போலீஸ் முன் தீக்குளித்த பிக்பாக்கெட் கேடி
சென்னை:
தன்னைத் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிக்பாக்கெட் புகழ் கேடி ஒருவன் சென்னை போலீஸ்கமிஷ்னர் அலுவலகம் எதிரே தீக்குளித்தார்.
இந் நிலையில் இவரை ஒருவர் தாக்கிவிட்டாராம், அது தொடர்பாக புகார் கொடுக்க காவல் நிலையத்துக்குப்போன மணியை போலீசார் விரட்டிவிட்டுள்ளனர்.
இதனால் எரிச்சலான மணி கையில் மண்ணெண்ணெய் கேனுடன் போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் வந்தார்.வாசலில் நின்று உடலில் எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதைப் பார்த்த கமிஷ்னர் அலுவலக போலீசார் ஓடி வந்து தீயை அணைத்தனர். அதற்குள் 40 சதவீதம் எரிந்துபோய்விட்டார் மணி. இதையடுத்து அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அவர் உடல் நிலை தேறி வருவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
ரயில் முன் குதித்து தற்கொலை:
பட்டு வளர்ச்சித்துறையில் பணியாற்றி வந்த மூத்த ஊழியர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
கடலூரைச் சேர்ந்த பஷீர் அகமத் என்ற 56 வயதான அவர் ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார்.
உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் ஊருக்குத் திரும்பி வந்தார். மாயவரம்-சென்னை ரயில் முன் பாய்ந்துதற்கொலை செய்து கொண்டார்.