• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான் இப்பிடி.. லட்சுமி அங்கே.. விளக்கிய ஜோசப்: கடுப்பான அச்சுதானந்தன்

By Staff
|

திருவனந்தபுரம்:

செய்திவாசிப்பாளர் லட்சுமியிடம் தான் குறும்பு செய்திருக்க வாய்ப்பே இல்லைஎன்பதை கை அசைவுகளுடன் ஜோசப் விளக்கியதால் முதல்வர் அச்சுதானந்தன்கடுப்பாகிவிட்டாராம்.

இதையடுத்தே அவரை உடனடியாக ராஜினாமா செய்யுமாறு அச்சுதானந்தன்உத்தரவிட்டார் என்கிறார்கள்.

செனனையிலிருந்து கொச்சிக்கு சென்ற கிங்பிஷர் விமானத்தில் பயணம் செய்தமுன்னாள் செய்தி வாசிப்பாளர், நடிகை லட்சுமி கோபகுமாரை பின் பக்கத்தில்இருந்து கையை விட்டு நோண்டியும் அவரது இடது மார்பகத்தை தொட்டும் செக்ஸ்குறும்பில் ஈடுபட்டு பதவியை பறி கொடுத்து நிற்கிறார் அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப்.

ஆரம்பத்திலிருந்தே இந்த விவகாரம் தொடர்பாக மறுத்து வந்தார் ஜோசப். எனக்குகையை சரியாக தூக்கக் கூடமுடியாது. நான் எப்படி குறும்பு செய்திருக்க முடியும்.அதுவும் விமானம் கிளம்பும்போது எள்லோரும் பெல்ட்டை போட்டுக் கொண்டுஅமர்ந்திருப்பார்கள். அப்புறம் எப்படி நான் லட்சுமியிடம் சேஷ்டை செய்திருக்கமுடியும் என்றெல்லாம் லாஜிக்காக கேள்வி கேட்டு வந்தார் ஜோசப்.

ஆனால் ஐஜி சந்தியாவின் அறிக்கை ஜோசப்பின் முகத்திரையை கிழித்து விட்டது.சந்தியாவின் அறிக்கையை வாங்கிப் பார்த்த முதல்வர் அச்சுதானந்தன்கோபமாகிவிட்டாராம்.

உடனடியாக நேற்று காலை ஜோசப்பை தனது வீ ட்டுக்கு கூப்பிட்டனுப்பினார்(ஆனால் தானாகவேதான் முதல்வரை பார்த்ததாக பின்னர் செய்தியாளர்களிடம்பொய் சொன்னார் ஜோசப்)

முதல்வர் வீட்டிலும் தனது காமெடியை தொடர்ந்துள்ளார் ஜோசப். முதல்வர்முன்போய் நின்ற ஜோசப்பிடம், சந்தியாவின் அறிக்கையைக் காட்டி இப்போது என்னசொல்லப் போகிறீர்கள். நான் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஎதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டுள்ளார் அச்சுதானந்தன்.

ஆனால், அந்த நிலையிலும் கூட கொஞ்சமும் அசராத ஜோசப், நான்சொல்வதைமுதலில் கேளுங்க என்று கூறியபடியே தனது பாடி லாங்குவேஜ்மூலம்முதலவரிடம் மீண்டும் தனது விளக்கத்தை எடுத்து வைத்தார்.

நான் இப்படி உட்கார்ந்திருந்தேன். அவர் எனக்குமுன்னால் இப்படிஉட்கார்ந்திருந்தார். எனது கை இங்கே இருந்தது. இந்தக் கையை எடுத்துக் கொண்டுமுன் இருக்கையில் அமர்ந்திருந்த லட்சுமியின் இடது மார்பகத்தில் நான் எப்படிஎனது கையை வைத்திருக்க முடியும்.

