For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாயுடு மூலம் முயன்றும் தோற்ற ஜெ!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதிமுகவை அதிமுகவுக்குள் இழுக்கும் வேலையில் முதல்வர் ஜெயலலிதா, தோழி சசிகலா ஆகியோரே நேரடியாகக்களத்தில் இறங்கியும் தோல்வியே கிடைத்துள்ளது.

இதற்காக முன்னாள் ஆந்திர முதல்வரும் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பருமான சந்திர பாபு நாயுடுவின்உதவியும் கோரப்பட்டது.

அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து-மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் ஆகியோர் மூலமாகமேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஓரளவுக்குப் பலனளித்தாலும் ஜெயலலிதா- வைகோ சந்திப்புக்கு அவர்களால்ஏற்பாடு செய்ய முடியவில்லை.

முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த எல்.கணேசன், சசிகலாவின் உறவினர் கூட. காளிமுத்துவும் முக்குலத்தோர்சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் கணேசனுடான பேச்சுவார்த்தைகள் விறுவிறுவென முன்னேறின.

ஆனால், பொடா கைதுக்கு ஜெயலலிதா தரப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டால் தான், கூட்டணிக்கு வர முடியும் எனவைகோ கூறியதை அதிமுக தரப்பு ஏற்க மறுத்தது.

இதனால் அடுத்த கட்டத்துக்கு பேச்சுவார்த்தை நகர்வதில் சிறிய சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் காளிமுத்து.எல்.கணேசன், உளவுப் பிரிவு ஆகியோரை எல்லாம் ஒதுக்கிவிட்டு வைகோவை கூட்டணிக்குள் கொண்டு வரும்வேலையை ஜெயலலிதா, சசிகலாவே நேரடியாக ஹேண்டில் செய்ய ஆரம்பித்தனர்.

நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர் எஎன்ற வகையில் வைகோவுக்கு நெருக்கமான சந்திரபாபு நாயுடுவின் உதவியைஅதிமுக தரப்பு நாடியது. அவர் வைகோவுடன் பேசி வந்தார்.

மதிமுகவுக்கு 35 இடங்கள் வரை தரத் தயார் என்றும், தேர்தல் செலவு உள்ளிட்ட விஷயங்களும் அதிமுகவால்கவனித்துக் கொள்ளப்படும் என்றும் உறுதிமொழி தரப்பட்டது.

தலைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதால் அப்பல்லோவில் தொடர்ந்து சிகிச்சைபெற்று வரும் காளிமுத்துவும் தொடர்ந்து கணேசனுடன் பேசி வந்தார்.

காளிமுத்துவை சந்திக்க வைகோ அப்பல்லோவுக்கு வருவது, அப்போது ஜெயலலிதாவும் அங்கு வருவது,அங்கேயே வைகோ-ஜெயலலிதா சந்திப்புக்கு ஏற்பாடு செய்வது என்று திட்டமிட்டு காய் நகர்த்தினார் காளிமுத்து.

மா.செக்களுடன் வைகோ ஆலோசனை:

இந் நிலையில் இரு தினங்களாக மாவட்டச் செயலாளர்களுடன் வைகோ தனித்தனியே ஆலோசனை நடத்தினார்.இதில் பாதிப் பேர் அதிமுக கூட்டணியை விரும்புவதாகக் கூறினாலும், தொண்டர்கள் மத்தியில் அதிமுககூட்டணிக்கு ஆதரவில்லை என்பதை வைகோ உணர்ந்தார்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அதிக சீட் கிடைக்கும், பணம் கிடைக்கும், போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்என்ற சுய நலத்தினால் தான் அந்தக் கூட்டணியை கட்சி நிர்வாகிகள் ஆதரிப்பதாகவும், இதற்கு கொள்கைரீதியில்காரணம் ஏதும் இல்லை என்பதை முன் வைத்து திமுக ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் விவாதம் செய்ய குழம்பிப்போனார் வைகோ.

கடைசியில், தொண்டர்களின் கருத்தை அறிய அவர் கட்சிக்குள் ரகசியமாய் ஒரு சர்வே நடத்தியதாகவும் அதில்பெரும்பாலான தொண்டர்கள் திமுக கூட்டணியில் தொடரவே விரும்பியதாகவும் தெரிய வரவே அதிமுககூட்டணிக்கு கும்பிடு போட்டார் என்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X