• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் வீட்டுக்குள் ஊடுறுவ முயன்ற இளம் பெண்கள், வாலிபர் கைது!

By Staff
|

டெல்லி:

பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ள பிரதமர் மன்மோகன் சிங் வீட்டுவளாகத்திற்குள் ஊடுறுவ முயன்ற தனியார் விமான நிறுவன பணிப்பெண்கள் உள்பட3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Yogitha
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம், டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ளது. பலத்தபாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ள இந்த வீட்டில் 3 அடுக்கு பாதுகாப்பு உண்டு.

முதல் அடுக்கைத் தாண்டி பத்திரிக்கையாளர்களால் கூட வீட்டு வளாகத்திற்குள் செல்லமுடியாது. சாலையோரம் உள்ள புல்வெளியில்தான் அவர்கள் காத்திருக்க வேண்டும்.

பிரதமர் வீட்டுக்குள் செல்ல வேண்டும் என்றால் 3 கட்ட பாதுகாப்பு வளையத்தைத்தாண்டித்தான் செல்ல வேண்டும். டெல்லி போலீஸார், அதிரடிப் படையினர், உளவுப்பிரிவினர், ராணுவத்தினர் என பல படையினரும் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் நேற்று இரவு பிரதமர் வீட்டில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.இதற்காக அமைச்சர்கள் வந்து கொண்டிருந்தனர். வீட்டின் முன்பு உள்ள புல்வெளியில்செய்தியாளர்கள் கூடியிருந்தனர்.

அப்போது கருப்பு நிற சொனாட்டா கார் படு கூலாக, எந்தவிதத் தடையும் இல்லாமல்பிரதமர் இல்லத்தின் முதல் நுழைவாயில் வரை வந்தது.

அங்குதான் வழக்கமாக அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் இறங்கி இன்னொருகாரில் ஏறி உள்ளே செல்வார்கள். ஆனால் அந்த கருப்பு நிறக் கார் எந்தவிதத்தடையும் இல்லாமல் முதல் நுழைவாயில் வரை வந்தது அங்கு திரண்டிருந்தபத்திரிக்கையாளர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

காரணம் அந்தக் காரை வழியில் இருந்த பாதுகாப்புப் படையினர் தடுத்துநிறுத்தவில்லை.

முக்கிய நுழைவாயிலை அந்த கார் அடைந்ததும் பாதுகாப்புப் படை வீரர்கள் ஓடிவந்தனர். நீங்கள் யார் என்று அதிகாரிகள் கேட்க, போதையில் இருந்த இருபெண்களும், ஒரு ஆணும், பிரதமரை பார்க்க வேண்டும் என்றனர்.

Veena
முன் அனுமதி இல்லாமல் பார்க்க முடியாது என்று கூறி அந்த காரை பாதுகாப்புவீரர்கள் திருப்பி அனுப்பினர்.

இதையடுத்து காரைத் திருப்பிய அந்தப் பெண், பத்திரிக்கையாளர்கள் கூடியிருந்தபகுதிக்கு வந்து ஒரு பிளையிங் கிஸ் கொடுத்துவிட்டு காரை ஓட்டிச் சென்றார்.

சம்பவத்தை பரபரப்பாக பார்த்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள் தங்கள்கார்களில் விரட்டிச் சென்று அந்த சொனாட்டா கரைை நிறுத்தினர்.

பின்னர் அதிலிருந்த பெண்களிடம் பேசியபோது, அவர்களிடம் பரபரப்போ, தவறுசெய்துவிட்ட பயமோ சிறிதும் இல்லை.

சின்னப் புள்ளைகள் மாதிரி இளித்துக் கொண்டே பதில் தந்தனர். அதில் ஒருபெண்ணின் பெயர் யோகிதா. இவர் ஏர் சகாராவில் ஏர் ஹோஸ்டராக உள்ளாராம்.

இன்னொரு பெண்ணின் பெயர் வீணா. இவரும் ஏர் சகாரா ஏர் ஹோஸ்டஸ் தானாம்.இருவரும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர்கள். கூட இருந்த ஆணின்பெயர் இம்ரான். இவர் டெல்லியைச் சேர்ந்தவர்.

காரில் சும்மா டெல்லியை சுற்றிக் கொண்டிருந்தபோது பிரதமர் வீட்டுக்குப்போகலாமே என்று யோசனை தோன்ற உள்ளே வந்துள்ளனர்.

Veena
இவர்களை பாதுகாப்புப் படையினர் தான் தடுத்து திருப்பி அனுப்பியிருக்க வேண்டும்.ஆனால், அவர்களது காரையும் தோற்றத்தையும் பார்த்து பெரிய இடத்துப் பிள்ளைகள்என்று நினைத்தார்களோ என்னவோ எந்த சோதனையும் நடத்தாமல் காரை உள்ளேஅனுமதித்துள்ளனர் பாதுகாப்புப் படையினர்.

நீங்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா என்று நிருபர்கள் கேட்டபோது,அப்படியா.. நாங்க என்ன செஞ்சோம். பிரதமரை பார்க்கணும்னு சொன்னோம்..உள்ளே போங்கன்னு சொல்லிட்டாங்க என்று பதில் தந்த அந்தப் பெண்கள், இப்போநாங்க என்ன செய்யனும் என்று நிருபர்களிடமே கேட்டனர்.

தெரியாம தப்பு பண்ணிட்டீங்க. முதல்ல உங்க அம்மா, அப்பாவை வரச் சொல்லுங்க.கூடவே வக்கீல்களையும் கூட்டிட்டு வரச் சொல்லுங்க என்று நிருபர்கள் அட்வைஸ்தந்து கொண்டிருந்தபோது டெல்லி போலீசாரின் வாகனங்கள் அரக்க பரக்க அங்குவந்து அந்தப் பெண்களையும் ஆணையும் சுற்றி வளைத்தன.

அவர்களைப் பார்த்தவுடன் எங்களை அரெஸ்ட் செய்யப் போறீங்களா என்று அந்தப்பெண்கள் கேட்க, போலீசாருக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. இல்லை சின்னவிசாரணை தான் என்று சொல்லி அவர்களை அழைத்துச் சென்றனர்.

நிருபர்களின் கார்கள் மடக்கிப் பிடித்த பின்னரே அந்தக் காரை டெல்லி போலீசார்வந்து சுற்றி வளைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூவரையும் சாாணக்யபுரி காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரித்தபோலீசார் பிரதமர் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக அவர்களை கைதுசெய்தனர்.

இதற்கிடையே, பிரதமர் இல்லத்தில் பாதுகாப்புக் குளறுபடிகள் ஏதும் இல்லை என்றுபிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. இதில் விசேஷம் என்னவென்றால், நாட்டின்பாதுகாப்பு நிலைமை குறித்து பிரதமர் தனது அமைச்சரவை சகாக்களுடன்ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோதுதான், அவரது வீட்டுக்கு வெளியேஇத்தனை களேபரங்களும் நடந்து கொண்டிருந்தன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X