எனது கையை அவ்வளவு தூரத்திற்கு நீட்டியிருக்க முடியுமா சொல்லுங்க என்றுமுதல்வரிடம் நேர்முக விளக்கம் கொடுக்கவே, கோபமடைந்து விட்டாராம்அச்சுதாதனந்தன்.

கோபமான குரலில், இதுமாதிரி முட்டாள்தனமாக பேசிக் கொண்டிருக்காதீர்கள்.நீங்களேராஜினாம செய்துவிடுங்கள், என்னை நடவடிக்கை எடுக்க வைக்காதீர்கள்என்று காட்டமாக பேசி ஜோசப்பை அனுப்பி வைத்தாராம்.

அதன் பின்னர் வேறு வழியேஇல்லை என்பதால் தான் ராஜினாமாகடிதத்தைகொடுத்துள்ளார்.

தொடர்பான செய்திகள்பு கடந்த காங்கிரஸ் அமைச்சரவையில், அமைச்சராக இருந்தகுன்னாலிக்குட்டி, ஐஸ்க்ரீம் பார்லர் பாலியல் வழக்கில் சிக்கி பதவியைப் பறிகொடுத்தார்.

அதற்குமுன்பு ஈ.கே.நாயனார் அமைச்சரவையில் இருந்த நீலலோகித தாசன் நாடார்என்ற அமைச்சர், ஐ.ஏ.எஸ். அதிகாரி நளினி நெட்டோவிடம்முறைகேடாக நடக்கப்பாய் பதவியைப் பறிகொடுத்தார்.

இப்போது ஜோசப் பதவியை இழந்து, மானத்தையும் இழந்து நிற்கிறார்.

அதற்கும் முன்பாக பி.டி.சாக்கோ என்ற கேரள அமைச்சர் சென்ற கார் நடு இரவில்விபத்தில் சிக்கியது. போலீஸார் போய் பார்த்தபோது காருக்குள் ஒரு பெண்இருந்தார். அந்த சர்ச்சையைத் தொடர்ந்து சாக்கோ பதவி விலகினார். இது நடந்தது1964ம் ஆண்டு.

லட்சுமி மகிழ்ச்சி:

இதற்கிடையே அமைச்சர் ஜோசப் பதவி விலகியுள்ளதை, பாதிக்கப்பட்ட லட்சுமிகோபகுமார் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார். ஜோசப் ராஜினாமாவைத் தொடர்ந்துலட்சுமியை சந்திக்க பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் அவரது சென்னைநுங்கம்பாக்கம் வீட்டுக்கு விரைந்தனர்.

ஆனால் அவர்கள் வருவதை தெரிந்து கொண்ட லட்சுமி தனது கணவருடன் வீட்டைபூட்டி விட்டு வெளியேறி விட்டார். ஓணம் பண்டிகையையொட்டி மலையாளிகிளப்புக்குச் சென்ற லட்சுமி, அங்கிருந்த மலையாளிகளிடம் தனது மகிழ்ச்சியைபகிர்ந்து கொண்டாராம்.

மேலும் மலையாளப் பத்திரிக்கையின் பெண் நிருபர் ஒருவரிடம் மட்டும் லட்சுமிபேசியுள்ளார். ஜோசப் விலக வேண்டும் என்றோ, அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றோ நான் விரும்பியதில்லை. இதுபோன்ற சம்பவங்கள் இனியும்நடக்கக் கூடாது எனபதே எனது விருப்பம். பொது இடங்களில் பெண்களுக்குபாதுகாப்பு வேண்டும்.

இன்று பொது இடங்களில் பெண்கள் பல்வேறு செக்ஸ் கொடுமைகளுக்குஆளாகின்றனர். ஐ.ஜி. சந்தியா நிர்ப்பந்தங்களுக்கு வளைந்து கொடுக்காமல்நேர்மையாக விசாரணை நடத்தினார். இது மகிழ்ச்சி தருகிறது என்று அந்த பெண்நிருபரிடம் கூறியுள்ளார் லட்சுமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X