For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சன் டிவி மீது ரூ 2,000 கோடி நஷ்டஈடு வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சன் டிவிக்கு என வாங்கிய திரைப்படங்கள், பாடல் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகளை சட்டத்திற்குப் புறம்பாககே.டிவி, சன் மியூசிக், எஸ்.சி.வி. ஆகிய அலைவரிசைகளில் ஒளிபரப்பி தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய சன் டிவி மீது ரூ. 2,000 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குதொடருவது என தமிழ்த் திரைப்படத் யாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

Namitha தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சன் டிவிக்குஎதிராக பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்குப் பின்னர் சங்க துணைத் தலைவர் அன்பாலயா பிரபாகரன், ஏ.எம்.ரத்னம், செயலாளர்ஏ.எல்.அழகப்பன், தயாரிப்பாளர்கள் தாணு, கேயார், இப்ராகிம் ராவுத்தர், கே.ராஜன் ஆகியோர் கூட்டாகசெய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்களிடம் பிரபாகரன் கூறுகையில், சன் டிவி தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த 12ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்கள், படக் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள், சண்டைக் காட்சிகள், திரைவிமர்சனம் என்ற பெயரில் படத்தின் பாதிக் காட்சிகளை காட்டுவது, பாடல் விமர்சனம் என்ற பெயரில்முக்கால்வாசிப் பாடல்களை ஒளிபரப்புவது என சட்டத்திற்குப் புறம்பாக சன் டிவி இயங்கி வருகிறது.

சன் டிவிக்கு கொடுக்கப்பட்ட ரைட்ஸை பயன்படுத்திக் கொண்டு, கே.டிவி, சன் மியூசிக் டிவி, எஸ்.சி.வி. ஆகியதொலைக்காட்சிகளிலும் இலவசமாக ஒளிபரப்பி தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.இந்திய ரைட்ஸ் வாங்கிக் கொண்டு அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற நாடுகளிலும்ஒளிபரப்பி எங்களுக்கு பெரும் நஷ்டத்தை சன் டிவி ஏற்படுத்தி விட்டது.

எனவே சன் டிவி நிறுவனம் எங்களுக்கு ரூ. 2,000 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி வழக்கு தொடரமுடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் சாட்டிலைட் பட உரிமை வாங்காத எந்தப் படத்தின்காட்சிகலையும், பாடல்கள், நகைச்சுவை, சண்டைக் காட்சிகளையும் சன் டிவி நெட்வொர்க் பயன்படுத்தக் கூடாது.

மீறிப் பயன்படுத்தினால், தயாரிப்பாளர்களுக்கு சன் டிவி நிறுவனம் தினசரி ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும்.தொடர்பான செய்திகள்பு வாங்கிய பாடல் காட்சிகள், படக் காட்சிகள், சண்டை, நகைச்சுவை காட்சி கிளிப்பிங்குகளைசம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்றார்.

இயக்குநர் கேயாரும் சன் டிவியை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், சன் டிவி நிறுவனம் இதுவரைசம்பாதித்த வருமானம் திரைப்படங்களால் வந்ததுதான். படத் தயாரிப்பாளர்களிடம் வாங்கிய படங்களைமுறையின்றி அனைத்துச் சானல்களிலும் ஒளிபரப்பி திரையரங்குகளுக்கு பெரும் வசூல் பாதிப்பை ஏற்படுத்தி,பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 90 சதவீத தயாரிப்பாளர்கள் சன் டிவியால்நஷ்டமடைந்துள்ளனர்.

சினிமாவில் வளர்ந்த சன் டிவி, எங்களை நசுக்கப் பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம்? எங்களை அழிக்கநினைத்தால், வினியோகஸ்தர்கள், நடிகர்கள், திரையரங்க அதிபர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகையும்திரட்டி சன் டிவியை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் முடிவை நாங்கள் எடுக்க நேரிடும் என்றார்.

சன் டிவிக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கம் மிகக் கடுமையான முடிவை எடுத்திருப்பது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் அதிமுக இருக்குமோ என்ற சந்தேகத்தில் திமுக உள்ளது.

23ம் தேதி நடிகர் சங்கம் ஆலோசனை: சன் டிவிக்கு எதிராக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில்அதுதொடர்பாக முக்கிய முடிவு எடுக்க தென்னிந்திய நடிகர் சங்கம் வருகிற 23ம் தேதி கூடி ஆலோசனை நடத்தவுள்ளது.

இதற்காக 23ம் தேதி கூடும் அவசரக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்க முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதா, இல்லையா என்பது குறித்து ஆலோசனை நடத்திமுடிவு எடுக்கப்படவுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஆதரவாகவே நடிகர் சங்கமும், முடிவெடுக்கும் எனத் தெரிகிறது. இதனால் சன் டிவிக்கு எதிராகஒட்டுமொத்த திரையுலகும் திரளும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X