக்கும் நோக்குடனேயே இந்தசட்ட மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழக அரசின் நடவடிக்கைக்கு தமிழக கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் காயல் இளவரசு கருத்து தெரிவிக்கையில், அரசின் இந்த சட்ட மசோதா, எம்.எஸ்.ஓக்கள்நடத்தி வரும் பல முறைகேடுகளுக்கு முடிவு கட்டும்.

மேலும், இந்த சட்டத்திலிருந்து சிறு அளவிலான, தெருவோர கேபிள் டிவி நிறுவனங்களுக்கு விலக்கு அளித்துள்ளதையும்பாராட்டுகிறோம் என்று கூறியுள்ளார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X